தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !

1 minute read
அ.தி.மு.க அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் !
கட்சியின் இணைய தளத்தில் இரட்டை இலை சின்னத்தை அகற்ற வில்லை என புகார் கூறப்பட்டு இருந்தது. 

கட்சியின் இணைய தளத்தில் இரட்டை இலை சின்னத்தை அகற்றாதது குறித்து ஏப்ரல் 6-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க உத்தர விட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியின் அ.தி.மு.க அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. கட்சி பெயரை தவறாக பயன் படுத்துவ தாகவும் குறிப்பாக சமூக வலை தளங்களில் இரட்டை இலை சின்ன த்தையும், 

அ.தி.மு.க. கட்சி பெயரையும் பயன்படுத்தி வருவதாக ஓ.பி.எஸ் அணியினர் புகார் கூறினர். அதற்கான ஆதாரங்களையும் இணைத்து தேர்தல் அணைய த்தில் வழங்கியுள்ளனர். 
இது குறித்து, தேர்தல் ஆணையம் அழைத்தால் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் நேரில் வந்து விளக்கம் அளிக்க தயாராக இருப்ப தாகவும் ஓ.பி.எஸ் அணி சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டு இருந்தது. 

அதன் பேரில், தினகரனு க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.
Tags:
Today | 14, March 2025
Privacy and cookie settings