தமிழகத்தில் கடலூர் பிரதேசத்தில் சமீப காலமாக பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப் படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள எள்ளேரி கிராமத்தில் வித்யா என்பவர் கடை யொன்றில் வாங்கிய முட்டையை சமைப்ப தற்காக உடைத்த போது முட்டை வித்தியாச மாக இருந்ததை அவதானித் துள்ளார்.
இதை யடுத்து மற்றொரு கடையில் வேறொரு முட்டையை வாங்கி யுள்ளார்.
அந்த முட்டையும் இதேபோல் இருந் துள்ளது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தின ரிடம் முட்டையை காட்டியபோது அது பிளாஸ்டிக் முட்டை என தெரிய வந்துள்ளது.
அந்த முட்டைக்கு தீ வைத்த போது அது பற்றி எரிந்ததால் மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். சமீப காலமாக கடலூர் மாவட்ட கிராமப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் முட்டைகள்
அதிக அளவில் விற்பனை செய்யப் படுவதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.