நான் யார் மனதையும் நோகடிக்க மாட்டேன். ஆனால், நான் வில்லன் நடிகர் என்பதால் என்னைக் குறைத்து மதிப்பிட முடியாது என்று மாற்றுத் திறனாளிகள்
குறித்த பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் ராதா ரவி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சமீபத்தில் திமுகவில் இணைந்த நடிகர் ராதா ரவி அரசியல் தலைவர் களை பற்றி விமர்சிக்கும் போது மாற்றுத் திறனாளி களுடன் ஒப்பிட்டு பேசிய பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
திமுகவின் மாநிலங் களவை உறுப்பினரான கனி மொழியும், தனது சமூக வலைத்தள பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தான் எப்படிப் பட்ட சூழ்நிலை யில் அவ்வாறு பேசினார் என்பது குறித்து பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த ராதா ரவி,
மாற்றுத் திறனாளர் களை கேவலமாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு குறிப்பிட வில்லை என்று கூறினார்.
சில குறிப்பிட்ட அரசியல் தலைவர் களை விமர்சிக்கும் போது, அவர்களைக் குறைமாதக் குழந்தைகள் போல் விமர்சித்தாக் கூறினார்.
சில தனிப்பட்ட நபர்களைக் குறித்துச் சொல்லும் போது, அதைத் தவறுதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
திமுக தோற்கும் என்று சொல்பவர்ள் குறைமாதக் குழந்தை களைப் போன் றவர்கள். அவர்கள் சொல்வதை வைத்து முடிவெடுக்க முடியாது, என்றார் ராதா ரவி.
குறைமாதக் குழந்தை களைப் போல நடித்துக் காட்டிய தால் நிறையப் பேர் தவறு தலாகப் புரிந்து கொண்டார்கள் என்றார்.
தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது என்றும், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வ தாகவும் கூறியுள்ளார்.
எதையும் பேசக் கூடாது, பேசக் கூடாது என்றால், எதைத்தான் பேசுவது என்று தெரிய வில்லை என அவர் அங்க லாய்த்தார்.
திருவள்ளுவரைச் சொன்னால் கூட அதில் சில தவறுகள் இருக்கலாம். ஆராய்ச்சி செய்து தான் பேச வேண்டும் என்று நகைச் சுவையுடன் குறிப் பிட்டார்.
நான் யார் மனதையும் நோகடிக்க மாட்டேன். ஆனால், கடுமையாகப் பேச வேண்டு மானால் பேசித் தான் தீருவேன், என்றார் ராதா ரவி.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இது தொடர்பாக வருத்தம் தெரிவி த்தாகக் கூறிய ராதா ரவி,
திமுகவின் மாநிலங் களவை உறுப்பினர் கனிமொ ழியிடமும் விளக்கம் அளித்தி ருப்பதாக தெரிவித்தி ருக்கிறார்.