நாம் உலகில் வாழும் காலங்களில் ஆரோக்கியத்துடன் இருந்து அதே ஆரோக்கியத்துடன் எவருக்கும் எவ்வித தொந்தரவும் தொல்லைகளும் இல்லாமல்
இறுதியில் இறைவனடி சேர ஒவ்வொருவரும் தம் வாழ் நாட்களில் ஐங்கால இறை வணக்கத்துடன் அணு தினமும்
குறைந்தது அரை மணி நேரமாவது கண்டிப்பாக உடலுக்கும், வயதிற்கும் ஏற்ற உடற்பயிற்சி செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு நகரத்தில் தான் வசிக்க வேண்டு மென்றோ அல்லது உடலை கட்டுக் கோப்பாக வைக்க உதவும் உடற் பயிற்சி நிலையங் களுக்கு காசு செலவழித்து செல்ல வேண்டு மென்ற அவசியமோ இல்லை.
ஊரில் இருந்து கொண்டே, வீட்டில் இருந்து கொண்டே, அறையில் இருந்து கொண்டே எவரும் அறியாத வகையிலும் செய்யலாம்.
இது ஒன்றும் மார்க்க த்திற்கு புறம்பான செயல் அல்ல. (பிறகென்ன ஒரே யோசனெ? ஆரம்பிச்சிட வேண்டியது தானே?)
உடலை ஆரோக்கிய மாக வைத்துக் கொள்ளவும் உடற் பயிற்சி செய்வதால் வரும் இன்ன பிற நன்மைகள் பற்றியும் நம்மூர் பாஷையில் கொஞ்சம் இங்கு அலசுவோம் வாங்கஹாக்கா...
1. கை கால் கடுப்பு, இடுப்பு புடிப்பு கொறையும். (இதில் திட்டுமுட்டு செரவடி, கொடப்பெரட்டு, ஓங்காரம், ஒரு மாரியா வர்ரது, மசக்கம், பித்தம் எல்லாம் அடங்கும்)
2. கழுத்து சுலுக்கு வராது. (மொம்மானி வாக்கா கடையிலெ வீசக்கார தைலம் வியாபாரம் கொஞ்சம் கொறைய வாய்ப்புண்டு)
3. தலவாணி க்கு ஒறை போட்ட மாதிரி தொந்தி உழுவாது. (நெறையா பேரு ஊர்லெ நிண்டுக் கிட்டே தன் சொந்த பெரு விரலெ சின்னப் புள்ளையிலெ பாத்தது......)
4. வாய்வுக் கோளாறு கொறையும். (அங்கிட்டு, இங்கிட்டு காத்து கண்ணாப் பின்னாண்டு பிரியாது. அக்கம், பக்கம் திரும்பி பாத்துக் கிட்டு யாருமில்லாத நேரம் டீசண்ட்டா பிரியும்)
5. இனிப்பு நீரு, ரத்தக் கொதிப்பு வராமல் தள்ளிப் போகும். அப்படியே வந்திருந் தாலும் கட்டுப்பாட்டோடு ஈக்கிம்.
(பகல்லெ களரிக்கார ஊட்டுக்கு போயிட்டு சாங்காலம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி ஈக்காது)
6. ஒடம்புலெ தேவை யில்லாமல் தொங்கும் ஊளைச் சதை வத்திப் போவும். (அதனாலெ சட்டெ, பேண்டு அளவு எப்பொழுதும் மாறாமல் ஒரேக்கணக்கா ஈக்கிம்)
7. தோலு சுருக்கம் சுருக்கன வராது. (அதுக்காக இன்னொரு கலியாணத்துக் கெல்லாம் ஆசப்படக் கூடாது)
8. ராத்திரி அசந்த நல்ல தூக்கம் வரும். (கள்ளன் வொலுக்கு வசதியாப் போயிடாமெ பாத்துக்கிட வேண்டியது ஆமாம்..)
9. சேர்மா வாடிக்கு போறதுக்கு கூட செத்த பைக்கு கடன் வாங்க அவசியம் ஈக்காது. (கடன் வாங்காம சொந்த கால்லேயே போயிட்டு வந்துர்லாம்)
10. மனசு சீராக பதஸ்ட்டமும், படபடப்பும் இல்லாமல் சாந்தமாக ஈக்கிம். (அதுக்குத் தானே ஒலகத்துலெ இவ்ளோவ் செரமப் படனுமா ஈக்கிது?)
11. ஒடம்புக் காக ஒன்னுமே செய்யா ததாலெ வரும் ஏகப்பட்ட ப்ரச்செனைகள் கொறஞ்சி பட்டுக் கோட்டைக்கும், தஞ்சாவூ ருக்கும் ஆஸ்பத்திரி,
ஊடுண்டு அலையிறது கொறஞ்சி போகும். நேரமும், காசும் மிஞ்சும். (அந்த காசெ சேத்தாலே காலப் போக்குலெ மனக்கட்டு வாங்கி போடலாம் எங்கை யாச்சும்..)
ஊடுண்டு அலையிறது கொறஞ்சி போகும். நேரமும், காசும் மிஞ்சும். (அந்த காசெ சேத்தாலே காலப் போக்குலெ மனக்கட்டு வாங்கி போடலாம் எங்கை யாச்சும்..)
12. ஒரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ புடிச்சி கொஞ்சம் நொடி உள்ளக்க வச்சி பொறகு இன்னொரு மூக்கு ஓட்டையிலெ மூச்செ உட்டு
ஒவ்வொரு நாளும் இப்புடி பழகுனா நெஞ்சுக் குள்ள அடிக்கடி கறி, கோழி, குருவி சாப்புட்றதுனாலெ கொழுப்பு அடைச்சி மூச்சி பிரச்சினை, ஹார்ட்டு குழாயி அடப்பு பிரச்சினை இதெல்லாம் வராம தடுக்கலாம்.
