கடந்த 7ம் தேதி தமிழகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் சாதாரணமாக நினைக்கப்பட்ட இந்த சோதனை, விசாரணைக்கு பின் வருமான வரித்துறை அதிகாரிகளையே பெரும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.
குறிப்பாக எம்.ஜி.ஆர் பல்கலை துணைவேந்தர் கீதா லட்சுமியின் லீலைகள் அதிகாரிகளை மூர்ச்சை யடைய வைத்துள்ளது.
சாதாரண மருத்துவராக இருந்த கீதாலட்சுமி சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இருந்த போது மாணவர் களிடம் லஞ்சமாக முதலில் வாங்கியது நல்லி சில்க்ஸ்,
ராஜ்மஹால் ஜவுளிக் கடைகளில் விற்கும் பட்டுப் புடவைகள் தான். மாணவர்களை வைவா, ஹவுஸ் சர்ஜன் போன்ற பிரிவுகளில் பாஸ் போட அப்போதே லஞ்சமாக பட்டுப் புடவைகளை வாங்கிக் கொண்டு இருந்தார்.
பின்பு ஒரு முக்கிய மானவரின் அறிமுகம் கிடைத்து அரசியல் வட்டத்தில் அவர் மூலம் நட்பு வளர்த்தவர், அமைச்சர் மூலம் மருத்துவக் கல்வி இயக்குநராகப் பதவியில் வந்து அமர்ந்தவர்,
ஒரு மருத்துவரு க்குப் பணி மாறுதலுக்கு பத்து லட்சம் கமிஷன் வாங்கினார். அவரது காலத்தில் ஆயிரக் கணக்கான மருத்துவப் பணி மாறுதல்கள் போடப் பட்டன.
தவிர மருத்துவத் துறையில் நடந்த பல்வேறு பணி நியமனத்தில் எல்லாமே பணம், பணம்தான். இவரிடமிருந்து தான் அமைச்சர் விஜயபாஸ்கரு க்குப் பணம் செல்லும்.
இதற்காக மருத்துவர் களின் சங்கத்தைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மதுரைக்கார மருத்துவர் ஒருவர், விழுப்புரம் மருத்துவர் ஒருவர் என மூன்று நபர்கள்தான் அமைச்சரு க்கும்,
கீதாலட்சுமி க்கும் இடைத் தரகர்கள் என்று அந்த மூன்று மருத்துவர்களின் பெயரை குறிப்பிட்டி ருந்தார்கள். அந்த இடைத் தரகர்களின் சொத்துகளே நூறு கோடிகளைத் தாண்டி இருக்கிறது.
அவர்களின் சொத்து விவரங்களும் இணைக்கப் பட்டுள்ளது” என்று குறிப் பிட்டவர் மீண்டும் கீதாலட்சுமியின் விஷயத்துக்கு வந்தார் அந்த அதிகாரி.
“கீதாலட்சுமி மருத்துவக் கல்லூரி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றதும் இனியாவது மருத்துவத் துறை நிம்மதியாக இருக்கு மென்று நம்பிய நிம்மதி யடைந்த அடுத்த நாளே அவருக்கு,
அடுத்த பதவியாக மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி கொடுத் தார்கள்.
அங்குச் சென்றவர் எம்.எஸ்., எம்.டி. படிக்கும் மாணவர் களுக்கு பாஸ் போட வேண்டு மென்று பிஜி படிக்கும் மாணவர்களிடம் தலை ஒன்றுக்கு சிலரிடம் இருபது லட்சம் ரூபாய் வாங்கி யிருக்கிறார்.
தனியார் மருத்துவக் கல்லூரி களின் பல்வேறு கோப்புகளில் கையெழுத்துப் போட லட்சக் கணக்கில் லஞ்சம் என வாங்கிக்
குவித்துக் கொண்டிருந்த ஒருவரைத் தான் சரியான நேரத்தில் வருமான வரித்துறை சோதனை செய்திரு க்கிறது.
விசாரணை க்கு அழைத்தால் வராமல் நீதிமன்றம் சென்று அங்கும் யாருக் காவது பணத்தை கொடுத்து தப்பிக்க பார்க்கிறார்.
இவர் சம்பாதித்த சொத்துகளை பல்வேறு இடங்களில் நிலம், எஸ்டேட், தங்கம், வெளி நாடுகளில் ஹோட்டல் என முதலீடு செய்துள்ளார்.
பட்டுச் சேலையில் ஆரம்பித்த அவரது லஞ்சப் பயணம் எங்கும் நிற்காமல் துணை வேந்தர் பதவி வரை வந்திருக்கிறது.
அப்பாவி மக்களின் ரத்தங் களையும், எண்ணற்ற அரசு ஊழியர்களின் வியர்வை களையும் உறிஞ்சியதால் விஜய பாஸ்கருக்கும், கீதா லட்சுமிக்கும் கடவுள் சரியான நேரத்தில் அம்பலப் படுத்தியிரு க்கிறார்.
ஆகையால் இதை வைத்து நீங்கள் புலன் விசாரணை செய்தால் இவர்களுடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் சிக்குவார்கள்.
இந்தக் கடிதத்தை அமலாக்கத் துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அனைத்து ஏஜென்சி களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என்று முடிந்தது அந்தக் கடிதம்” என்று அந்த அதிகாரி கூறியதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
பொதுவாக இதுபோல ரெய்டுகளின் போது அலுவலக த்துக்கு ஏகப்பட்ட கடிதங்கள் வருவதுண்டு.
ஆனால் இந்தக் கடிதத்தில் குறிப்பிட் டுள்ள அனைத்துத் தகவல் களையும் பார்த்தபோது ஆடிப் போயிரு க்கிறது வருமான வரித்துறை அலுவலகமே.
இதை வைத்தே அவரிடம் மூன்று மணி நேரங்களு க்கு மேலாக விசாரணை நடத்தப் பட்டதாக கூறப் படுகிறது.