எலிசபத் மகாராணியின் படம் பொறிக்கப்பட்ட 4 மில்லியன் டொலர் பெறுமதியான மிகப்பெரிய தங்க நாணயம் ஜெர்மனி அருங்காட்சியகம் ஒன்றில் திருடப்பட்டுள்ளது.
பெரிய பனை இலை என்ற பெயர் கொண்ட இந்த கனேடிய நாணயத்தில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதி என குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும் 100 கிலோ கிராம் சுத்தமான 24 கரட் தங்கம் கொண்ட இந்த நாணயத் தின் தற்போதைய பெறுமதி அதனை விட மிக அதிகமாகும்.
பெர்லின் பொடே அருங்காட்சியத்தில் இரவு வேளையில் இந்த நாணயம் திருடப்பட்டுள்ளது. எனினும் அபாய எச்சரிக்கை அமைப்பை தாண்டி அதிக எடையுடனான அரை மீற்றர் நாணயத்தை திருடர்கள் எப்படி சுமந்து சென்றார்கள் என்று தெரியவில்லை.
கடந்த திங்கட் கிழமை அதிகாலை வேளையில் இந்த திருட்டு இடம் பெற்றிருப் பதாக சந்தேகிக்கப் படுகிறது.
இந்த நாணயம் ஒருவரால் சுமக்க முடியாத எடை கொண்ட தாகும். திருடர்கள் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தி ருப்பதாக பொலிஸார் சந்தேகிக் கின்றனர்.