துளிர் விடும் அரசியல் ஆசை.. ரஜினி !

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோஷம் மீண்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் வலுக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் அனுபவம் என்ற வார்த்தையைத் தான் 
துளிர் விடும் அரசியல் ஆசை.. ரஜினி !
இதுவரை தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்து வைத்தி ருக்கிறது. ஆனால் 'அரசியல் ஆசை அனுபவம்' என்ற புதிய வார்த்தை கண்டு பிடிக்கப் பட்டது ரஜினிக்குப் பிறகு தான்.

1995 ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமை யிலான ஆட்சி நடந்த சமயம், 'பாட்ஷா' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப் பட்டது. 

ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கிய மானதெனக் கருதப்படும் இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்றைக்கு அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன்.

உணர்ச்சிபூர்வமான மனிதரான ரஜினி, மேடையில் அமர்ந்திருந்த ஆர்.எம் வீரப்பன் படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி அ.தி.மு.க அரசின் ஒரு அமைச்சர் 

என்பதையும் மறந்து தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவியிருப்பதாக பேசி, ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் வாழ்விற்கு குண்டு வைத்தார்.

அ.தி.மு.க அரசை மறைமுகமாக விமர்சித்துப் பேசிய அவரது பேச்சினால் ஆர்.எம். வீரப்பன் அமைச்சர் பதவியி லிருந்து ஓரம் கட்டப்பட்டார். 
அதன் பிறகு ரஜினி ஜெயலலிதா வுக்கு எதிராக விம்பமாக கட்டமைக்கப் பட்டார். அடுத்த சில நாட்களில் ரஜினியின் நடவடிக்கைகள், பேச்சு மற்றும் அறிக்கைகள் 

அவர் விரைவில் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவார் என்பதற்கான முன்னோட்ட ங்களாக அமைந்தன.

தமிழகம் முழுவதிலும் ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சித் தொண்டர்க ளுக்கு இணையாக பரபரப்பாகின. 

ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் அவர் அடுத்து வந்த தேர்தலில் தி.மு.க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டணிக்கு பத்திரிகை யாளர் சோவின் அறிவுறுத்தலில் ஆதரவு தெரிவித்தார். 

முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் மக்கள் விரோத செயல்களால் ஏற்கனவே அதிருப்தியி லிருந்து தமிழக மக்களின் எண்ண த்திற்கு, 

பொதுவான மனிதரான ரஜினியின் குரல் கூடுதல் அழுத்தம் தர அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. தி.மு.க கூட்டணி வென்று தி.மு.க ஆட்சிய மைத்தது.
அன்று தொடங்கியதுதான் ரஜினியின் 'அரசியல் ஆசைப்' பயணம். பத்திரிகை யாளர் சோ உடன் ரஜினி தொடர்ந்து இணைப்பில் 

இருந்ததால் அக்கால கட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே அழுத்தமாக இருந்தது. 

ரஜினிக்கும் அந்த ஆசை இருந்தது பல படங்களில் வெளிப்பட்டது. எம்.ஜி. ஆரைப் போன்றே ரசிகர்களுடன் திரையில் உரையாட ஆரம்பித்தார் ரஜினி.

'முத்து' படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கதாநாயகன் ரஜினியின் வரவை எதிர்பார்த்து எல்லோரும் காத்திருக்க, "நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது. 

ஆனா வர வேண்டிய நேரத்திற்கு கண்டிப்பா வருவேன்" என அவர் கண்ணை அடித்துச் சொன்னதை அவர் தன் அரசியல் நுழைவை 

கோடிட்டுக் காட்டுகிறார் என புரிந்து கொண்டு திரும்ப திரும்ப வந்து தியேட்டரை நிறைத்து கைதட்டி ரசித்தார்கள் ரசிகர்கள்.
ரஜினி படங்களின் வெற்றிக்கான ஒரு இரகசியத்தை அந்த படத்தின் மூலம் தயாரிப் பாளர்கள் கண்டெடுத்தார்கள். அதைத் தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். 

அதே 'முத்து' படத்தில் வைரமுத்து கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு? காலத்தின் கையில் அது இருக்கு என ரஜினியின் அடுத்த படத்தின் வெற்றிக்கும் சேர்த்து பாட்டெ ழுதினார் வைரமுத்து.

