சைதாப் பேட்டையில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான இன்ஜினீயர், தாயையும் தங்கையையும் ஏன் கொலை செய்தேன் என்று
பரபரப்பான வாக்கு மூலத்தை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அந்தக் காரணத்தை கேட்ட போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை, சைதாப் பேட்டை கே.பி.கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியி ருப்பில் கீழ் தளத்தில் குடியிருந்தார் ஹேமலதா. இவர், சென்னை பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் சண்முகம் ஏற்கெனவே இறந்து விட்டார். ஹேமலதா வுக்கு பாலமுருகன் என்ற மகனும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இதில் பால முருகன் இன்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் நிறுவன த்தில் பணி யாற்றினார். ஜெயலட்சுமி, இன்ஜினீயரிங் படித்துக் கொண்டி ருந்தார்.
இந்த நிலையில் ஹேமலதா வீடு நேற்று காலை முதல் திறக்கப் படவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சைதாப் பேட்டை போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, கழுத்து அறுக்கப் பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஜெய லட்சுமியும் ஹேமலதாவும் பிணமாகக் கிடந்தனர்.
நகை, பணம் கொள்ளைப் போக வில்லை. கொடூரமாக இரு வரையும் கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்தனர். அப்போது, பால முருகன் மட்டும் மாயமாகி யிருந்தார்.
இதனால், அவர் மீது போலீஸா ருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் போலீஸார், கொலை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் அதிர்ச்சி கரமான தகவலை போலீ ஸாரிடம் தெரிவித்தார்.
பால முருகன் இது குறித்து சைதாப் பேட்டை போலீஸார் கூறுகை யில், "பால முருகனின் அப்பா சண்முகம், அரசுத் துறையில் பணியாற்றி யவர். கடந்த ஆண்டு மே மாதம் அவர் திடீரென இறந்து விட்டார்.
அப்பாவின் இறப்பு பால முருகனை பெரிதும் பாதித்தது. இதன்பிறகு அவர், யாரிடமும் பேசாமல் அமைதி யாகவே இருந்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில் அப்பாவின் ஓராண்டு நினைவு நாளை மே மாதம் நடத்த வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது, பால முருகனின் மன நிலையை மேலும் பாதித்துள்ளது. இதனால், அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அப்போது, தானும் இறந்து விட்டால் அம்மாவும், தங்கையும் அனாதையாகி விடுவார்கள் என்று கருதிய பாலமுருகன், அவர் களையும் அப்பா சென்ற இடத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்காக, கடந்த சில தினங் களுக்கு முன்பு அண்ணா சாலையில் உள்ள மாலில் கத்தியை வாங்கி கொண்டு வீட்டில் வைத்துள்ளார்.
சம்பவத் தன்று, ஹேமல தாவும் ஜெய லட்சுமியும் தனித் தனியாக படுத்து உறங்கியுள்ளனர்.
இதுதான் சரியான தருணம் என்று கருதிய பால முருகன், முதலில் ஹேமலதா வின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். பிறகு, ஜெயலட்சுமியை கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டை பூட்டி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள கடற் கரைக்குச் சென் றுள்ளார். அதிகாலை மூன்று மணி யளவில் கடலில் தற்கொலை செய்ய முயன் றுள்ளார் பாலமுருகன்.
ஆனால், கடல் அலை அவரை வெளியே தள்ளியுள்ளது. இதனால், கடற்கரை வழியாக மனம் போன போக்கில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழி யாக வந்த ரோந்து போலீஸார், பால முருகனிடம் விசாரித் துள்ளனர். அவர்களிடம் அம்மா, தங்கையை கொலை செய்த தகவலைத் தெரிவித் ததோடு,
தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக விரக்தி யுடன் தெரிவித் துள்ளார். இதை யடுத்து பால முருகனை நாங்கள் கைது செய்தோம்"என்றனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகை யில், "இந்த வழக்கில் பால முருகனும் தற்கொலை செய்தி ருந்தால் வழக்கில் விசாரணை கோணமே மாறி யிருக்கும்.
பால முருகன், தான் வேலை பார்த்த அலுவலக த்தில், மதுரையில் உள்ள இடம் வில்லங்க த்தில் இருப்ப தாகக் காரணம் சொல்லி அடிக்கடி விடுமுறை எடுத்துள்ளார்.
அது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்த தயாராக இருந்தோம். அதற்குள் பால முருகன் எங்களிடம் சிக்கி விட்டார்" என்றார்.
பால முருகனுடன் வேலைப் பார்த்தவர்கள் கூறுகையில், பால முருகன், மருத்து வராகவே ஆசைப்பட்டார்.
ஆனால், அவரை வீட்டில் உள்ளவர்கள் பொறியியல் படிக்க வைத்துள்ளனர். இந்த மன வருத்தம் அவரிடம் இருந்தது.
அதோடு அப்பா மீது அதிக பாசம் வைத்திருந்த பால முருகன், அவரது இறப்புக்குப் பிறகு முற்றிலும் மாறி விட்டார். அலுவலக த்தில் கூட யாரிடமும் பேச மாட்டார்" என்றனர்.