மத்திய ரிசர்வ் படையின் ஹெலிகாப்டர் விபத்து !

மத்திய ரிசர்வ் படையின் கமாண்டோக்கள் பயணித்த ஹெலிகாப்டர், சுக்மா மாவட்டம் அருகே மூன்று நாள்களுக்கு முன்னர் தரையிறங்கும் போது விபத்துக் குள்ளானது. 
மத்திய ரிசர்வ் படையின் ஹெலிகாப்டர் விபத்து !
இந்த விபத்து நடந்த போது எடுக்கப் பட்ட நேரடி வீடியோ காட்சி, தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

மூன்று நாள் களுக்கு முன்னர், சுக்மா மாவட்ட த்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்திய போது, மீட்புப் பணிக்குச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக் குள்ளானது. 

இதில், சிறப்பு ‘கோப்ரா’ கமாண்டோ படையினர் ஐந்து பேர் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது, தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக தரையில் மோதி விபத்துக் குள்ளானது. 

இதில், வீரர்கள் காயங் களுடன் மீட்கப் பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்னர் நடந்த இந்த விபத்தின் நேரடிக் காட்சி, வீடியோ வாகப் பதிவு செய்யப்பட் டுள்ளது. தற்போது இந்த வீடியோ, சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த விபத்து, தொழில் நுட்பக் கோளாறால் தான் ஏற்பட்டதா அல்லது தீவிர வாதத் தாக்குதல் முயற்சியா என்ற கோணங் களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings