ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே நகரில் இடைத் தேர்தல் நடை பெறவுள்ளது. வரும் 12-ம் தேதி நடைபெறும் இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக
டி.டி.வி. தினகரன், மருது கணேஷ், மதுசூதனன் ஆகியோருக் கிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினகரன் தரப்பு பணத்தை வாரி இறைத் துள்ளது.
ஆர். கே. நகருக்கு விசிட் செய்த போது, 'ஓட்டுப் போடுறதுக்கு காசு வாங்கு றாங்களே' என புலம்பும் மக்களை பார்க்க முடிந்தது. 'சிலர் பணத்தை வாங்கினாலும் என் விருப்பப் படியே வாக்களிப்பேன் ' என்கின்றனர்.
'கிடைக்கும் பணத்தை ஏன் விடணும்' என்பது பலரது கருத்து. புதிதாக யார் தலை தெறிந்தாலும்... 'பணம் கொடுக்கத் தான் வந்திருக் குறாங்க’ என, கருதும் மக்களையும் பார்க்க முடிந்தது.
இளைஞர்கள், இளம் பெண்கள் மட்டுமே பணம் வாங்காமல் நேர்மையாக வாக்குச் செலுத்த விரும்பு கின்றனர்.
இளைஞர்கள் மத்தியில் ஒரு வித சலிப்பும் அரசியல் வாதிகள் மேல் வெறுப்பு இருப்ப தையும் அறிய முடிகிறது.
எந்தக் கட்சியிலும் இல்லா விட்டாலும் தினமும் 500 ரூபாய் வாங்கிக் கொண்டு யாருக் காவது வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடும் மூதாட்டி களையும் ஆர்.கே நகரில் இப்போது பார்க்கலாம்.
ஆர்.கே. நகரில் இப்போது அறைகள் கிடைப்பது குதிரைக் கொம்பு. சிறிய அறை கிடைத்தால் கூட தினகரன் தரப்பு ஆள்கள் விடுவ தில்லை. அங்கேயே தங்கிக் கொண்டு கவனிப்பைத் தொடங்கி விடுகின்றனர்.
ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வாடகை கொடுப் பதற்கும் அவர்கள் தயாராக உள்ளனர். 15 நாள் தங்கினால் 15 ஆயிரம் என முன் கூட்டியே தந்து விடுகி றார்கள்.
பணத்தை முன்னரே தந்து விடுவதால் பலரும் தங்கள் வீட்டில் பயன்பாடு குறைவாக ஒரு அறை இருந்தால் அதை ஒதுக்கிக் கொடுத்து வருகின்றனர்.
வெளியூரில் இருந்து வந்திருக்கும் கட்சிக்காரர் களுக்கு உதவி செய்ய உள்ளூர் கட்சிக் காரர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இந்தப் பணியில் பெண்களும் உள்ளனர். பணப் பட்டுவாடா நடக்கும் போது, தேர்தல் பார்வை யாளர்கள், போலீசார் வருகையைக் கண்காணி ப்பது இவர்களது பொறுப்பு.
வெளியூர் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் குறைந்தது 50 வாக்கா ளர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும். இவர்களுக்கு உள்ளுர் கட்சிக் காரர்கள் பக்க பலமாக இருப்பர்.
உள்ளூர் ஆட்கள் மக்களுக்கு பரிச்சயமா னவர்களாக இருப்பர் என்பதால் இந்த ஏற்பாடு.
தேர்தல் பார்வை யாளர்கள், பறக்கும் படையினர் கண்கொத்திப் பாம்பாக சுற்றி வந்தாலும் சங்கேத வார்த்தையைப் பயன்டுத்தி பணப்பட்டு வாடா செய்கிறார்கள்.
செல்வத்தை 'லட்சுமி' என்பார்கள். இப்போது ஆர்.கே. நகரில் 'சாமி கும்பிட்டாச்சா' என, அரசியல் வாதிகள் மக்களைப் பார்த்துக் கேட்டால், 'பணம் கிடைத்து விட்டதா' என்று அர்த்தம்.
பல இடங்களில் மக்களும் 'ஆமா... சாமி கும்பிட்டாச்சு' என பதில் சொல் கிறார்கள். பணம் கிடைக் காதவர்கள், 'சாமி இன்னும் வரலையே...' 'சாமியை எப்போ பார்க்க முடியும்' என சங்கேதமாக கேட்கிறார்கள்.
வாக்காளர் களுக்கு பணம் மட்டுமல்ல வீட்டுக்குத் தேவையான பொருட் களையும் வாங்கிக் கொடுக் கிறார்கள்.
இதற்காக டோக்கன் வழங்கப் படுகிறது. டோக்கனை சம்பந்தப் பட்ட கடை களில் கொடுத்தால் பொருள்கள் கொடுத்து விடுகிறார்கள்.
சில இடங்களில் கிஃப்ட் வவுச்சரும் வழங்கப் படுகிறது. ஆர். கே. நகரில் வாக்கு ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் பட்டு வாடா செய்வதாக சொல்லப் படுகிறது.
வேறு எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், தேர்தல் கமிஷனும் பணப்பட்டு வாடாவைத் தடுக்க பார்வை யாளர்களை அதிகமாக களம் இறக்கி யுள்ளது.
ஆனாலும் பணப் பட்டு வாடாவை தேர்தல் கமிஷனால் தடுக்க முடிய வில்லை.
ஆர்.கே. நகரில் மொத்தமுள்ள 2 லட்சம் வாக்காளர் களில் ஒரு லட்சம் பேருக்கு பணம் பட்டுவாடா செய்யப் பட்டு விட்டதாக சொல்லப் படுகிறது.