ஒலியை வெல்லப்போகும் காஷ்மீர் பெண் !

ஒலியை விட வேகமாகச் செல்லக் கூடிய அதிவேக ஜெட் விமானத்தை இயக்க விருக்கும் முதல் பெண் என்ற சாதனையை படைக்க விருக்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த இளம் பெண்.
ஒலியை வெல்லப்போகும் காஷ்மீர் பெண் !
காஷ்மீரைச் சேர்ந்த 21 வயது இளம்பென் ஆயிஷா அசிஸ். கடந்த வாரம் வணிக ரக விமானங்களை ஓட்டு வதற்கான பைலட் உரிமத்தைப் பெற்றார். 

தற்போது ஒலியை விட வேகமாகச் செல்ல கூடிய MIG-29 என்ற போர் விமானத்தை இயக்க விருக்கிறார். 

இச்சாதனை நிகழ்த்தப் பட்டால் இம்மாதிரி யான கனரக போர் விமானத்தை இயக்கக் கூடிய முதல் இந்தியப் பெண் என்ற அந்தஸ்த்தை பெறுபவர் ஆவார்.

இந்த ரக விமானத்தை ரஷ்ய விமான தளத்தில் இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ஆயிஷா தனது 16-ம் வயதிலேயே விமான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார். 
விமானி யாவதே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு வருபவர் விண்வெளி வரை பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.

வின்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சை தனது முன் மாதிரியாகக் கொண்டி ருக்கும் ஆயிஷா தன்னை போர் ரக விமானி யாக அறிவிப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings