நடிகை நந்தினிக்காக சிறைக்குச் சென்றான் கார்த்திக் என்று அவரது அம்மா சாந்தி தெரிவித்தார். அதை நந்தினி முற்றிலும் மறுத்துள்ளார்.
டி.வி.சீரியல் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் என்ற கார்த்திக், சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்குப் பிறகு, தினமும் ஒரு தகவல் பூதாகரமாக வெடித்து வருகிறது. கார்த்திக்கின் கடைசி ஆசையான, காதலி வெண்ணிலா வின் கல்லறை அருகே அவரது உடல் புதைக்கப் பட்டது.
இது, நந்தினி குடும்பத்தி னருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கார்த்திக்கின் அம்மா சாந்தி, நடிகை நந்தினிக்காக கார்த்திக் சிறைக்குச் சென்றான் என்ற பரபரப்பான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாந்தி கூறுகையில், கார்த்திக்கை நந்தினி காதலித்த போது, நடிகை என்று எங்களுக்குத் தெரியாது. திருமணத்துக்கு முன்பே எங்கள் வீட்டில் நந்தினி தங்கியுள்ளார்.
அப்போது, அவருக்கு அபார்ஷன் ஏற்பட்ட தாக அவரே என்னிடம் சொல்லி யுள்ளார். அந்தச் சமயத்தில், நாங்கள் சென்னை காரம் பாக்கத்தில் குடியி ருந்தோம்.
வெண்ணிலா என்ற பெண்ணுடன் கார்த்திக் பழகியது நந்தினிக்குத் தெரியும். வெண்ணிலா தற்கொலை க்கு, நந்தினியும் ஒரு காரணம். கார்த்திக்கை மிரட்டித் தான் நந்தினி திருமணம் செய்து கொண்டார்.
அரக்கோணம் அருகே உள்ள சோளிங்கரில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அன்றைய தினம் கூட கார்த்திக் கறுப்பு வேட்டியை அணிந்து சென்றான்.
அதன் பிறகு, மதுரையில் திருமணம் நடந்தது. வெண்ணிலா வழக்கில், நந்தினியின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடக் கூடாது என்று தான் கார்த்திக் சிறைக்குச் சென்றான்.
நந்தினியின் அப்பா ராஜேந்திர னிடம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கார்த்திக் கடன் வாங்கியது உண்மை தான். ஆனால், பல லட்சங்கள் வாங்கிய தாக நந்தினியின் குடும்பத்தினர் சொல்வது பொய்.
நந்தினிக்கு டான்ஸ் என்றால் ரொம்பப் பிடிக்கும். கார்த்தி க்கும், நந்தினி க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு க்கு,
தனியார் தொலைக் காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோதான் காரணம். அதில் கார்த்தி க்குக்கு காலில் காயமடைந்த பிறகு, நந்தினியின் நடவடிக்கை மாறி விட்டது.
கார்த்திக்குக்கு நந்தினியை விட வெண்ணிலா வைத்தான் அதிகம் பிடிக்கும். இதனால் அவனுடைய கடைசி ஆசையை நிறை வேற்றி வைத்துள்ளோம் என்றார் கண்ணீர் மல்க.
இது குறித்து நந்தினி யிடம் கேட்டோம். கார்த்திக்கை கடந்த 2015-ம் ஆண்டு சந்தித்தது முதல் இன்று வரை அவரை நான் காதலித்துக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய காதல் உண்மையானது.
என்னைப் பற்றி கார்த்திக்கின் குடும்பத்தினர் அவதூறான தகவல் களைச் சொல்லி வருகின்றனர்.
அதில், எந்த உண்மையும் இல்லை. குறிப்பாக, எனக்கு அபார்ஷன் ஏற்பட் டதாகச் சொல்வது பொய். கார்த்திக்கை ஒரு குழந்தையைப் போல நான் பார்த்தேன்.
கார்த்திக் குடும்பத்தினர் சொல்லும் குற்றச் சாட்டுக்களை அவருக்காக பொறுத்துக் கொண்டு இருக்கிறேன். எல்லை மீறினால், என்னிடமுள்ள ஆதாரங் களை வெளியிடுவேன்.
பாதிக்கப்பட்ட என்னையும் என் குடும்பத் தினரையும் பழி சொல்ல கார்த்திக் குடும்பத்தினருக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஏற்கெனவே கார்த்திக் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வெண்ணிலா, அபிநயா ஆகியோர் குறித்த தகவல்கள் திருமணத்துக்கு முன்புவரை எனக்குத் தெரியாது.
வெண்ணிலா தற்கொலைக்கு நான் காரணம் என்றால், போலீஸார் ஏன் என்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. வெண்ணிலாவுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டது.
அந்தப் பெண்ணை கார்த்திக் விரும்பி இருந்தால், அவரையே திருமணம் செய்து வைத்திருக் கலாம். கார்த்திக்கூட என் காதலைப் புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கும் போது, என் மனம் வேதனை யடைகிறது.
தன்னுடைய கடைசி ஆசையாக வெண்ணிலா கல்லறை யில் கார்த்தி க்கை புதைத்த பிறகு, நான் சொல்வ தற்கு ஒன்று மில்லை.
கார்த்திக்கை நான் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகச் சொல்வதும் உண்மையல்ல. ஏனெனில் கார்த்திக் ஒரு குத்துச் சண்டை வீரர்.
பிரச்னை என்று வந்தால், முதலில் அடித்து விட்டு தான் பேசுவார். அப்படிப்பட்ட கார்த்திக்கை நான் எப்படி மிரட்டி திருமணம் செய்து கொள்ள முடியும் என்றார்.
கார்த்திக்கின் முகநூல் பக்கத்தில், அவருடைய அம்மா சாந்தி மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் லைவ் வீடியோக்களைப் பதிவு செய் துள்ளனர்.
அந்த வீடியோக்களில் நடிகை நந்தினி குறித்த குற்றச் சாட்டுகளையும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக்கின் தற்கொலைக்குக் காரணம் யார்? என்ற தலைப்பில் ஒவ்வொருவரும் பேட்டி கொடுக்கின்றனர்.
அதை நடிகை நந்தினியும் பார்த்துள்ளார். அவர்களது பேட்டிகள் தனக்கு மன வேதனை யளிப்பதாக நந்தினி தெரிவித்தார்.