டெல்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் நரேஷிடம் இருந்து 50 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதனால் டி.டி.வி. தினகரனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் லஞ்சம் தொடர்பான வழக்கில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர் கைதைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரனிடம் விசாரணை தீவிரப் படுத்தப் பட்டது.
ஏப்ரல் 18-ம் தேதி, டெல்லியில் உள்ள ஹோட்டலில் இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரை காவல் துறையினர் கைது செய்ததோடு, அவரிட மிருந்து 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர்.
அவரிடம் நடத்திய விசாரணை யில், இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணைய த்துக்கு லஞ்சம் கொடுக்க, டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்த தாகத் தெரிவித்தார்.
இதை யடுத்து, டி.டி.வி.தினகரனை காவல் துறையினர் கைது செய்தனர். டி.டி.வி.தினகரனை ஐந்து நாள் காவலில் எடுத்த டெல்லி காவல் துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சென்னை ராஜ்பவனில் உள்ள மத்திய அரசு விடுதி மற்றும் அடையாரில் உள்ள தினகரனுடைய வீட்டில் வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கு இடையில் டெல்லியில் ஹவாலா ஏஜெண்ட எனக் கூறப்படும் நரேஷ் இரு தினங் களுக்கு முன்னர் கைது செய்யப் பட்டார்.
அவரிடம் தீவிரமாக விசாரணை நடை பெற்றது. தற்போது அவரிடம் இருந்து ஹவாலாப் பணம் 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
தரகர் சுகேஷிடம் கொடுப்ப தற்காக அந்தப் பணம் கொண்டு வரப்பட் டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.