தமிழகத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப் படுகிறது. 43,051 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும்,
2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவதாகவும் தமிழக அரசு தெரிவித் துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடை பெற உள்ளது.
43,051 சொட்டு மருந்து மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள்
மற்றும் முக்கிய மான இடங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடு களும் செய்யப் பட்டுள்ளன. இந்த சொட்டு மருந்து வழங்கும் மையங்கள், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
அனைத்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கும், கடந்த 2-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப் பட்டது.
இரண்டாம் தவணை, 30-04-2017 (நாளை) அன்று சொட்டு மருந்து கொடுக்கப் பட வேண்டும்.
தேசிய தடுப்பூசி அட்ட வணைப்படி, ஓரிரு நாள்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப் பட்டிருந்தாலும், முகாம் நாள்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
புதிதாகப் பிறந்த குழந்தை களுக்கும் முகாம் நாள்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசிய மாகும். சொட்டு மருந்து வழங்கப் படும் குழந்தை களுக்கு, இடது சுண்டு விரலில் மை வைக்கப் படுகிறது.
இது, விடுபடும் குழந்தை களைக் கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க, தனியார் மருத்து வர்களும் கேட்டுக் கொள்ளப் பட்டுள் ளார்கள்.
இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர் களின் குழந்தை களுக்கும், முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக, முக்கியப் பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், ரயில் நிலை யங்கள்,
விமான நிலையங்களில் 1652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு, சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தை களுக்கு சொட்டு மருந்து வழங்கப் பட உள்ளது.
போலியோ சொட்டு மருந்து முகாமில், சுமார் 2 லட்சத்து க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன் வாடிப் பணியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் தன்னார் வலர்கள் ஈடுபடு கிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ் நாட்டில் சிறப்பாக நடை பெறுவதால், தமிழ்நாடு 13-வது வருடமாக போலியோ இல்லாத நிலையை அடைந் துள்ளது.
இந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்வதும், குழந்தை களை போலியோ வைரஸ் பாதிப்பி லிருந்து பாது காப்பதும் மிகவும் இன்றி யமையாதது.
பெற்றோர்கள் இந்த அரிய சந்தர் ப்பத்தை பயன் படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்று கூறப் பட்டுள்ளது.