தனது மகளுக்கு ‘அல்லாஹ்’ என்று பெயர் சூட்டுவதற்கு தடை விதித்த ஜொர்ஜிய மாநில அரசுக்கு எதிராக அமெரிக்க தம்பதியினர் வழக்கு தொடுத் துள்ளனர்.
இருபத்தி இரண்டு மாத குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க பொது சுகாதார திணைக்களம் மறுத்துள்ளது.
தனது மகளான சலிகா கிரேஸ்புல் லொர்ரைனா அல்லாஹ், பெயரற்றவராக மாற்றப் பட்டிருப்பது எற்றுக் கொள்ள முடியாதது என்று குழந்தை யின் பெற்றோரான எலிசபட் ஹன்டி மற்றும் பிலால் வோக் குறிப்பிட் டுள்ளனர்.
எனினும் குழந்தை யின் குடும்பப் பெயர் அல்லாஹ் அன்றி தாய், தந்தை அல்லது இரண்டும் இணைந்த பெயராக இருக்க வேண்டும் என்று மாநில அதிகாரிகள் குறிப்பிட் டுள்ளனர்.
அல்லாஹ் என்பது அரபு மொழியில் இறைவனை குறிக்கும் பெயராகும்.
இது தொடர்பில் குடும்பத்தினர் சார்பில் ஜோர்ஜியா வின் அமெரிக்க சிவில் விடுதலை ஒன்றியம் போல்டன் கவுன்டி உச்ச நீதிமன்ற த்தில் வழக்கு தொடுத் துள்ளது.
எனினும் கெளரவத்திற் காகவே அல்லாஹ் என்ற பெயரை சூட்டியதாக குழந்தை யின் தந்தை குறிப்பிட் டுள்ளார்.