தொடர்ந்து பல படங்களில் ரஜினியின் அரசியல் பஞ்ச் வசனங்கள் இடம் பெற ஆரம்பித்தன. 

படம் வெளியாகும் சமயம் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால் படத்திற்கு பரபரப்பு இன்னும் எகிறி விடும். 

இடைவெளி விட்டு படங்கள் வெளி வந்தாலும் வெளியீட்டுக்கு முன் திரைப் படத்தில் ரஜினியின் பரபரப்பான அரசியல் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி படத்தின் வெற்றியை உறுதி செய்தன.

படையப்பா'வில் 'என் வழி தனி வழி' என சீறியது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்பது வரை தன் படங்களின் வெற்றிக்காக 

தயாரிப்பாளர்களின் வார்த்தை களுக்கு கட்டுப்பட்டு பஞ்ச் வசனங்களை பேசி இந்த வெற்றியை தக்க வைத்துக் கொண்டார் ரஜினி. 
ஆனால் ரஜினி ஒரு 'வைக்கோல் கன்னுக்குட்டி' என்பதை மக்கள் உணர ஆரம்பித்த பின்னர் அவர் பற்றிய கவலைகளில் இருந்து விடுபட்டனர்.

தமிழக மக்கள் ரஜினியின் இந்த ஆடுபுலி ஆட்டத்தை புறந்தள்ளி விட்டாலும் ரசிகர்கள் தங்கள் ஆசையை கட்டுப் படுத்திக் கொள்ளாமல் ஒவ்வொரு படத்தின் 

திரையீட்டின் போதும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

திரையில் தன் அரசியல் ஆசையை ரஜினி வெளிப்ப டுத்தினாலும் தனிப்பட்ட வாழ்வில் அவர் எல்லோருக்கும் பொதுவான வனாக தன்னை வெளிப் படுத்திக் கொண்டார். 

இயல்பில் ரஜினி அரசியல் ஆசை கொண்டவர் தான் என்றாலும் 1990 களின் மத்தியில்தான் அவருக்கான அரசியல் கனவு பலிப்பதற்கான வாய்ப்புகள் கதவைத் திறந்து காத்திருந்தன. 

ஆனால் 'பாட்ஷா' வெளியீட்டின் போது அவருக்கு இருந்த எழுச்சியை அவர் பயன் படுத்திக் கொள்ளத் தவறினார். 

அப்படி ஒரு வாய்ப்பு இனி தனக்கு இல்லை என்பதை அவரும் பிற்காலத்தில் உணர்ந்தார். அதை உணர்த்தியவர்களில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான 'சோ'வும் ஒருவர்.
ரஜினி தன் அரசியல் ஆசையை தன்னிடம் அகற்றிக் கொண்டு ஆன் மிகத்தில் பற்றுக் கொள்ள ஆரம்பித்த பின்னர் அவரது படங்களின் வெற்றி சிறிது பாதிக்கப் பட்டது. 

2002 இல் வெளியான 'பாபா' படத்தில் தனது திரை வாழ்வின் முடிவில் தான் தேர்ந்தெடுக்கப் போவது ஆன்மிக வாழ்வை என்பதாக தன் நிலைப்பாட்டை தீர்க்கமாக முன் வைத்தார். 

ஆனால் அந்தப்படம் படுதோல்வி. ஆக ரசிகர்களுக் காகவாவது அவர் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அந்த படத்தின் மூலம் உருவானது. அப்போதும் அசைந்து கொடுக்க வில்லை ரஜினி. 

காரணம் சோ! உணர்ச்சிய வயப்பட்ட மனிதரான ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்பதை தனிப்பட்ட முறையில் அவரிடம் பலமுறை எடுத்துச் சொன்னவர் சோ. 

அதே சமயம் ஆன்மிக விஷயங் களில் ஈடுபாடு கொண்ட ரஜினி தன் பலம், பலவீனங்களை நன்கு அறிந்தவர், தெரிந்தவர்.

