ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோழிக்கோடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கப்பாட் பகுதியைச் சேர்ந்த பஷீர் பாலோடயில் மற்றும் சுஹ்ரபி ஆகியோரின் மகன் முகமது யூசுஃப்அலி, கடந்த புதன்கிழமை நல்லாலம் என்ற இடத்துக்கு தனது தாய், பாட்டி, சகோதரியுடன் சென் றுள்ளார்.
பேருந்தில் ஏறுவதற்கு முன்பாக ஜெல்லி மிட்டாயை வாங்கி சாப்பிட்ட சிறுவன் பிடிக்க வில்லை என்றதும் அதனை வாங்கி சுவைத்து பார்த்த அவரது தாயார் மிட்டாயை தூக்கி வீசியுள்ளார்.
மிட்டாயை சாப்பிட்ட பின் வீடு திரும்பிய சிறுவன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிளினி க்கிற்கு அழைத்துச் சென்ற போது சிறுவனின்
உடல் நிலை மோசமடை ந்ததால் அவரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவி த்தனர்.
மேலும், மிட்டாய் சாப்பிட்ட சிறுவனின் தாய் மயக்க மடைந்ததை யடுத்து அவரும் அதே மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு காவல் துறையினர் மிட்டாயை தடை செய்தனர்.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் விற்பனைக்கு வைத்திருந்த மிட்டாயை பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பி யுள்ளனர்
இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளது .