வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி !

வட கொரியா வின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி அடைந் துள்ளதாக அமெரிக்கா வின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் செய்தி வெளியிட் டுள்ளது.
வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி !
வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனை மற்றும் அணு ஆயுதச் சோதனை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. 

வடகொரியா வின் அணுசக்தித் திட்டங் களுக்கு எதிராக கடுமையான நடவடி க்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. 

அமெரிக்கா வின் எச்சரிக்கையை வடகொரியா பொருட்படுத்த வில்லை. வடகொரியா தன் ஆயுத பலத்தை பெருக்கி வருகிறது.

கடந்த வாரம் அமெரிக்கா சிரியா ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதே போன்று வடகொரியா மீது தாக்குதல் நடத்த வாய்ப் பிருப்பதாக தகவல் வெளியானது.
'அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் நாடுகளை வாழ விட்டு விட மாட்டோம்' என வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக தெரிவித்தது.

இந்த சூழலில் தான் வட கொரியா இன்று காலை ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்து ள்ளதாக 

முதலில் தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டது. இச்செய்தியை அமெரிக்கா வின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings