ஆர்.கே. நகரில் தேர்தல் நடக்குமா?

1 minute read
ஆர்.கே. நகர் தேர்தல் நடக்குமா... நடக்காதா என்பது டெல்லியில் இன்று (08-04-17) மாலை நடைபெற உள்ள தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஆர்.கே. நகரில் தேர்தல் நடக்குமா?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பு, வாக்காளர் களுக்குப் பணம் வழங்கு வதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும், பணத்துடன் ஆர்.கே.நகரில் சிலர் பிடிபடவும் செய்தார்கள். 

ஆர்.கே. நகர் தேர்தலை பணமில்லாத் தேர்தலாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் இருந்தாலும் பணம் கொடுப்பதைத் தடுக்கமுடியாமல் கையைப் பிசைந்து நின்றது.

வாக்காளர் களுக்குப் பணம்வரும் வழிகளை எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து வந்த தேர்தல் ஆணையம், தமிழக அமைச்சர்கள் வழியாகவே பண விநியோகம் நடப்பதை அறிந்து அதிர்ந்து போனது. 

தேர்தல் களத்தில் முன்னிலையில் நின்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறி வைத்த தேர்தல் ஆணையம், அது குறித்த தகவல்களை வருமானவரித் துறைக்கும் தெரிவித் திருந்தது. 

அதனைத் தொடர்ந்து நேற்று (07-04-17) காலை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, கல்குவாரி, அவருடைய உறவினர்கள் மற்றும் உதவி யாளர்கள் வீடுகள் எனப் பல இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தினர் வருமான வரித் துறையினர். 
அவர்கள் நடத்திய ரெய்டில் விஜயபாஸ்கர் வீட்டி லிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகக் கூறப் படுகிறது. தினகரன் அதில், ஆர்.கே.நகர்த் தொகுதியில் மொத்தம் உள்ள வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை, 

ஒரு வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர் களின் எண்ணிக்கை, அவர்களுக்குக் கொடுக்க பட்ட தொகையின் விபரங்கள் இருந்த தாகக் கூறப் படுகிறது. 

இந்த ஆவணங் களை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய த்துக்குத் தெரிவித்து ள்ளார்கள் அதிகாரிகள். 

இந்த நிலையில் இன்று காலை ஆர்.கே.நகரில் போட்டியிடும் மூன்று சுயேட்சை வேட் பாளர்கள் டெல்லிக்குச் சென்று தேர்தல் ஆணையர் களைச் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்து ள்ளார்கள்.

அந்தப் புகார் மனுவில், “அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப் பட்ட ரெய்டில் கைப்பற்ற பட்ட ஆவணங் களைத் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். 
ஆர்.கே.நகரில் வாக்களார் களுக்கு ஆயிரக் கணக்கில் அமைச்சர்கள் வழியாகவே பணம் செல்கிறது. எனவே, தேர்தல் களத்தில் நிற்கும் அ.தி.மு.க அம்மா அணியின் வேட்பாளர் தினகரனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்; 

இல்லை என்றால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று மூன்று சுயேட்சை வேட்பாளர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளதாகவும், அதில் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதா... வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings