கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் காவல் துறையி னரால் தேடப்பட்டு வந்த சசிகலாவின் கார் டிரைவர் பற்றி அதிர வைக்கும் தகவல் வெளியாகி யுள்ளது.
நீலகிரி மாவட்ட த்தில், 900 ஏக்கரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது.
இந்த எஸ்டேட்டின் நடுவில் மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந் துள்ளது. இந்த பங்களா ஜெயலலிதா அவ்வப் போது ஓய்வெடு க்கும் இடமாக இருந்து வந்தது.
'ஜெயலலிதா இறந்த பிறகு இந்த பங்களா இனி யாருக்குச் சேரப் போகிறது' என்று மக்களின் அங்க லாய்ப்பாக இருந்து வந்த நிலையில் திடீரென,
கடந்த 24-ம் தேதி கொடநாடு பங்களாவில் பணிபுரிந்து கொண்டி ருந்த காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார்.
மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரைத் தாக்கி விட்டு எஸ்டேட்டில் உள்ள பங்களாவு க்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங் களைக் கொள்ளை யடித்துச் சென்றார்கள்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை யடுத்து, நீலகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் முரளிரம்பா தலைமையிலான போலீஸார் கொடநாடு பங்களாவுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பிறகு இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய வர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. பல இடங்களில் விசாரணை மேற் கொண்டனர்.
இந்த விசாரணையில், கொடநாடு பங்களாவின் காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் முக்கிய நபராக, தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப் பட்டவர் கனகராஜ். இவர் போயஸ் கார்டன் முன்னாள் கார் டிரைவர்.
இந்நிலை யில், டிரைவர் கனகராஜ் நேற்றிரவு 8.30 மணிக்கு ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ் சாலையில் இரு சக்கர வாகன த்தில் சென்று கொண்டி ருந்த போது எதிரே வந்த இனோவா கார் மோதி உயிரிழந்தார்.
யார் இந்தக் கனகராஜ்
கனகராஜின் சொந்த ஊர் எடப்பாடி அருகே உள்ள சித்திரம் பாளையம். இவரின் அண்ணன் தனபால் அ.தி.மு.க. வில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவராக இருந்தவர்.
பிறகு பதவிநீக்கம் செய்யப் பட்டார். இவர்கள் முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் பங்காளி முறையைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலமாக கனகராஜ், போயஸ் கார்டனில் டிரைவர் வேலை க்குச் சென்றார். போயஸ் கார்டனில் சசிகலா வின் தனிப்பட்ட கார் டிரைவராக ஐந்தாண்டுகள் பணியா ற்றினார்.
பிறகு போயஸ் கார்டனி லிருந்து மூன்றாண்டு களுக்கு முன்பே வெளியே வந்து விட்டார். இந்நிலை யில் அவரின் சித்தி வீடு ஆத்தூரை அடுத்த சந்தனகிரி சக்திநகரில் இருக்கிறது.
அந்த வீட்டில் மூன்று நாள்களாகத் தங்கியி ருந்தார். நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லும் போது விபத்து ஏற்பட்டது.
உடனே ‘108’ ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தற்போது கனகராஜின் உடல் ஆத்தூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப் பட்டுள்ளது.
இதனிடையே, கொடநாடு காவலாளி கொலை வழக்கில் நேற்று கேரளப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப் பட்ட நிலையில் இன்று ஊட்டி துணைக் கண்காணிப் பாளர் முரளி ரம்பா தலைமை யில் தனிப்படை கேரளா விரைந்தது.
கடந்த இரண்டு நாளாக கேரள மாநிலம் திருச்சூர் மற்றும் மலப்புரம் பகுதியில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் திருச்சூரைச் சேர்ந்த சதிஷ், சந்தோஷ், தீபக் என்பவர் களிடமும் மற்றும் மலப்புர த்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் சந்தேக த்தின் பேரில் விசாரணை நடை பெற்று வருகிறது.