பணப் பரிவர்த்தனை, ப்ரியமான வர்களுடன் சாட்டிங், தொலைபேசி உரையாடல், வீடியோ சாட்டிங், கேம்ஸ், கூகுள் தேடல், உடல் நிலை பேண ஹெல்த் ஆப்ஸ்...
என எத்தனையோ வேலைகளுக்கு உதவுகிற கையடக்க ஸ்மார்ட் போன் நம் எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது.
அவன் செல்போன் இல்லைனா செத்துப் போயிடுவான்... என ஒரு திரைப்படத்தில் விளையாட்டாகச் சொல்வார்கள்.
அது உண்மையோ, பொய்யோ ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கை யோடு இரண்டறக் கலந்த ஓர் அங்கமாகி விட்டது என்பது மறுக்க முடியாதது.
பல சிம்கார்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு நீண்ட டாக்டைம் ஆஃபர்கள் வழங்கு கின்றன.
அதனாலேயே பலர், வேலை காரணங் களுக்காகவும், தங்கள் நண்பர்கள், உறவினர்களோடு பேசுவதற்காகவும் பல மணி நேரத்தை ஸ்மார்ட் போனிலேயே செலவழிக் கின்றனர். சார்ஜ் எடு... கொண்டாடு!
என்பது போல, தீரத் தீர சார்ஜ் ஏற்றி, பேசிப் பேசி மாய்ந்து போகிறார்கள் நம் மக்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய மான விஷயம் உண்டு.
ஸ்மார்ட் போனில் பல மணி நேரம் பேசும் போது, அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, (Radio Frequency Radiation - RF) கேட்கும் திறனை பாதிக்கிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட் போன் பயன் பாட்டை முற்றிலு மாகத் தவிர்க்க முடியாது தான். ஆனால் சில வழி முறைகளைப் பின் பற்றுவதன் மூலமாக கதிர் வீச்சின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
அவை என்னென்ன... பார்ப்போம்!
பேட்டரியில் உள்ள சார்ஜ் 15 சதவிகிதத் துக்கும் குறைவாக இருக்கும் போது கதிர்வீச்சு வெளிப்படும் அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் ஸ்மார்ட் போனில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
பேட்டரி சார்ஜ் ஆகிக் கொண்டிரு க்கும் போது ஸ்மார்ட் போனில் பேசவே கூடாது. மின்சாரம் தாக்கலாம். அதிக வெப்பம் காரணமாக, ஸ்மார்ட் போன் வெடித்து விடுவது கூட நிகழலாம்.
அதிக வெப்பம் மூளையையும் பாதிக்கும். மலிவு விலை ஸ்மார்ட் போன்களைப் பயன் படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சின் அளவு அதிகம்.
மூளை நரம்புகளின் செயல்திறன் பாதிக்கலாம். வளரும் குழந்தை களின் மூளை, இளைஞர் களை விட இரு மடங்கு அதிகமாக கதிர் வீச்சை உள்வாங்கும் ஆற்றல் உடையது.
எனவே, முடிந்த வரை குழந்தைகள் ஸ்மார்ட்போனில் இருந்து தள்ளியே இருக்க வேண்டும்.
அழுகிறார்கள், அடம் பிடிக்கிறார்கள் என்பதற் காக எல்லாம் அவர்களுக்கு ஸ்மார்ட் போன் கொடுத்து விளையாட அனுமதிக்க கூடாது. கர்ப்பிணிகள் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அது கருவில் இருக்கும் குழந்தை யையும் பாதிக்கும். பிற் காலத்தில் பிறக்கும் குழந்தைக்கு நடத்தைக் குறை பாடுகள் (Behaioral Difficulties) ஏற்பட வாய்ப்பு உண்டு.
வேலை காரணமாக, நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் பேச வேண்டியி ருப்பவர்கள், புளூடூத் ஹெட்செட் அல்லது தரமான இயர் போன்களைப் பயன் படுத்தலாம்.
அதுவும், 20 நிமிடங் களுக்கு மேல் தொடர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டிக் கொண்டே பல மணி நேரம் இயர் போன்களைப் பயன் படுத்து வதைத் தவிர்க்க வேண்டும்.
இதனால் கவனச் சிதறல் ஏற்படும். அதன் காரணமாக, விபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
20 நிமிடங்களுக்கு மேல் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஐந்து நிமிடங் களுக்கு ஒரு முறை ஸ்மார்ட் போனை வலது மற்றும் இடது காதுக்கு மாற்றி வைத்துப் பேச வேண்டும்.
யாரும் அருகில் இல்லாத நேரங்களில் ஸ்பீக்கர் மோடில் பேசலாம். இதனால், ஸ்மார்ட் போனில் இருந்து வெளியாகும் நேரடி கதிர்வீச்சு பாதிப்பைக் குறைக் கலாம்.
சட்டை பாக்கெட், பான்ட் பாக்கெட் ஆகிய வற்றில் ஸ்மார்ட்போன் வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப் புள்ளது.
அது போல, இறுக்க மான ஆடையை அணிந்து கொண்டு தரமற்ற ஸ்மார்ட் போனை பான்ட் பாக்கெட்டில் வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்க ளுக்கு விந்தணுக்கள் பாதிப்பு ஏற்படலாம்.
தோலில் கதிர்வீச்சு ஊடுருவு வதைத் தவிர்க்கும் 'ரேடியேஷன் டிஃபெண்டர் கேஸ்கள்' மார்கெட்டில் கிடைக் கின்றன. அவற்றை வாங்கிப் பயன் படுத்தலாம்..
பேட்டரியை அதிகச் சூடாக்கும் ஸ்மார்ட் போன்களைப் பயன் படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். இருட்டில் ஸ்மார்ட் போனின் திரையைப் பல மணி நேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இதனால் கண் நரம்புகள் பாதிக்கப் பட்டு, பார்வைக் குறைபாடு களும் ஏற்படலாம். இரவு தூங்கும் போது, தலையணையின் அடியில் ஸ்மார்ட் போன் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அப்படி வைத்திருந்தால், இரவு முழுவதும் அதன் கதிர்வீச்சு, மூளையைத் தாக்கும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன் படுத்துவது ஒன்றே, அதன் பாதிப்பி லிருந்து தப்பிக்க ஒரே வழி!