மன அழுத்தத்தை துரத்துங்கள் இப்படி !

பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிக்கல் சைக்கா லஜிஸ்ட் சங்கீதா மது...
மன அழுத்தத்தை துரத்துங்கள் இப்படி !
பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துங்கள்!

வாழ்வில் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான சவால், பிரச்னை இருக்கும். நாம் ஒவ்வொரு செயலையும் எதிர் சிந்தனை இல்லாமல் அணுகும் போது, நம்முடைய பாசிட்டிவ் எனர்ஜி அனைவரையும் சென்றடையும்.

திட்டமிடுதல் முக்கியம்!

வேலைக்குச் செல்லும் பெண்கள் `வீட்டையும் அலுவலக த்தையும் பேலன்ஸ் செய்ய இயல வில்லை’ என வருத்தப் பட வேண்டாம். அடுத்த கட்டமாக எந்தப் பணியை எப்படிச் செய்வது என்பதைத் திட்ட மிட்டுச் செயல் படுத்த வேண்டும்.

குறை கூற வேண்டாமே!
ஒவ்வொரு நிமிடத் தையும் முழுமன துடன், சந்தோஷ மாகவும் பயனுள்ள தாகவும் செலவிட வேண்டும். `எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ 

என வருத்தப் பட்டுக் கொண்டு, மற்றவர் களைக் குறை கூறிக் கொண்டு இருப்பதில் பயனில்லை.

இலக்கை நோக்கிப் பயணியுங்கள்!

நம்முடைய இலக்கை சின்னச் சின்ன விஷயங் களில் இருந்து தொடங் குங்கள். எடுத்துக் காட்டாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்றால், 
மன அழுத்தத்தை துரத்துங்கள் இப்படி !
அதையே இலக்காக நினைத்து எழுந்திருக்கப் பழகுங்கள். அதைத் தொடர்ச்சி யாகப் பின்ப ற்றுங்கள். ஓர் இலக்கை அடைந் ததும், அடுத்த இலக்கை நோக்கிப் பயணி யுங்கள்.

உறவுக்கு மதிப்பு கொடுங்கள்!

சந்தோஷ மான மன நிலையை அடைய நம் மைச் சுற்றிலும் உள்ள உறவுகள் தரும் பலம் அவசியம். அதனால் ஒவ்வொரு உறவுக்கும் மதிப்பு கொடுங்கள்; உங்களுக்கு நன்மை தருவதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

டைரி எழுதலாம் வாங்க!

காலையில் எழுந்ததும் நேற்று நடைபெற்ற நல்ல விஷயங் களுக்கு நன்றி தெரிவித்து டைரியில் எழுதுங்கள். தொடர்ந்து இருபது நாள்கள் செய்தால், நாம் 21-வது நாள் மகிழ்ச்சி யான மன நிலைக்கு வந்து விடலாம். வாழ்த்துகள்!
Tags:
Privacy and cookie settings