1996 தேர்தலில் அவரது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நடந்த பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் நுாற்றுக் கணக்கானோர் குழுமியிருந்த பொது 

வெளியில் தன் பதற்றத்தைக் குறைக்க உதட்டுக்கு ஓய்வு தராமல் தொடர்ச்சியாக சிகரெட்டுக்களை ஊதித் தள்ளியவர்.

ஒரு அரசியல்வாதிக் குரிய சிறு விஷயத்திலும் தன்னை பொருத்திக் கொள்ள முடியாத ஒருவர் பொதுவாழ்வில் 24 மணி நேரமும் இயங்குவது சாத்திய மற்றது என்பது அவரே உணர்ந்த விஷயம். 

ஒரு சட்டமன்றத் தேர்தலின் போது வெளியான அவரது திரைப்படம் ஒன்றில் அவர் சிகரெட் புகைக்கும் காட்சியைக் கண்டித்து படத்தின் பெட்டியை துாக்கிச் சென்றது நடந்தது.

அப்போதும் அதன் பிறகும் அரசியல் களத்தில் நேரடியாக தான் சந்தித்த சில நிகழ்வுகளால் தன் அரசியல் ஆசைக்கு ரஜினி மூட்டை கட்டி வைத்தார்.
ஆனாலும் விடாது கறுப்பாய் இன்று வரை ரஜினியை கட்சி தொடக்க வலியுறுத்தி வருகின்றனர் ரசிகர்கள். அரசியலுக்கு வரச் சொல்லி ரசிகர்கள் நடத்தும் சுவரொட்டி யுத்தத்தால் சினிமாவி லாவது அவர்களை திருப்திப் படுத்த 

அவ்வப்போது அரசியல் வசனங்களை பேசி வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் ரஜினிக்கே தெரியாமல் ரஜினிக்கென ஒரு கட்சியைத் தொடக்கி கொடியையும் அறிமுகப் படுத்தி ரஜினிக்கு அதிர்ச்சி தந்தது 

ஒரு ரசிகர் மன்றம். இப்படி ரஜினியின் அரசியல் ஆசைக்கு வெள்ளி விழா கொண்டாட வேண்டிய இன்றைய தருணம் வரை அவரது ரசிகர்க ளிடம் அந்த ஆசை பட்டுப் போகாமல் 

தான் உள்ளது. கடந்த 10 வருடங்களாக ரசிகர்களை அவர் முறையாகச் சந்திக்க வில்லை.

இது ரசிகர்களுக்கு பெரிய மனக் குறையாக இருப்பதாக அவருக்கு தகவல் சென்ற நிலையில் தான் எதிர்வரும் 12 ந் திகதிமுதல் 17 ம் திகதி வரை என 6 நாட்கள் சென்னையில் ரசிகர்களை 

சந்திப்பதாக மன்ற அமைப்பாளர் சத்திய நாராயணா மூலம் அறிவித் துள்ளார். அதிமுக பிளவு, பாஜகவின் ஆதரவு, இன்னும் ஸ்திரமாக இருக்கும் ரசிகர்களின் பலம் 
இவற்றை கூட்டிக் கழித்துப் பார்த்து ரஜினி இந்த முறை தன் அரசியல் ஆசையை செயல்படுத்தும் முடிவுக்கு வந்திருக் கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

இது தொடர்பாக ரஜினியின் திரையுலக சகாவான லதா இவ்வாறு கூறுகிறார்.

“அரசியலைப் பொறுத்த வரை அவரது முடிவு என்ன வென்று எனக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பு பவர்களில் 

நானும் ஒருத்தி. எம்.ஜி.ஆருடன் திரையுலக வாழ்வில் மட்டுமின்றி அவரது அரசியல் வாழ்க்கை யையும் கூர்ந்து கவனித்தவள் நான். மக்களின் மீதான எம்.ஜி.ஆரின் பாசம் அளப்பரியது.

மக்களை சந்திப்பதிலும் அவர்களின் குறைகளை கேட்டறி வதிலும் அவருக்கு அப்படி ஓர் ஆர்வம் இருக்கும். இந்த மனித நேயம் தான் அவரை சினிமாவிலும் அரசியலிலும் உச்சியில் உட்கார வைத்தது. 

