விமான ஊழியரை செருப்பால் அடித்த எம்.பி !

ஏர் இந்தியா ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.பி.யான ரவீந்திர கெயிக்வாட் தன் மீது தவறே இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
விமான ஊழியரை செருப்பால் அடித்த எம்.பி !
கடந்த மாதம் ரவீந்திர கெயிக்வாட் புனேவில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது, ரவீந்திர கெயிக்வாட்டுக்கு முதல் வகுப்பு இருக்கை தராமல் இரண்டாம் வகுப்பு இருக்கை தரப்பட்டது. 

அதனால் கோப மடைந்த ரவீந்திர கெயிக்வாட், விமான ஊழியரை கடுமை யாக தாக்கி யதோடு மட்டு மல்லாமல், செருப்பால் 25 முறைக்கு மேல் அடித்திரு க்கிறார். 

ஆனால் அந்த விமானத் தில் முதல் வகுப்பு இருக்கையே கிடையாது. நடந்த இந்த பிரச்னையில் 'என் தவறு எதுவும் கிடையாது. 

எனவே என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. அந்த விமான ஊழியரை முதலில் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்' என்று ரவீந்திர கெயிக்வாட் பதிலளித் துள்ளார்.

இந்த சம்பவத்து க்கு பிறகு, இனி ஏர் இந்தியா விமானங் களில் ரவீந்திர கெயிக்வாட் பயணம் செய்யக் கூடாது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. 
இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பும் ஏர் இந்தியா விமானங்களில் மட்டு மல்லாமல், அனைத்து இந்திய விமானங்களிலும் ரவீந்திர கெயிக்வாட் பயணம் செய்யத் தடை விதித்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நாடாளு மன்றத்துக்கு வருகை தராமல் இருந்த கெயிக்வாட், இன்று வந்துள்ளார். அப்போது ஏர் இந்தியா ஊழியரை தாக்கிய சம்பவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப் பட்டது. 

அதற்கு பதிலளித்த கெயிக்வாட், என் மீது எந்த தவறும் இல்லை. ஏர் இந்தியா ஊழியர் என்னை தகாத வார்த்தை களால் திட்டினார். 
என்னால் அந்த ஊழியரிடமும், ஏர் இந்தியா நிறுவனத் திடமும் மன்னிப்பு கேட்க முடியாது. ஏர் இந்தியா நிறுவனம் எனக்கு அநீதி இழைத்து விட்டது”, என்று திட்ட வட்டமாக தெரிவித் துள்ளார்.

ஏர் இந்தியா ஊழியரிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று கெயிக்வாட் மறுத்து வருவது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. சமூக வலை தளங்களில் நெட்டிசன்ஸ் கெயிக்வாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings