முன்னாள் கணவரான தொலைகாட்சி நடிகர் கிஷோர் சத்யா என் வாழ்க்கை யை நாசமாக்கி விட்டார் என்று நடிகை சார்மிளா புகார் கூறினார். இதனை மறுத்த கிஷோர்.
தன் மீது குற்றம் சாட்டும் சார்மிளா போதைக்கு அடிமை யானவர் என்று கூறியுள்ளார்.
ஒயிலாட்டம், கிழக்கே போகும்பாட்டு, முஸ்தபா, நான், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித் துள்ளவர் சார்மிளா. மலை யாளத்திலும் ஏராளமான படங்களில் நடித் துள்ளார்.
இவர் இரண்டு தடவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். முன்னாள் கணவர் தனது வாழ்க்கை யை நாசமாக்கி விட்டதாக அவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இது குறித்து சார்மிளா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
'நான், 'கடல்' என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருந்த போது நடிகர் பாபு அண்டனி யுடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் காதல் வயப்பட் டோம்.
பின்னர் திருமணம் செய்து கொள்ளா மலே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தோம். ஒரு கட்டத்தில் அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளானேன். அதன் பின் தொலைகாட்சி தொடர்களில் நடித்த கிஷோர் சத்யாவுக்கும் எனக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம். சில நாட்கள் மகிழ்ச்சி யாக வாழ்ந்தோம்.
திருமண த்துக்கு பின் நடிக்கக் கூடாது என்று தடை போட்டார். இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைமை ஏற்பட்டது. அப்போது விக்ரமுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதிலும் நடிக்க முடிய வில்லை.
அதன்பின் என்னை பிரிந்து அவர் ஷார்ஜா சென்று விட்டார். சில வருடங்கள் கழித்து நானும் ஷார்ஜாவுக்கு சென்றேன். அங்கு அவருடன் சேர்ந்து வாழ்ந்தேன்.
அப்போது அவரது நடவடிக்கை களில் மாற்றம் தெரிந்தது. பிரபல மாவதற் காகவே என்னை அவர் மணந்தார் என்று புரிந்து கொண்டேன். அவரால் எனது வாழ்க் கையே நாசமாகி விட்டது.' இவ்வாறு சார்மிளா கூறினார்.
இதற்கு நடிகர் கிஷோர் சத்யா பதில் அளித்துள்ளார் அவர் கூறியதாவது:-
'சார்மிளா ஒருபோதும் எனக்கு மனைவி யாக வாழ்ந்தது இல்லை. மனம் ஒத்துப் போனால் தான் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
ஆனால் எங்களு க்குள் அது இருந்ததே இல்லை. அடிவாரம் படப்பிடிப் பில் சார்மிளா மன அழுத்தத்தில் இருந்தார்.
அவரை சகஜ நிலைக்கு கொண்டு வர நானும், படக் குழுவினரும் உதவினோம். படப் பிடிப்பின்போது சார்மிளாவுக்கு என் மீது காதல் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
நான் திருமணத்துக்கு மறுத்தேன். உடனே தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதனால் வேறு வழியி ல்லாமல் சம்மதித்தேன்.
அப்போது எனக்கு 22 வயது. பின்னர் ஷார்ஜாவில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டேன். சார்மிளாவும் அங்கே வந்து விட்டார்.
அதன் பின் தான் அவருக்கு குடிப்பழ க்கமும் போதை பழக்கமும் இருந்தது எனக்கு தெரிய வந்தது. அவர் போதைக்கு அடிமையாகி இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
இதனால் அவரை விவாகரத்து செய்யும் படி எனது பெற்றோர்கள் வற்புறுத் தினார்கள். அதன்பிறகு கேரளாவுக்கு திரும்பி வேறு பெண்ணை மணந்தேன்'. இவ்வாறு கிஷோர் சத்யா கூறி யுள்ளார்.