ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் !

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் !
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் இன்று அதிகாலை 4 மணிக்கு வருமான வரித்துறை யினர் அதிரடியாக புகுந்தனர். 

அப்போது, வீட்டை விட்டு யாரும் வெளியே செல்லக் கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, பாதுகாப்பு பணிக்கு மத்திய பாதுகாப்பு படையினர் வரவழைக்கப் பட்டனர். 

அவர்கள் வீட்டின் கேட்டை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் இருந்தனர். 

வருமான வரித்துறை யினரின் திடீர் வருகையால் விஜயபாஸ்கர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, வீட்டில் இருந்த ஆவணத்தை விஜயபாஸ்கரின் உறவினர் ஒருவர் வெளியே எடுத்து வந்துள்ளார். இதனை சிஆர்பிஎப் படையினர் பார்த்து விட்டனர். 

உடனடி யாக அந்த ஆவணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது, அருகில் இருந்த விஜயபாஸ்கரின் கார் டிரைவர், அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். 

அவரை சிஆர்பிஎப் படையினர் துரத்தினர். கையில் வைத்திருந்த ஆவணத்தை மதில் சுவர் வெளியே அவர் வீசி விட்டார். 

அப்போது, வெளியில் இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர் அந்த ஆவணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். அவரை சிஆர்பிஎப் படையினரால் பிடிக்க முடிய வில்லை.

இந்நிலை யில், ஆவணத்தை வெளியே வீசிய விஜய பாஸ்கரின் கார் டிரைவரை சிஆர்பிஎப் படையினர் தடியால் சரமாரி யாக அடித்தனர். 
இதன் பின்னர் அவரை அழைத்துச் சென்று ஒரு அறையில் தங்க வைத்தனர். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப் படுகிறது.

விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியது.

இதனிடையே, விஜய பாஸ்கரின் கார் டிரைவரை தாக்கிய சிஆர்பிஎப் படையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 

அபிராமபுரம் காவல் நிலையத்தில் அமைச்சரின் ஆதரவாளர் முரளி என்பவர் புகார் அளித்துள்ளார். 
அந்தப் புகாரின் பேரில் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings