அகில இந்திய தலித் பெண்கள் அமைப்பின் ஹரியானா மாநில ஒருங்கிணைப் பாளர் மனிஷா மாஷால். இவர் ஜாதி எதிர்ப்பு போராளி, பேச்சாளர் மற்றும் பாடகி.
ரோகித் வெமுலாவைப் போல் நானும் சிறு வயதில் இருந்தே ஜாதிய ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளேன் என்ற இவரின் கடிதவரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
மனிஷா தான் கடந்து வந்த பாதை பற்றியும், இந்தியாவில் கல்வி நிலைய ங்களில் நடைபெறும் ஜாதியக் கொடுமை பற்றியும் கடிதமாக எழுதி யுள்ளார்.
அதில் ‘நான் ஹரியானா மாநிலத்தின் குக்கி ராமத்தைச் சேர்ந்தவள். வாழ்வில் நிறைய சவால்களை எதிர் கொண்டு இந்நிலைக்கு வந்துள்ளேன்.
என் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறை பட்டதாரி. பெண் கல்வியில் இளங்கலை, முதுகலை பட்டம் படித்துள்ளேன்.
ரோகித் வெமுலாவின் நீதிக்கானப் போராட்டம் முற்றுப் பெற வில்லை. தொடர்கிறது. ரோகித் வெமுலாவின் தற்கொலையைப் பற்றி கேட்ட போது என் இதயம் உடைந்தது போல் இருந்தது.
வெமுலாவைப் பற்றிய தேடலில் அவரது பலம் மற்றும் அறிவாற் றலால் பெரிதும் கவரப்பட்டேன்.
ரோகித் வெமுலாவைப் போன்ற திடமான, உறுதியான மனம் கொண்ட வர்கள் தற்கொலை செய்தது ஆச்சரியம் அளிக்கிறது.
இது ரோகித்தின் கோழைத் தனம் இல்லை. இந்தியக் கல்வி நிலையங் களில் நடைபெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.
நடைபெற்று வருகின்றன என்பதையேக் காட்டுகிறது. எனக்கு ரோகித்தின் கதை நன்றாகத் தெரியும் ஏனென்றால் என்னுடையக் கதையும் அதுவே.
நானும் படிக்கும் போது நிறைய ஜாதிய பிரச்னை களை, சவால்களை, ஒதுக்குதல் களை எதிர் கொண்டுள்ளேன். அச்சமய ங்களில் எனக்கும் செத்து விடலாம் போல் தான் இருந்தது.
நமது நாட்டில் நிலவும் கல்வி அமைப்பில் நிறைய ஜாதீய வன்முறைகள் நடை பெறுகிறது. அதில் நானும் பாதிக்கப் பட்டுள்ளேன்.
மக்கள் அடிக்கடி கல்வி நிலையங்களில் ஜாதிய ரீதியான இடஒதுக்கீடு அவசியம் தானா என்றும், இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப் படுகின்றனர் என்றும்,
கீழ்மட்டத் தில் உள்ளவர்கள் தகுதி யில்லாமல் வருகின்றனர் என்றும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படியான விவாதத்தில் பங்கேற்ப வர்களிடம் நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்.
கீழ்மட்டத்தில் இருக்கின்ற மாணவர் களுக்கு எந்த மாதிரியான கல்வி கிடைக்கிறது? என்பதை இவர்களால் சொல்ல முடியுமா?
கல்வி நிலையங் களில் கிடைக்கும் காயங்கள் மற்றும் அவமானங் களால் கீழ்மட்டத்தில் இருக்கின்ற தலித் மாணவர்கள் வெகு விரைவில் தூக்கி வீசப்படும் சூழல் இருப்பது இவர்களு க்குத் தெரியுமா? எனக் கேட்கிறேன்.
எனது கேள்விகளுக்கு நேர்மையாக விடையளித்து விட்டு, சமத்துவத்தை மலரச் செய்த பின்னர் இவர்கள் இடஒதுக்கீடு பற்றி விவாதம் நடத்தட்டும்.
ஜாதியக் கொடுமை என்பது ஏதோ மேல்நிலைக் கல்வியில் மட்டும் நிகழ்வது அல்ல. மனிதன் பிறக்கும்போது இருந்தே துவங்குகிறது.
நான் சிறுமியாக மழலையர் பள்ளியில் படிக்கும்போது, என் ஆசிரியர் நீயெல்லாம் ஏன் பள்ளிக்கு வருகிறாய்? போய் கடைசி பெஞ்சில் உட்காரு எனக் கத்துவார்.
அதோடு, முதல் பெஞ்சில் உட்கார்ந்து விட்டால் நீ பெரிய வால்மீகி! படிக்க வந்து விட்டாய்!
