உணவகங்களில் வசூலிக் கப்படும் சேவை கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்.
இது குறித்து ராம் விலாஸ் பஸ்வான் அவரது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய அரசு, சேவை கட்டணம் தொடர்பான புதிய விதிமுறை களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் படி, சேவை கட்டணம் என்பது இனி கட்டாயம் கிடையாது, விருப்பப் பட்டால் மட்டுமே வசூலிக்கப் பட வேண்டும். உணவகங்கள், வாடிக்கை யாளர்கள்
எவ்வளவு சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யக் கூடாது. அது வாடிக்கை யாளரின் விருப்ப த்துக்கு விட்டு விடப்பட வேண்டும்.
இந்த புதிய விதி முறைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப் பட்டு உள்ளது. சீக்கிரம், இது குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும்' என்று கூறி யுள்ளார்.