டாஸ்மாக் குடியை கண்டுபிடிக்க உதவும் ஆப் !

குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு தீங்கானது. ஆனா தெருவுக்கு தெரு டாஸ்மாக் இருக்கும்.

அதே மாதிரி குடிக்கிற இடம் ரொம்ப தூரத்துல இருக்கும். ஆனா குடிச்சுட்டு வண்டி ஓட்டினா போலிஸ் பிடிக்கும் .

கடைசியா இதுல இருந்து எப்படி வெளில வர்றதுனு தெரியாம முழிக்கும் நம்ம ஊர் குடிமகன் களுக்கு இது எல்லாமே பிரச்னை தான். 

இந்தப் பிரச்னை எல்லா த்தையும் வர்த்தக மாக்கி பார்க்கின்றன சில ஆப்கள். குடி குடியை கெடுக்கும். ஆனா இந்த ஆப் எல்லாம் குடிக்கற வங்கள நம்பி வியாபாரம் பார்க்கும்.

ஒரு நல்ல விஷயம் கண்டு பிடிக்கப் பட்டால் அதற்கு இணையான கெட்ட விஷயமும் கண்டு பிடிக்கப்படும். 

அதே போல் ஒரு கெட்ட விஷயம் கண்டு பிடிக்கப் பட்டாலும் அதற்கு இணை யான நல்ல விஷயம் கண்டு பிடிக்கப்படும். 

தமிழ்நாட்டில் பெட்ரோல் பங்க், மருத்துவ மனை , உணவகம் எங்கிருக்கிறது என்று கேட்டவர் களைத் தாண்டி டாஸ்மாக் எங்கிருக்கிறது என்ற கூட்டம் அதிகரித்து விட்டது.

இந்த மாதிரி ஆளுங் களுக்காக தான் Tasmac Locator அப்படினு ஒரு ஆப். தமிழ்நாட்ல எந்த எந்த இடத்துல டாஸ்மாக் இருக்குனு மேப் போட்டு காட்டுது. 

இருக்குற இடத்துல இருந்து எவ்வளவு தூரத்துல டாஸ்மாக் இருக்குனு சரியா சொல்லும்.. 

புதுசா போற ஊர்ல எங்க டாஸ்மாக் இருக்குனு கேட்க கூச்சப்படுற குடிமகன் களோட கமெண்கட்கள் ப்ளே ஸ்டோர் ரிவியூல தெரியுது.

குடிக்கறது பிரச்னை, அடுத்ததா வர்ற பிரச்னை குடிக்கற துனால நடக்குற விபத்துகள், குடிச்சுட்டு வண்டி ஓட்டி பல பேர் இறந்துருக் காங்க. 

இதனால் குடிக்காம தெருவுல நடக்கற சாதாரண மக்களும் பாதிக்கப் பட்டுருக் காங்க. இதற்கான தீர்வா ஒரு ஆப் கண்டு பிடிச்சிருக் காங்க. 

ஆல்கஹூட் ஆப் மூலமா ஆல்கஹால் குடிச்ச ஒருத்தர் தன்னோட Blood alcohol content (BAC) எவ்வளவுனு பார்த்து வண்டி ஓட்டாம இருக்க உதவும். 


அதுவே குடிச்சிருக்கறத கண்டு பிடிச்சு பக்கத்துல இருக்குற டேக்ஸிய புக் பண்ணி தருமாம். இந்த ஆப் இப்போதைக்கு அமெரிக்கால மட்டும் தான் இருக்கு. 

ஆல்கவைசர் போன்ற ஆப்கள் டேக்ஸி புக் பண்ற அளவுக்கு இல்லாட்டியும் வண்டி ஓட்டக் கூடாதுனு அட்வைஸ் பண்ற அளவுக்கு இருக்கு.

இதெல்லா த்தையும் விட ஆல்கஹால் பழக்கத்தி லிருந்து விடுபடவும் AA 12 Steps App Alcoholics போன்ற ஆப்கள் சரியான பரிந்துரை வழங்குது. ஆக மொத்தத்துல எங்க குடிக்கலாம், 

எப்படி பாதுகாப்பா வீட்டுக்கு போகலாம், இந்த பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடலாம்னு எல்லா விஷயத் துக்கும் ஆப்ஸ் இருக்கு. 

குடிக்கறவங்க இந்த ஆப்லாம் பாத்தா குடிக்குறாங்கனு நீங்க கேட்கலாம்.

இந்த ஆப்போட டவுன் லோடையும், இந்த மாதிரி ஆப்கள் எத்தனை இருக்குனும் பார்த்தா உங்களுக்கே தலை சுத்தும்.

ரேட்டிங்கிலும் குடிமகன்கள் தெளிவா தான் இருக்காங்க. நல்லா இல்லனு ஓப்பனா சொல்லி சில ஆப்கள காலியும் பண்ணிருக் காங்க.

இவ்ளோ ஆப்ஸ்கள் வந்தாலும் குடிப்பழக்கம் தவறு. 

அதுனால பல குடும்பங்கள் பாதிக்கப்படுது. அதனால இத செய்யுறது தவறுங்குற டிஸ்க்ளெய்மர தான் ஆல்கஹால் நிறுவனங்கள் ஆரம்பிச்சு இத ஆதரிக்குற ஆப்கள் வரை எல்லாமே பண்ணுது. 

அப்பறம் எதுக்கு பாஸ் நமக்கு அது. இதெல்லாம் விட நீங்க குடிச்சு உடம்ப கெடுத்துக்கறத வைச்சு

சில நிறுவனங்கள் வர்த்தகம் செய்யுறாங் கன்னா அதுனால உங்களுக்கு என்ன லாபம் சொல்லுங்க,?
Tags:
Privacy and cookie settings