(ஊட்டு சர்சராக் குழியிலெ கானு அடச்சி போயிட்டாலெ அதெ சுத்தம் பண்ண வ்ளோவ் காசு கேக் குறானுவோ?
ஹார்ட்டுக்குள்ள அடப்பு வந்திரிச் சிண்டா ஊட்டு பத்திரத்தெயிலெ எழுதிக் கேப்பானுவோ டாக்டருமாருவொ?)
13. உடற் பயிற்சி செய்யிற துனாலெ ஒடம்புலெ உள்ள கெட்ட நீரு/ கிருமிகள் வேர்வை மூலமா வெளியாயிடும். ஒடம்பும், மனசும் ஃப்ரஸ்ஸா ஈக்கிம். ரத்த ஓட்டம் சீராக ஈக்கிம்.
14. மணிக் கணுக்குலெ காலைக் கடனுக்கு காத்துக் கெடக்க வேண்டிய அவசியம் ஈக்காது. அப்புறம் ஒடம்பு ரொம்ப ராஹத்தா ஈக்கிம்.
15. உடற் பயிற்சியை ஆரம்பிக்கும் பொழுது ரெண்டு, மூணு நாளெக்கி ஒடம்பு பூராவும் வலிக்கும். காச்சல் கூட வரும். பயந்துட கூடாது. காச்சல் உட்டதும் தொடரனும். அப்புறம் என்னா?
சிக்ஸ் பேக்கு, எயிட் பேக்குண்டு வசதிக்கு தகுந்தமாரி வச்சிக்கிட வேண்டியது தானே? இதுக்கு அரசாங்க வரியா போடப்போவுது?
சிக்ஸ் பேக்கு, எயிட் பேக்குண்டு வசதிக்கு தகுந்தமாரி வச்சிக்கிட வேண்டியது தானே? இதுக்கு அரசாங்க வரியா போடப்போவுது?
நம்ம ரத்தத்துலெ இனிப்பையும், கொழுப்பையும் கொறச்சிட்டா அல்லது கட்டுப் பாட்டுடன் வச்சிக் கிட்டாலே போதுங்க. ஏகப்பட்ட நோய் நொடிகள் நம்மை தாக்காமல் தடுக்கலாம்.
பெருவாரியான நோய் நொடிகளை நம்ம ஒடம்புக் குள்ள பந்தல் போட்டு வாசல்லெ பன்னீரு தெளிச்சி,
சந்தனத்தெ ஒரு கோப்பையிலெ வச்சிக்கிட்டு வரவேற்கிறதே இந்த ரெண்டும் தாங்க (இனிப்பும், கொழுப்பும்). (சகன்லெயும் அது ரெண்டும் தானே நாட்டாமை பண்ணுது?)
எப்புடி பலமான இறையச்சம் (தக்வா) உள்ளவர் களை பார்த்து சைத்தான் அவர்களை வழிகெடுக்க நெருங்க முடியாமல் எரிச்சலடைந்து சோர்ந்து போகிறானோ (சோந்து போவான்)
அது மாதிரி தாங்க நம்ம ஒடம்பெ ஆரோக்கியமா எப்போழும் வச்சிக்கிட்டா நோய் நொடிகள் எளிதில் நம்மை தாக்க முடியாமல் எரிச்சலாகி மாச்சப்பட்டு எங்கையாவது ஓடிப் போயிடும்.
அப்புறமென்ன நோய் நொடிகளும் அதை ஊக்கு விப்பவர்களும் ஒன்று சேர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையம் போல் ஆரோக்கிய மான மனிதர்களை எதிர்த்து போராட வேண்டியது தான்.
அதுக்கு ஒத்து ஊதுறதுக்கும் ஆளுவொ நாட்லெ ஈக்கத்தான் செய்வாங்க. அதெ பத்தி கவலைப் படாதியெ. நமக்கு நம்ம ஆரோக்கியம் தான் முக்கியம்ங்க.......
இன்னொரு விசயங்க, எங்க அப்பா காலத்துலெ எல்லாம் எல்லாப் பள்ளி வாசல்லையும் ஒரு நாக்காலியெ கூட பாத்தது இல்லெ.
எம்பது, தொன்னூறு வயசானவங்க கூட நின்டுக்கிட்டு இல்லாட்டி தரையிலெ உக்காந்துகிட்டு தான் தொழுவுவாங்க.
இப்பொ என்னாண்டாக்கா ஒவ்வொரு பள்ளி வாசல்லையும் பத்து நாக்காலிக்கு மேலெ வாங்கி போட்டு வச்சிக்கிறாஹ.
சின்ன, சின்ன வயசுகாரவங்க கூட எதாவது ஒடம்பு சரியில்லாம நாக்காலியிலெ உக்காந்துக் கிட்டு தொழுவுறாஹ...
காரணம் என்னாண்டாக்கா இப்பொ உள்ள மக்கள்ட்டெ ஆரோக்கியம் கொறஞ்சி போச்சிங்க.
இப்பொ என்னாண்டாக்கா ஒவ்வொரு பள்ளி வாசல்லையும் பத்து நாக்காலிக்கு மேலெ வாங்கி போட்டு வச்சிக்கிறாஹ.
சின்ன, சின்ன வயசுகாரவங்க கூட எதாவது ஒடம்பு சரியில்லாம நாக்காலியிலெ உக்காந்துக் கிட்டு தொழுவுறாஹ...
காரணம் என்னாண்டாக்கா இப்பொ உள்ள மக்கள்ட்டெ ஆரோக்கியம் கொறஞ்சி போச்சிங்க.