புல்லறுக்கப் போக வேண்டியது தானே? என அலட்சிய மாகக் கேட்பார். இது மாதிரி நிறைய சூழல்களை எதிர்கொண் டுள்ளேன்.
என் சமூகத்தை சேர்ந்தவர்கள் எல்லாரும் விவசாயக் கூலிகளாக இருந்தனர். நானும் அப்படியே இருக்க வேண்டும் என்பதேயே இந்தச் சமூகம் வலியுறுத் துகிறது.
அந்த சிறுவயதில் சமூகத்தில் என்ன நடக்கிறது? என்பது பற்றி ஏதும் தெரியாது. வால்மீகி என்றால் ஏதோ தவறான சொல் என்றே என் மனதில் பதிந்திருந்தது.
பள்ளிக் காலத்தில் இதைவிட இன்னும் கொடுமையை அனுபவித் துள்ளேன். எந்த ஆசிரியர் களும் என் பெயரான மனிஷா என அழைத்தது இல்லை. ஜாதியின் பெயரைக் கொண்டே அழைப்பார்கள்.
ஒரு நாள் நான் வகுப்புக்குச் செல்ல வில்லை. மறுநாள் ஆசிரியர் வராத உயர் வகுப்பினரை ஒன்றும் சொல்லாமல், என்னை மட்டும் கேவலமாக நடத்தினார்.
ஏன் என்னிடம் மட்டும் இப்படி ஏற்றத் தாழ்வுக் காட்டுகிறீர்கள்? எனக் கேட்டேன்? கோபமடைந்த ஆசிரியர் என் புத்தகப் பையை வெளியே எறிந்து இனிமேல் வகுப்புக்கு வரக்கூடாது என சொல்லி விட்டார்.
இருந்தும், நான் மனம் தளராமல் வகுப்புக்கு வெளியே அமர்ந்து கவனித்து, படித்து தேர்வு எழுதினேன். இருந்தபோதும், அந்த ஆசிரியர் என்னை பெயிலாக்கி விட்டார்.
தலித் குழந்தைகள் துவக்கக் கல்வி யிலேயே என்னைப் போல் கடுமையான ஜாதிய தாக்குதலுக்கு ஆளாகும் போது எப்படி இவர்களால் இடஒதுக்கீட்டை பெற இயலும்?.
மேல் நிலைக் கல்வி முடிந்து, கல்லூரியில் சேர நினைத்தேன். கல்லூரி செல்வதற்கு சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியும்.
இருந்த போதும் எப்படியும் படித்தே தீர வேண்டும் என்பதிலும், என் சமூக மக்களுக்கு தலைமை யேற்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன். நான்
கல்லூரிக்குப் படிக்க செல்ல வில்லை யென்றால் திருமணம் செய்து கொண்டு செங்கல் சூளையிலோ அல்லது புல் அறுப்பதற்கோ சென்றிருக்க வேண்டும்.
இது தான் எங்கள் சமூகச் சூழல். நிறைய சிரமங்களுக்கு இடையில் ஹியானாவில் உள்ள இந்திரா காந்தி தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன்.
கல்லூரியில் நுழைந்த முதல் நாளே தீண்டாமையின் ரேகைகள் இந்தியாவின் உயர்கல்வி நிலை யங்களில் புரையோடி யிருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
கல்லூரியில் நுழைந்த உடனேயே வகுப்பிலுள்ள உயர்ஜாதி வகுப்பைச் சேர்ந்த பெண்கள் என் பெயர் என்ன? என என்னிடம் கேட்பதற்குப் பதிலாக என் ஜாதி என்ன? என்பதையே என்னிடம் முதல் கேள்வியாகக் கேட்டனர்.
நான் இட ஒதுக்கீட்டில் வந்த தலித் மாணவி என்பதால், என்னிடம் பேசுவதை, பழகுவதை தவிர்த்தனர்.
என் வகுப்பில் இருந்த 3 தலித் மாணவிகளுக்கும் இதே அனுபவம் என்பதால் நாங்கள் நால்வரும் சேர்ந்தே எங்களுக்குள் நட்பு, பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம்.
தலித் என்ற ஜாதிய வன்முறை கல்லூரியோடு மட்டும் நின்று விட வில்லை. ஒருமுறை நாங்கள் என்எஸ்எஸ் முகாமுக்குச் சென்ற போதும் தொடர்ந்தது.
முகாமில் நாங்களே சமைப்பது, சுத்தப் படுத்துவது என அனைத்து வேலை களையும் செய்ய வேண்டும்.
உயர்வகுப்பு மாணவிகள் எங்களை நோக்கி கூட்டுவது, பாத்திரம் துலக்குவது எல்லாம் இவர்களைப் போன்ற தலித்களின் பணி என என்னை இழிவு படுத்தினார். அப்போது எங்களுக்குள் விவாதம் ஏற்பட்டது.
விவாதத்தை பார்த்த பேராசிரியர்கள் வார்த்தைகளால் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட எங்களுக்கு ஆதரவாக உயர்ஜாதி மாணவிகளின் பேச்சை கண்டிப்பதற்குப் பதிலாக என்னை கண்டித்தனர்.
அச்சமயத்தில் தலித் பேராசிரியர் ஒருவர் என்னிடம், ‘மனிஷா, நம் போராட்டம் இதை விடப் பெரியது.
நாம் இதைவிட அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு நாம் திட்டமிட வேண்டும். இப்பிரச்னையை இதோடு விட்டு விடு! என வாழ்வின் நிதர்சன த்தை விளக்கினார்.
ஜாதிய பிரச்னை களுக்கு மத்தியில் கல்லூரிக் கட்டணத்தை செலுத்துவதே எனக்கு பெரிய பிரச்னையாக இருந்தது.
கல்வி உதவித் தொகை கிடைத்த போதும், என் குடும்பம் மீதமுள்ள கட்டணத்தை செலுத்த மிகுந்த சிரமப்பட்டது.
நல்ல உடை, பேக், புத்தகம் வாங்க என மிகுந்த சிரமத்துக்கு உள்ளானேன். எப்படியோ மிகுந்த சிரமப்பட்டு வங்கிக்கடனும் பெற்று முதலாமாண்டு கல்லூரிக் கட்டணத்தை செலுத்தினேன்.
தினமும் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் சென்றதும் நான் அணிந்திருந்த ஆடையை மறுநாள் அணிவதற்காக துவைத்து காயப் போட்டு விடுவேன்.
ஒரே ஆடையை பல முறை அணிவதால் பலர் என்னை கல்லூரியில் ‘பூப்போட்ட சுடிதார்’ என்றே அழைத்து கிண்டல் செய்வார்கள்.
முதலாண்டு முடியும் தருவாயில் தலித் பெண்களால் கல்விக் கட்டணத்தை செலுத்த இயலாது. அதனால் அவர்கள் படிப்பை பாதியில் விட வேண்டியுள்ளது என நினைத்து,
நானும் கல்வியை பாதியில் விடப் போகிறேன் என நினைத்தேன். அச்சமயம் என் மாமா உதவி துணை கமிஷனராக இருந்த சுமித்தா கட்டாரியாவை சென்று சந்திக்கச் சொன்னார்.
கட்டாரியா மிகுந்த சிரமப்பட்டு படித்து, கல்வியின் மூலம் உயர் நிலையை அடைந்தவர். நான் அவரை சென்று பார்த்தபோது, என்னைப் பார்த்தது போலவேத் தோன்றியது.
என்னுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தி யதோடு, எனக்கு புத்தகமும், சைக்கிளும் வாங்கித் தந்தார். அவரும் என்னைப் போலவே நிறைய சவால்களை எதிர் கொண்டு வந்துள்ள தலித் பெண்.
என்னைப் போன்ற சக சகோதரியின் பச்சா தாபத்தால் என்னால் படிக்க முடிந்தது. அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. தற்போது நான் தலித் பெண்களின் கல்விக்காக பணியாற்றி வருகிறேன்.
ஜாதிய பிரச்னை பற்றி பேசினால் முதலில் நம் இந்திய பள்ளிகளில் நடைபெறும் ஜாதிக் கொடுமைகள் பற்றி பேசுவது அவசியம். தலித் பெண்களு க்காக போராடுபவர்கள்,
அவர்களு க்கு படிப்பதற்கு கல்வி நிலையங் களில் அனுமதி பெற்றுத் தந்தால் மட்டும் போதாது. தொடர்ந்து படிப்பதற்கும் துணை நிற்க வேண்டும்.
என்னுடைய கல்லூரி அனுபவமே பெரும்பாலான தலித் மாணவர் களின் கல்லூரி அனுபவம். இவர்களால் இந்தியாவின் எலைட் நிறுவனங்க ளான ஜேஎன்யு மற்றும் ஐஐடி.யில் எப்படி சேர இயலும்?
மாநில அளவில் கல்வி நிறுவனங்களில் சரியான கட்டமைப்பு வசதிகள் இருப்பது இல்லை. தீண்டாமையால் தலித் மாணவர் களுக்கு ஆய்வக உரிமைகளும் மறுக்கப் படுகிறது.
கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு ஒரு அலுவல கத்தில் இருந்து மற்றொரு அலுவலக த்துக்கு ஓட வேண்டி யுள்ளது. எங்கள் தேவைகளை நிறை வேற்றவே மிகுந்த பாடுபட வேண்டி யிருந்தது.
இளங்கலை முடித்து, குருசேத்ரா பல்ககைக் கழகத்தில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தேன். அம்பேத்காரின் சீரிய அரசியல் பங்கேற்பால் எங்களால் உயர்கல்வி நிலைய ங்களில் படிக்க முடிகிறது.
