வாட்ஸ் அப்பில் தடிமன் எழுத்துகளை எழுதுவது எப்படி?

1 minute read
குறுஞ் செய்திகளை அனுப்பிய காலத்தை கடந்து, நவின தொழில் நுட்பத்தால், செல்பேசி வழி தகவல் பரிமாற்றம் எளிதாக்கப்பட்டு விட்டது.
வாட்ஸ் அப்பில் தடிமன் எழுத்துகளை எழுதுவது எப்படி?
இன்று செல்பேசியில் உலகளாவிய தகவல் பரிமாற்ற த்திற்கு வாட்ஸ்அப் மிக முக்கிய பங்காற்று கிறது.

எழுத்து களாகவும், படங் களாகவும், ஒளி, ஒலி வடிவிலும் தகவல் களை எளிதாக அனுப்பும் வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது.

தற்போது புதிய வரவாக, எழுத்து களாக அனுப்பும் தகவல் களுக்கு மெரு கூட்டும் விதமாக தடிமன், சாய்ந்த, குறுக்கு கோடிட்ட எழுத்து களையும் அனுப்ப முடியும்.

இதற்கான அறிவிப்பை அண்மையில் அறிவித்த வாட்ஸ் அப், தனது புதிய பதிப்பில் சேர்த்து பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. 

ஐஓஎஸ் இயங்கு தளங்களில் இயங்கும் வாட்ஸ் அப்பில் புதிய வசதிகளை பயன் படுத்தலாம்.
மற்றசெல் பேசிகளில் www.whatsapp.com அல்லது play.google.com என்ற இணைப்புக்கு சென்று வாட்ஸ் அப் 2.12.560 என்ற பதிப்பை பதிவிறக்கி பயன்படுத்தலாம். 

அதாவது பீட்டா எனப்படும் சோதனை பதிப்பில் இருந்து புதிய வசதிகளை பயன் படுத்தலாம்.

சரி. இப்போது பதிவிறக்கிக் கொண்ட வர்கள், எப்படி வித விதமான எழுத்து களில் தகவல் களை அனுப்புவது என்று கேட்கிறீர்களா..?

கீழ்காணும் முறையில் எழுத்துகளை தட்டச்சு செய்தால் போதும். தடிமன், சாய்வு, குறுக்கு கோடு உள்ளிட்டவை கிடைத்து விடும்.

தடிமன் : *தடிமன்*

சாய்வு : _சாய்வு_

தடிமன்சாய்வு : _*தடிமன்சாய்வு*_

குறுக்குகோடு : ~குறுக்குகோடு~

அதாவது ~_* ஆகிய குறியீடு களை பயன்படுத்தி, எழுத்தை அலங்கரி க்கலாம்.
நீங்கள் அனுப்பும் மேம்படுத்தப் பட்ட எழுத்து களை பெறுபவர் களும், வாட்ஸ் அப்பின் புதிய பதிப்பிற்கு மாறி யிருக்க வேண்டும். இல்லை யென்றால், குறியீடு களாக தான் தெரியும்.

அண்மைக் காலமாக, வாட்ஸ் அப்பில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப் பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings