ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்' - தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக இது தான் ட்ரெண்டிங் வைரல் வார்த்தை. கடந்த 2015-ம் ஆண்டில் ஜெயலலிதா சிறை சென்று வந்த பிறகு இடைத் தேர்தல், கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல்,
தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின் வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் என மும்முனைத் தாக்குதலை எதிர் கொண்டுள்ளது ஆர்.கே. நகர் தொகுதி.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டி யிட்டதால், வி.ஐ.பி தொகுதி அந்தஸ்தில் இருந்த ஆர்.கே. நகரில் டி.டி.வி. தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், கங்கை அமரன், தீபா ஆகியோர் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
'ஜெயலலிதா வின் வழியில் ஆட்சி நடத்துவோம்' என அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் தீபா பேரவையும் பிரசாரத்தை முன்னெடு க்கின்றன.
'மூன்றாக பிரிந்து நிற்பதையே எங்களுக்கு சாதகமாக்கி வெற்றி பெறுவோம்' என வலம் வருகிறது தி.மு.க. 'வட மாநிலங் களைப் போல இங்கேயும் தாமரை மலர்ந்தே தீரும்' என பா.ஜ.கவினர் வலம் வருகின்றனர்.
ஆனால், இதை யெல்லாம் தாண்டி திருமங்கலம் ஃபார் முலாவை விஞ்சும் வகையில் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தை அதகளப் படுத்திக் கொண்டிருக் கின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள்.
என்ன தான் நடக்கிறது ஆர்.கே.நகரில்?
தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்குச்சாவடிகளில், 'போடுவோம் ஓட்டு... வாங்க மாட்டோம் நோட்டு' என்ற பதாகைகள் வைக்கப் பட்டுள்ளன.
எங்கு திரும்பினாலும் வாக் காளர்களின் எண்ணிக் கையை விட, கரை வேட்டிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதற்கு நடுவே அன்றாட வேலை களைப் பார்த்து வருகின்றனர் பொது மக்கள்.
உச்சிவெயில் வருவதற்கு முன்பே முதல் சுற்று பிரசாரத்தை அரசியல் கட்சிகள் நிறைவு செய்து விடுகின்றன. இதனால் காலை நேரத்தில் கடும் போக்கு வரத்து நெரிசலால் மக்கள் எரிச்சல் அடைகின்றனர்.
இந்தக் கடுப்பில் வண்டி ஓட்டும்போதும், 'சார்...தொப்பி...தொப்பி... மறந்திறா தீங்க' என்ற குரல்களும், 'தம்பி மின்கம்பம்... மின்கம்பம்...' என பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் குரல் எழுப் புகின்றனர்.
உச்சிவெயிலில், கட்சி அலுவலகம், குடியிருப்புகள் என கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பிரசாரம் பற்றியும் பண விநியோகம் பற்றியும் விவாதி க்கின்றனர். ' வெளியூர் ஆட்கள் பலரும் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி யுள்ளனர்.
இதனால் புதிதாக வீடு தேடி வருபவர்கள் அவதிப் படுகின்றனர். சில வாரம் தங்குவ தற்காக ஆயிரக் கணக்கில் பணத்தை வாரியிறை க்கின்றனர்' எனக் குற்றம் சுமத்து கின்றனர் ஆர்.கே.நகர்வாசிகள்.
"அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த பெண் செய்தித் தொடர்பாளர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் இருந்தே, வேட்பாளர்கள் உஷாராக வலம் வருகின்றனர். எந்தெந்த பகுதிகளில் அட்டாக் அதிகம் இருக்கும் என்பதை அறிந்து,
அந்தப் பகுதிக்குள் அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் பிரசாரம் செய்வ தில்லை. தி.மு.க.வும் பன்னீர் செல்வம் அணியும் 200, 300 என சொற்ப நோட்டுகளை மட்டுமே காட்டுகின்றனர்.
தினகரன் ஆட்களின் தாராளத்தை யாரும் குறை சொல்வ தில்லை. கொருக்குப் பேட்டையில் லட்டுக்குள் தங்க மோதிரம் வைத்து கொடுத் துள்ளனர். அதில் பல லட்டு உருண்டை களை கட்சிக் காரர்களே பதுக்கி விட்டனர்.
குத்து விளக்கு, தாம்பூலத் தட்டில் பூ, பழம் வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத் துள்ளனர். பல இடங்களில், 'பக்கத்துக்கு ஏரியாவுக்கு எல்லாம் கொடுத் துட்டாங்க சார்..
எங்களுக்கு இன்னும் கொடுக்கலை' என பகிரங்கமாக கேட்கின்றனர். நள்ளிரவு நேரத்தை குறி வைத்துத் தான் பணத்தை விநியோகிக் கின்றனர்" என்கிறார் வடசென்னை அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர்.
ஆனால், தொகுதி மக்களோ, " குடிநீர் பிரச்னை தான் ரொம்ப அதிகம். அதை தீர்க்க யாரும் எந்த நடவடி க்கையும் எடுக்கலை. கொடுங்கையூர் குப்பையால அத்தனை நோய்களும் இங்க தான் இருக்கு.
குப்பை மேட்டுக்கு பக்கத்துல இருக்கற தால, கல்யாணம் ஆகாம இருக்க றவங்க தான் ஜாஸ்தி. பல பேருக்கு முதியோர் பென்சன் வந்தே நாலு மாசம் ஆகுது. ரேசன் பொருளும் கிடைக்கற தில்லை.
ஆனால், இரண்டு வாரமா அ.தி.மு.ககாரங்க பூத்தில் போய் உட்கார்ந்தாலே 300 ரூபாய் தர்றாங்க. இதனால, பூ கட்றதுக்கு யாரும் போற தில்லை. கோவில்ல பூ விக்கறவங்க பாடுதான் ரொம்ப திண்டாட்டமா இருக்கு" என்கின்றனர்.
மாலை நேரத்தில் மீண்டும் பிரசாரம் சூடு பிடிக்கிறது. மீண்டும் அதே வாக்குறுதிகள்...அதே வேட்பாளர்கள்...அதே 300 ரூபாய்...!