பெரும் புகழ் அடைந்த பின்னரும் பழையதை மறக்காமல் அவர் எளிமை யாகவே இருந்தார். ரஜினியிடமும் அந்த சில குணங்களை கண்டு நான் ஆச்சர்யப் பட்டிருக் கிறேன்.

நல்ல மனிதர். எளிமை யானவர், மனித நேயவாதி. புகழின் உச்சிக்கு சென்ற பின்னரும் அன்று போலவே இன்றும் பாசாங் கற்றவராக பழகுபவர். இத்தனைக்கும் மேலாக மக்களின் மீது நிஜமான பாசம் கொண்டவர்.
யார் யாரோ அரசியலுக்கு வரும் போது ரஜினி போன்றவர் அதற்கு முழுத் தகுதி கொண்டவர். மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள 

வெற்றி டத்தை நிரப்ப அவர்களைப் போன்றே மக்கள் சக்தி மிக்க ஒருவர் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு நல்ல விஷயம். வரவேற்க வேண்டிய விஷயமும் கூட. 

ஆனால் எங்கும் எதிலும் நேர்மையை கடை பிடிக்க வேண்டும் என்ற அவரது ஒரே ஒரு சுபாவம் மட்டும்தான் அரசியலில் அவருக்கு ஒத்துவருமா எனத் தெரியவில்லை. 

எப்படியி ருந்தாலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் முதல் வாழ்த்து என்னுடை யதாகத் தான் இருக்கும் என்றார் லதா. 

உண்மையில் ரசிகர்க ளுடனான இந்த சந்திப்புக்கு இன்னொரு காரணம் உள்ளதாக சொல்கிறார்கள். தன் குடும்பத்தில் நிகழ்ந்த சில சம்பவங் களால் ரஜினி சமீப காலங்களாக மன முடைந்துள்ளார்.

தனது பழைய நெருங்கிய நண்பர்களுக்கு தானே தொலைபேசி செய்து பேசி அதிலிருந்து சற்று ஆறுத லடைகிறார்.

நீண்ட காலமாக ரசிகர்களை சந்திக்க வில்லை என்ற குறை ரசிகர்கள் மத்தியில் உள்ள நிலையில் ரசிகர்க ளுடனான 
அப்படி ஒரு சந்திப்பு தனக்கு மன நிம்மதியைத் தரும் என்பதால் அப்படி ஒரு ஏற்பாட்டை செய்யச் சொல்லி அவரே தான் தன் ரசிகர் மன்ற நிர்வாகி களுக்கு உத்தர விட்டார்.

தனது புதிய படமான எந்திரன் 2.0 வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களை சந்திப்பது அவர்களு க்கும் உற்சாகமாக இருக்கும் என்பதும் அவரது இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம்.

அரசியலில் இப்போதுள்ள சூழலில் அப்படியொரு சந்திப்பு பல யுகங்களுக்கு வழிவகுத்து விடும் 

என்பதால் தான் ரசிகர்களின் வற்புறுத்தலில் சந்திப்பு ஏற்பாடு செய்யப் படுகிறது என்பது போன்று சந்திப்பு திட்டமிடப் பட்டிருக்கிறது என்கிறார்கள் 

ரஜினிக்கு நெருக்கமாக வட்டாரத்தை சேர்ந்தவர்கள். இந்த சந்திப்பு முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட காரணங்களுக்காகத் தானே தவிர இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்கிறார்கள் அவர்கள்.

இதுதொடர்பாக பேசிய திரையுலகைச் சேர்ந்த ரஜினியின் நண்பர் ஒருவர், “ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார். 

எப்போதும் பரபரப்பை விரும்பாத மனிதர் அவர். நல்லவராக, நேர்மையாளராக இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு அது மட்டுமே தகுதி யில்லை. 

இயல்பில் யாருடனும் எதிர்ப்பைக் கடைப் பிடிப்பது அவருக்கு வராது. எந்தத் தலைவரை விமர்சித்தாரோ அவரிடம் சில வருடங்களில் நட்பு பாராட்டியவர் அவர்.
ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரான கங்கை அமரனை வீட்டுக்கு வர வழைத்து வாழ்த்தியவர். மறுநாளே, தான் யாரையுமே ஆதரிக்க வில்லை என அவசர கதியில் பின் வாங்கினார். 