முதுகலை படிக்கும் போது, நான் டாக்டர் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.
தலித் பெண் தலைவி என்பதும், அரசியலில் தலித் பெண்களின் பங்களிப்பு என்பதும் மற்றொரு பெரிய போராட்டம்!
சவால்! நிருபயாவுக்கு நேர்ந்த கொடுமை போல் அன்றாடம் நிறைய தலித் பெண்களுக்கு நடந்து வருகிறது. இருந்த போதும், நிருபயாவுக்கு ஏற்பட்ட கவனம் தலித் பெண்களுக்கு கிடைக்க வில்லை.
அச்சமயத்தில் ஹரியானா வின் ஜின்ட் பகுதியைச் சேர்ந்த இளம் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொல்லப் பட்டார்.
அச்சமயத்தில் என ஒட்டு மொத்த வகுப்பும், என்னுடைய பேராசிரியரும் இக்கொலை பாலின வேறு பாட்டால் ஏற்பட்டது. ஜாதிய ரீதியாக நடைபெற வில்லை என மறுத்தனர்.
விளிம்பு நிலையில் உள்ள தலித் பெண்கள் எந்தளவுக்கு வன்முறையை எதிர் கொண்டாலும் சாதாரண அனுதாபத்தைக் கூட பெற இயல வில்லை என்பது மிகுந்த வருத்த மளித்தது.
எங்கள் மாநிலமான ஹரியானா வில் தங்கிப் படிக்க தலித் பெண்க ளுக்கு நல்ல விடுதிகள் இல்லை. தினமும் 100 கி.மீ சென்று வர வேண்டும்.
வகுப்பு முடிந்ததும் வேகமாக ஊருக்குத் திரும்ப வேண்டும். வீட்டில் வந்து எங்கள் உடன் பிறப்புகளை கவனிப்பது, துவைப்பது, சமைப்பது போன்ற அன்றாடப் பணி களையும் பார்க்க வேண்டும்.
ஆண்கள் தர்ம சாலாவில் தங்கிப் படிக்கின்றனர். பெண்களால் அது இயல வில்லை. இச்சூழலில் நூலகத் துக்குச் சென்று புத்தகம் படிப்பதோ, ஆய்வு செய்வதோ கடினம்.
இச்சூழலிலும் தலித் பெண்கள் நன்றாக படித்தனர் என்பதே நிதர்சனம். இச்சூழல் களால் தலித் பெற்றோர்கள் பெண்கள் கல்லூரிக்கோ அல்லது பல்கலைக் கழகத்துக்கோ செல்வதற்கு அனுமதிப் பதில்லை.
முதுகலை படித்த பின்னர் நான் படிப்பை பாதியில் நிறுத்திய தலித் பெண்களின் வீட்டுக்குச் சென்று மீண்டும் படிக்க அனுப்பும் படி வற்புறுத் தினேன்.
அதோடு, குருசேத்ரா வில் உள்ள என் அலுவல கத்தில் தங்கி பல்கலைக் கழகத்துக்கு போகட்டும் என வலியுறுத்தி வருகிறேன்.
சிலர் என் வார்த்தையை ஒத்துக் கொண்டு படிக்க அனுப்பு கின்றனர். தலித் பெண்களிடம் எப்படி செல்ல வேண்டும்? எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி அறிவுரை வழங்கி அனுப்புவேன்.
அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் பற்றி கற்றுத் தந்துள்ளேன். என் வாழ்வு தற்போது முழுமையாக இருப்பதை உணர முடிந்தது.
நமது நாட்டில் அடிக்கடி இடஒதுக்கீடு அவசியம் தானா? என்ற விவாதங்கள் வந்த வண்ணம் உள்ளது.
அச்சமய த்தில் ரோகித் போன்ற சகோதரர்கள் கேள்விக் கேட்கின்றனர். நாட்டில் நிலவும் தீண்டா மையைப் பற்றி வெட்கப் படாமல் தலித் மாணவர் களின் தகுதியைப் பற்றிக் கேள்வி கேட்கின்றனர்.
மேல்த்தட்டு மக்களுக்கு எங்கிருந்து ‘மெரீட்’ கொண்டு வந்தனர் எனக் கேட்க வேண்டும்.
இவர்களின் உயர்ந்த தகுதி எங்களைப் போன்ற தலித்களின் முதுகெலும்பை உடைத்து பணியச் செய்து வந்தது என்பதை உணர வேண்டும்.
நாங்கள் சமத்துவத்தை அடைய வாழ்வில் நிறைய தூரம் செல்ல வேண்டி யுள்ளது. இது போன்ற தேவையற்ற விவாதங் களை தவிருங்கள்’. இவ்வாறு மனீஷா தனது கடிதத்தில் தெரிவித் துள்ளார்.