அமெரிக்காவில் விமானத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்ட பயணி !

அமெரிக்கா வில் சிகோகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் யுனைட்டெட் எக்ஸ்பிரஸ் விமானம் பயணிகளால் நிரம்பி வழிந்தது. 
அமெரிக்காவில் விமானத்தில் இருந்து இழுத்து செல்லப்பட்ட பயணி !
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதை கண்டறிந்த அந்த விமான நிறுவனம், 4 பயணிகளை தாமாக முன் வந்து இறங்கு மாறு கேட்டுக் கொண்டது.

அப்படி இறங்குகிற பயணி களுக்கு தலா 400 டாலர் (சுமார் ரூ. 26 ஆயிரம்) தருவதாக கூறியது. யாரும் முன் வரவில்லை.

அடுத்து தலா 800 டாலர் (சுமார் ரூ.52 ஆயிரம்) தருவதாக கூறியது. அப்படியும் யாரும் முன்வர வில்லை. கடைசியில் அந்த நிறுவனமே 4 பயணிகளை தேர்ந்தெடுத்து வெளியேற்ற முடிவு செய்தது.

அதன் படி 3 பயணிகள் வெளியேறினர். 4- வதாக வெளியேற்ற தேர்ந்தெடுக்கப் பட்ட பயணி வெளியேற மறுத்தார். 

அவர் 'நான் வீட்டுக்கு செல்ல வேண்டும், வீட்டுக்கு செல்ல வேண்டும்' என்று கதற கதற விமானத்தில் இருந்து இழுத்துச் செல்லப் பட்டார். அவரது உதட்டில் ரத்தம் வடிந்தது.
இதை ஒரு பயணி ரகசியமாக படம் பிடித்து ஆன் லைனில் வெளியிட அது வைரலாக பரவியது. அதைக் கண்டவர்கள் விமான நிறுவனம் மீது ஆத்திரம் அடைந்தனர்.

இனி அந்த விமான நிறுவனத்தை புறக்கணிப்போம் என்று அவர்கள் சமூக வலைத் தளங்களில் கொதித் தெழுந்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அந்நிறுவனம் தரப்பில், நடந்த சம்பவ த்துக்காக மன்னிப்பு கேட்கப் பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது. 
ஊழியர்கள் கடுமையாக தண்டிக் கப்பட வேண்டும் என்று சமூக வலை தளத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
இதை யடுத்து அந்தப் பயணியை இழுத்து சென்ற விமான பாதுகாப்பு ஊழியர் விடுமுறையில் அனுப்பப் பட்டார் என தெரிய வந்துள்ளது.
Tags:
Privacy and cookie settings