இப்படி யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாத குணம் அரசியலுக்கு சற்றும் பொருந்தாது என்பதை அவரே அறிவார்.

அவருக்கு அரசியல் நெளிவு சுளிவுகள் அறவே வராது. மேலும் அவருக்கு தீவிரமான அரசியல் நிலைப்பாடு என்று ஒன்றும் இல்லை. ஆரம்பத்தி லிருந்தே அவரது குணம் இது தான். 

பா.ம.கவின் எதிர்ப்பில் பின்வாங்கி இனி தான் படங்களில் சிகரெட் புகைப்ப தில்லை என அறிவித்தது முதல் சமீபத்தில் சிறிய சர்ச்சைக்குப் பயந்து தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்வது வரை தான் 

எடுக்கும் எந்த முடிவிலும் சிறு எதிர்ப்பு வந்தாலும் கூட்டுக்குள் நத்தை உள்வாங்கிக் கொள்வது போல் ஒதுங்கிக் கொள்ளும் 

அவரது சுபாவம் அரசியலுக்கு துளியும் ஒத்துவராது. ஆரம்பத்தில் அவருக்கு அரசியல் ஆசை இருந்தது உண்மை தான்.

ஆனால் அரசியலில் தான் மட்டுமே நேர்மையா னவராக இருந்தால் மட்டும் போதாது. தன்னுடன் இருப்பவர் களும் அப்படி இருக்க வேண்டும். அப்படி எல்லோரையும் கட்டுப் படுத்த முடியா விட்டால் இருக்கும் 

புகழை இழக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்தே 'பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல்' என சாதுர்யமாக தனக்கென ஓர் நிலைப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்.

அதேசமயம் இனி ரஜினியே விரும்பினாலும் அதற்கான களம் இன்று இல்லை. ரஜினி ரசிகர்கள் பலர் பேரன் பேத்தி எடுத்து விட்டனர். எம்.ஜி.ஆர் திரையுலகில் பரபரப்பாக இயங்கிய நேரத்தில் கட்சித் தொடங்கினார்.
கட்சியைத் தொடக்கியது மட்டும் தான் அவர். மற்றவற்றை அவரது ரசிகர்கள் பார்த்துக் கொண்டார்கள். 

பல ஆண்டு காலம் நேரடி அரசியலில் அவர் பங்கு பெற்றிருந் ததால் அவரால் அரசியலில் நிலைக்க முடிந்தது. ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. அதுமட்டு மின்றி உடலளவிலும் ரஜினி முன்பு போல் இல்லை. 

அவரால் இன்றுள்ள அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்குவது என்பது முடியாத காரியம். அதனால் அவர் அரசியலுக்கு வருவார் என நான் நினைக்க வில்லை” என்றார்.

சோவின் மறைவுக்குப் பிறகு கடந்த பெப்ரவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, சோவைப் பற்றி சிலாகித்துச் சொன்ன விஷயம், அவரது கணிப்பு பற்றியது.

“எந்த ஒரு விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையில் ஆராய்ந்து அவர் தீர்வு சொல்வார்.

அது எப்போதும் சரியாகவே இருக்கும். ஒரு இக்கட்டான ஒரு சூழ்நிலையில் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். 

ஒரு முக்கியமான வழிகாட்டுதல் வேண்டும் என்றால் சோ வை கேட்டால் சரியான வழி கிடைக்கும். அது தெளிவைத் தரும்” என்றார்.

உதாரணத்திற்கு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இது பின்னாளில் பெரிய பிஸினஸ் ஆகும். 
ஏன் நீங்கள் ஏன் ஒரு அணியை வாங்கக் கூடாது' என்று ரஜினியை சோ கேட்டாராம். அது அப்படியே பலித்தது என பெருமிதப் பட்டார்

சாதாரண ஐ.பி.எல் ஆட்டத்துக்கே சோவின் கணிப்பை சிலாகிக்கும் ரஜினி, தன் அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கவும் அவரிடம் தான் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings