ட்ராய் உத்தரவை ஏற்று சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை திரும்பப் பெறப் போவதாக அறிவித்து வாடிக்கை யாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது ஜியோ.
கடந்த வருடம் முதலே சலுகை மேல் சலுகையாக அள்ளிக் கொடுத்து வாடிக்கை யாளர்களை சம்பாதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்,
இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி முதல் அனைத்து இலவச சேவை களும் முடிவுக்கு வருவதாக அறிவித்தது.
அதன்படி, ஜியோ சேவை களைத் தொடர வேண்டு மானால் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் ஜியோ ப்ரைம் உறுப்பினர்கள், ப்ரைம் அல்லாத வர்கள் என இரு பிரிவுகளாக கட்டண ங்களும், அதற்கேற்ற சலுகை களும் அறிவிக்கப் பட்டன.
மார்ச் 31-ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர் களுக்கு கூடுதல் டேட்டா சலுகை களும் இருந்தன. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்குள் பலரும் ஜியோ ப்ரைமில் உறுப்பி னர்கள் ஆனார்கள்.
ஆனால் அதன் பின்னர் ஜியோ நிறுவனம், மார்ச் 31-ம் தேதிக்குள் ப்ரைம் திட்டத்தில் சேர வேண்டும் என்ற காலஅவகா சத்தை மேலும் 15 நாட்களு க்கு நீட்டித்தது.
அது மட்டுமின்றி, ஏற்கெனவே பணம் செலுத்தி ரீசார்ஜ் செய்த ப்ரைம் வாடிக்கை யாளர்களு க்கு மேலும் மூன்று மாதங் களுக்கு இலவச டேட்டா சலுகை களையும் அறிவித்தது.
மேலும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ப்ரைம் வாடிக்கை யாளர்க ளாக மாறி, ரீசார்ஜ் செய்பவர் களுக்கும் இந்த 'சம்மர் சர்ப்ரைஸ்' ஆஃபர் பொருந்தும் என அறிவித்தது.
இதன்படி ரூ. 303-க்கு ரீசார்ஜ் செய்பவருக்கு, ஒருநாளைக்கு ஒரு ஜி.பி அளவுக்கு 4G டேட்டா மற்றும் மற்ற ஜியோ சேவைகள் இலவசமாக வழங்கப் படும்.
இதைத் தொடர்ந்து பலரும் ஜியோ ப்ரைம் திட்டத்திற்கு கட்டணம் செலுத்தி வந்த நிலையில், நேற்று திடீரென ஒரு புது அறிவிப்பை வெளியிட் டுள்ளது ஜியோ நிறுவனம்.
அதில், "ஜியோ கடந்த மார்ச் 31-ம் தேதி சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை அறிவித்தது.
இதன்படி ரூ.303 அல்லது அதற்கு மேலாக ரீசார்ஜ் செய்யும் ப்ரைம் வாடிக்கை யாளர்களுக்கு, மேலும் மூன்று மாதங்கள் இலவச இன்டர்நெட் சேவையைத் தொடரலாம் என அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால் இன்று தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய மான ட்ராய், இந்த சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரைக் கை விடும்படி கேட்டுக் கொண்டு ள்ளது.
அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களில் இந்த ஆஃபரை நிறுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட் டுள்ளது.
அதே சமயம், ஏற்கெனவே இந்த ஆபரில் இணைந் தவர்கள், தடையின்றி தொடரலாம்" என அறிவித் துள்ளது.
எழும் சந்தேகங்களும், பதில்களும்!
இதுவரை ரூ.303 மற்றும் அதற்கு மேலாக ரீசார்ஜ் செய்தவர் களுக்கு, இந்த ஆஃபர் கிடைக்குமா என்பதற்கு ஜியோ தெளிவாகப் பதில் கூறியி ருக்கிறது.
ஏற்கெனவே அறிவித்தபடி, வாடிக்கை யாளர்களுக்கு மூன்று மாதங் களுக்கு இலவச கால் சேவை, 1ஜிபி இணைய சேவை வழங்கப் படும்.
அதே சமயம் ப்ரைம் உறுப்பி னராக மட்டும் இருந்து கொண்டு, இனிமேல் ரூ.303 கட்டணம் செலுத்து பவர்களுக்கு இந்த ஆஃபர் பொருந்தாது.
Regulator advises Jio to withdraw 3 month complimentary offer. pic.twitter.com/Hva86XN66b— Reliance Jio (@reliancejio) April 6, 2017
ஆனால், சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபருக்கான கடைசி நாள் இன்னும் அறிவிக்கப் படாததால், ஜியோ அதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் வரை, அந்த பேக் ரீசார்ஜ் செய்ய முடியும் என்றே சொல்லப் படுகிறது.
அதே சமயம், இதற்கு பதிலாக ஜியோ கூடிய விரைவில் வேறு மாற்று சலுகைகள் ஏதேனும் அறிவிக் கலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏற்கெனவே அறிவிக்கப் பட்ட கட்டண விவரங்கள் மற்றும் டேட்டா பேக்குகள் மட்டுமே உங்களுக்கு பொருந்தும். இன்னும் ப்ரைம் வாடிக்கை யாளர்களாக மாறாதவர் களுக்கும் இதேதான்.
மற்ற நிறுவன ங்களின் டேட்டா பேக் விலை மற்றும் அளவு களோடு ஒப்பிடும் போது ஜியோவின் இலவச சேவைகள் கவர்ச்சி கரமாக இருந்தது.
ஆனால் தற்போது அவற்றிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத் துள்ளது ட்ராய்.
Tags: