சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை !

பெங்களூரின் பெல்லந்துரு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 3 வயது சிறுமி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்.
சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை !
இந்த விஷயம் தெரிந்தவுடன் அந்தப் பகுதியில் உள்ள நபர்களும், குழந்தையின் பெற்றோரும் பள்ளியை முற்றுகை இட்டனர். இதை யடுத்து, குற்றம் செய்த பள்ளி ஆசிரியர் மஞ்சுநாத் கைது செய்யப் பட்டுள்ளார். 

சிறுமி பள்ளிக்கு வந்தவுடன், மஞ்சுநாத் அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி யுள்ளார். 

மாலையில், சிறுமிக்கு உடல் நிலை சரி இல்லாது போகவே, மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு தான், சிறுமி பாலியல் தொல்லை க்கு ஆளானது தெரிய வந்துள்ளது. 
மஞ்சு நாத்துக்கு தக்க தண்டனை வழங்கக் கோரி, பெல்லந்துரு பள்ளி முன்பு முற்றுகைப் போரட்டம் நடை பெற்றது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings