தற்கொலைகளை தடுக்கிறதா ஃபேஸ்புக்?

ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டு விட்டு தற்கொலை கள் செய்து கொள்ளும் டிரெண்ட் சமீப காலமாக அதிகமாகி வருகிறது. 


4Chan என்ற இணைய தளத்தின் அட்மின் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்து விட்டு, யூடியூபில் லைவ் டெலிகாஸ்ட் செய்து கடைசியில் அனைவ ரையும் ஏமாற்றினார். 

சமீபத்தில் கூட ஃபுளோரிடாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஃபேஸ்புக்கில் லைவ் ஆன் செய்து விட்டு தனது தற்கொலையை அரங்கேற்றி யிருந்தார். 

ஃபேஸ்புக் மெஸெஞ்சர் வீடியோகால் மூலமாக காதலியுடன் பேசிக் கொண்டிருந்த காதலன், 

விளையாட்டுக் காக கயிற்றை கழுத்தில் மாட்டிய போது தவறிப் போய் தூக்காக மாறிப் போன கொடுமை தமிழகத் திலேயே நடை பெற்றிருக் கிறது. 

இவை யெல்லாம், நாம் அனுதினமும் இயங்கிக் கொண்டிரு க்கும் ஃபேஸ் புக்கிலேயே மற்றுமொரு கருப்புப் பக்கத்தில் நடை பெற்றுக் கொண்டிருக் கின்றன என்பதற்கு எடுத்துக் காட்டு. இப்படி இல்லாமல், 

தனிமையின் கோரத்தால் தற்கொலையை அணுகுபவர் களும் கணிசமான அளவில் இருப்ப தால் கடந்த பத்து வருடமாகவே தற்கொலை செய்து கொள்ள நினைப்ப வர்களைத் தடுத்து காத்துவருகிறது ஃபேஸ்புக். 

Save.org, National Suicide Prevention Lifeline, Forefront மற்றும் Crisis Text Line போன்ற அமைப்புகள் ஃபேஸ்புக்கு க்கு இந்த முயற்சி யில் உதவி வருகின்றனர். 

தங்கள் டெக்னாலஜி வளர வளர அத்துடன் இது போன்ற பாதுகாப்பு அம்சங் களையும் அப்டேட் செய்து வருகிறது. 

பெரும் பாலான லைவ் தற்கொலை முயற்சி களில் ஈடுபடுபவர் களை காப்பாற்ற முடியாமல் போவது 

தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதால் தான் என்பதைக் கண்டறிந்த ஃபேஸ்புக் இப்போது புதிய டூல்களை இதற்காக உருவாக்கி யிருக்கிறது. 

லைவ் வீடியோவிலோ அல்லது ஃபேஸ்புக் அப்டேட் மூலமாக தற்கொலை செய்து கொள்வதாக யாராவது அறிவித்தால் 

உடனே அவர்களை ரிப்போர்ட் செய்து அந்த லிஸ்டில் வரும் suicide or self-injury என்ற ஆப்ஷனை செலக்ட் செய்வதன் மூலம், 

குறிப்பிட்ட வர்களின் நண்பர்கள் மற்றும் அவர்களு க்கு அருகில் இருப்பவர் களுக்கு ஃபேஸ்புக்கின் Artificial Intelligence தகவல்களை அனுப்பு வதோடு 

அவர்களுக்கு உதவி கிடைக்கும் வரை பேசிக் கொண்டிரு க்கும் விதத்தில் இப்போது டிசைன் செய்யப் பட்டிருக் கிறது.
Tags:
Privacy and cookie settings