ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அணிகள் இணைந்தால் அதனை வரவேற்ப தாகவும் என்னை கிளம்பி போகச் சொன்னால் அரசியலை விட்டு ஒதுங்கும்
பற்றற்ற நிலையில் தான் தாம் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி யுள்ளது. முதல்வர் நாற்காலியை குறித்து சசிகலாவும் அவரது உறவினர்களும் நீண்ட காலமாக காத்திருக் கின்றனர்.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா குடும்பத் தினரின் சதி செயல்களை பகிரங்கப் படுத்தினார்.
ஆட்சியை கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதால் கூண்டோடு அவர்களை கட்சியை விட்டு நீக்கியதுடன் பல வழக்குகளில் சிறையி லடைத்தார்.
ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். ஆட்சியையும் அவர் கைப்பற்ற நினைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
துணைப் பொதுச் செயலராக....
இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தவிடு பொடியானது. சிறைக்குப் போகும் முன்னர் டிடிவி தினகரனை அதிமுக வின் துணை பொதுச் செயலராக நியமித்தார் சசிகலா.
இதை யடுத்து தினகரனும் கட்சி, ஆட்சி இரண்டையும் கைப்பற்று வதில் தீவிரம் காட்டி வருகிறார்.
முதல்வர் நாற்காலி ஆசை
இதன் ஒரு பகுதியாகவே ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரனே போட்டி யிடுகிறார். இத்தொகுதி யில் தினகரன் வென்றால் நிச்சயம் முதல்வர் நாற்காலி யில் அமர முயற்சிப்பார் என்றே கூறப் படுகிறது.
ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யும் அவரது ஆதரவா ளர்களும் இதற்கு இடம் அளிப் பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிரடி அறிவிப்பு
இதனிடையே புதிய தலைமுறை டிவியில் அக்னி பரீட்சை நிகழ்ச்சிக்கு பேட்டி யளித்த தினகரன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில் தினகரன் கூறியுள் ளதாவது:
இரு அணிகள் இணைந்தால் வரவேற்பு
ஆர்கே நகர் இடைத் தேர்தலு க்குப் பின்னர் அதிமுகவின் இரு அணிகளும் கை கோர்த்தால் அதனை வரவேற்க தயாராக இருக்கிறேன்.
அதிமுக எம்.எல்.ஏ க்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாங்கள் ஆட்சியைப் பார்த்து கொள்கிறோம். நீங்கள் சென்று வாருங்கள் என கூறி விட்டால் உடனே பை சொல்லி விட்டு கிளம்பி விடுவேன்.
பற்றற்ற நிலையில்....
அப்படி யான ஒரு பற்றற்ற நிலையில் தான் நான் இருக்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறி யுள்ளார். முதல்வர் நாற்காலி கனவில் இருக்கும் தினகரன் தாம் பற்றற்ற நிலையில் தான் இருக்கிறேன்
என கூறியி ருப்பதை அதிமுக வினரே நமுட்டு சிரிப்புடன் தான் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.