ஓ பி எஸ் அணியின் வேன்கள் பறிமுதல் !

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக ஐந்து வேன்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவை ஓ.பன்னீர் செல்வம் அணிக்குச் சொந்தமான வேன்கள் என்று கூறப்படுகிறது. 
ஓ பி எஸ் அணியின் வேன்கள் பறிமுதல் !
ஆர்.கே. நகரில் வரும் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க இரண்டாக பிரிந்து போட்டி யிடுகிறது. 

சசிகலா அணி சார்பில் டி.டி.வி. தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியி டுகின்றனர். 

மேலும் தி.மு.க சார்பில் மருது கணேஷும், ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபாவும் தேர்தல் களத்தில் உள்ளனர். 

கடந்த சில நாள்களாக, ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். 

மேலும், தொகுதியின் பல்வேறு இடங்களில் வாக்காள ர்களுக்கு பணப் பட்டு வாடாவும் செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. 
அனைத்துக் கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கி ன்றனர். இன்று காலை தினகரன் அணி மீது தீபா தேர்தல் ஆணைய த்தில் புகார் அளித்தார். 

டி.டி.வி.தினகரன் அணியினர் பணப் பட்டுவாடா செய்வதாக சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் ஓ.பன்னீர் செல்வம் அணி புகார் அளித்தது. 

புகார்கள் ஒருபுறம் இருக்க தேர்தல் ஆணையத் தால் பலர் கைது செய்யப் பட்டும் உள்ளனர்.

முறை கேடுகளைத் தடுக்க ஆர்.கே.நகரில் 70 பறக்கும் படை குழுக்கள் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார். 

இந்த பறக்கும் படையில் மத்திய பாதுகாப்புப் படையினரும் இடம் பெற்று ள்ளனர். 
இந்நிலை யில் தேர்தல் விதிகளை மீறியதாக ஓ.பன்னீர் செல்வம் அணிக்குச் சொந்தமான ஐந்து வேன்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. 

விதிமுறை களை மீறி அ.தி.மு.க கொடிகளைக் கட்டி பிரசாரம் மேற்கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings