ஹெட்போன் மாட்டி கொண்டு தண்டவாளத்தில் சென்ற 3 பேர் ரயில் மோதி பலி !

பீகார் மாநிலத்தில் காதில் ஹெட்போன்கள் மாட்டிக் கொண்டு தண்ட வாளத்தில் நடந்து சென்ற 3 நண்பர்கள் புகையிரதம் மோதுண்டு உயிரிழந் துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹெட்போன் மாட்டி கொண்டு தண்டவாளத்தில் சென்ற 3 பேர் ரயில் மோதி பலி !
வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக் கூடாது, செல்போன் பேசிக் கொண்டு தண்ட வாளத்தை கடந்து போகக் கூடாது 
சார்ஜரில் போட்டுக் கொண்டு பேசக் கூடாது என செல்போன் பிரியர்களுக்காக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

ஆனாலும், பல சமயங்களில் இந்த ஆலோசனை களை மீறி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

அவ்வகையில், பீகார் மாநிலத்தில் மூன்று பேர், புகையிரதம் வரும் பாதை என்பதையும் மறந்து தண்ட வாளத்தில் நண்பர்கள் சென்ற போது உயிரை இழந்து ள்ளனர்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நயாநகர் ரெயில் நிலையம் அருகே மூன்று நண்பர்கள் காதில் ஹெட்போன் களை மாட்டிக் கொண்டு தண்ட வாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் பின்னால் ஒரு புகையிரதம் வேகமாக வந்துள்ளது. ஆனால், ஹெட்போன்கள் மாட்டியி ருந்ததால் மூன்று பேரும் புகையிரதம் வருவதை உணர முடியாமல் போனது.
இதனால் மூன்று பேரும் புகையிரதம் மோதுண்டு உயிரிழந் துள்ளனர்.
இந்த விபத்து பற்றி ஹசன்பூர் காவற்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புகையிரதம் அடிபட்டு இறந்த மூன்று பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு உறவினர் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Tags:
Privacy and cookie settings