ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவாக ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார் நடிகை லதா. நீண்ட ஆண்டு களுக்குப் பிறகு களம் இறங்கி யிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கின கால கட்டத்துலயே, நானும் கட்சியின் கொள்கை களை முன்னிலைப் படுத்தி பல படங்கள்ல பாடி, ஆடி, பேசி நடிச்சி ருக்கேன்.
கட்சிப் பணிகள்லேயும் ஈடுபட்டிருக்கேன். அப்படித் தான் எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டதன் பேர்ல, பல ஊர்களுக்கும் போய் பேசி, நிதி திரட்டி 35 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
86-ம் வருஷம் எம்.ஜி.ஆர் 'நீ கட்சிக்கு வந்து, தீவிரமா பணி செய்'னு என்னை அரசியலுக்குக் கூப்பிட்டாரு.
ஆனா அப்போ எனக்குக் குழந்தைங்க இருந்ததால, பசங்க பெரியவங்களா வளர்ந்த பிறகு வர்றேன்னு சொன்னேன்.
அப்போ பெருசா அரசியல்ல எனக்கு ஆர்வம் வரலை. ஆனா தொடர்ந்து அரசியல் நிகழ்வு களை எம்.ஜி.ஆர் இருந்தப்பல இருந்து கவனிச்சுட்டு தான் வர்றேன்.
எம்.ஜி.ஆர் மறைஞ்ச பிறகு, அதிமுக பல அணிகளா பிளவு பட்ட சமயத்துல, நான் திருநாவுகரசர் அணிக்கு ஆதரவு தெரிவிச்சேன். அவர் அணி சார்பா திண்டுக்கல்ல நின்னேன்.
எந்த பெரிய ஆட்களோட ஆதரவும் இல்லாம, நான் 35,000 ஓட்டுகள் வாங்கினேன். அதுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமை யிலான ஒன்று பட்ட அதிமுக அணி உருவாச்சு.
எந்த எதிர்ப்பான சூழலும் இல்லாம கட்சியும், ஆட்சியும் சுமுகமா போயிட்டு இருந்த தால, நானும் அரசியல்ல இருந்து கொஞ்சம் ஒதுங்கி யிருந்தேன்.
ஆனா, ஜெயலலிதா வோட எனக்கு நல்ல நட்பு இருந்துச்சு. ரொம்ப வருஷத் துக்கு முன்னாடி எங்க குடும்ப உறுப்பினர் ஒருத்தங் களோட கல்யாண த்துல ஜெயலலிதா கலந்து கிட்டாங்க.
அப்போ நாங்க ரெண்டு பேரும் சந்திச்சு மகிழ்ச்சியா பேசினோம்.
அதுக்குப் பிறகு அவங்களை சந்திக்க நான் நினைச் சப்போ, 'ஜெயலலிதாக் கூட இருக்கிற ஆட்கள் யாரையும் அவங்க பக்கத்துல அனுமதிக் கிறதில்ல'னு பலரும் சொன்னாங்க.
நானும் ஜெயலலிதாவைச் சந்திக்க எவ்வளவோ முயற்சி செஞ்சேன். ஆனா முடியல. அதுக்கு யார் காரணம்னு எல்லோருக்குமே தெரியும். அம்மா ஜெயலலிதா இறந்த பிறகு நிலைமையே மாறிப் போயிடுச்சு.
ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாம அப்போலோல சிகிச்சைப் பெற்று வந்த சமயத்துல, அவங்களைப் பார்க்கப் போனேன்.
ஆனா அங்கிருந்த நாடாளு மன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, 'அம்மா நல்லாயி ருக்காங்க. அவங்கள இப்போ பார்க்க முடியாது'னு சொன்னார்.
நானும் திரும்பி வந்துட்டேன். அம்மா இறந்த பிறகு, கட்சி உடையக் கூடாது.
எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் படியான தலைமை உருவாகணும், அந்த தலைமையை தொண்டர்கள், பொது மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளணும்னு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
நான் அடிக்கடி கோயில், கடை வீதிகளுக்குப் போவேன். அப்போ, 'என்னம்மா எம்.ஜி.ஆர் உருவாக்கின, ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக கட்சியை இப்போ யார் யாரோ நடத்திட்டு இருக்காங்க.
இப்படியே போனா எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா வும் உருவாக்கின கட்சியோட நிலைமை என்னவாகும். எம்.ஜி.ஆர் கூட நடிச்சி ருக்கீங்க, ஆரம்பத்துல நீங்களும் கட்சிக்காக உழைச் சிருக்கீங்க.
இப்போ நடக்குற பிரச்னை களைத் தடுக்க, நீங்க குரல் கொடுக்க மாட்டீங்களா'ன்னு பல தாய்மார்கள் என்கிட்ட கேட்டாங்க.
என்னை ஒரு பிரபலமா உருவாக் கியவர் எம்.ஜி.ஆர். அவர் உருவாக்கின கட்சி, ஒரு குடும்பத்து நபர்களோட கைப்பிடிக்கு போகக் கூடாதுனு நினைச்சேன்.
பன்னீர் செல்வம் முதல்வரா தொடர்ந்தா, எந்தப் பிரச்னையும் இல்லாம இருந்தி ருக்கும். மக்களும் எதிர்ப்பு தெரிவிச் சிருக்க மாட்டாங்க.
அப்போ தான் முக்கியமான கட்சித் தலைவர்கள் என்னை சந்திச்சு, 'நீங்க முன்ன மாதிரி, அரசியல் பணிகளுக்கு வரணும்'னு கேட்டுக் கிட்டாங்க.
ஆர்.கே நகர் தொகுதியில ஓ.பன்னீர்செல்வம் அணி ஜெயிச்சுட் டாங்கனா, கண்டிப்பா பிளவுபட்ட அதிமுக ஒண்ணு சேரும்னு நம்பினேன்.
அதான் அவருக்கு ஆதரவு தெரிவிச்சு, அவர் அணி வெற்றிக்காக ஆர்.கே.நகர்ல பிரசாரம் பண்ணிட்டு இருக்கேன்.
வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா தேர்தல்ல நிப்பேன். எழுதி வைச்சுக் கோங்க... அதிமுக கட்சி பழையபடி ஒற்றுமையா செயல்படும். அந்த நாள் தொடுற தூரத்துல தான் இருக்குது'' என்றார் நடிகை லதா... உறுதியாக.