சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கிய கார் ராட்சத கிரேன் இயந்திரம் மூலம் முதலில் பாதுகாப்பாக மீட்கப் பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு பேருந்தும் பாதுகாப்பாக மீட்கப் பட்டது. சென்னை அண்ணா சதுக்கத் திலிருந்து வடபழனி நோக்கி இன்று 25 ஜி என்ற மாநகர பேருந்து அண்ணா சாலை வழியாக சென்று கொண்டி ருந்தது.
அப்போது சர்ச் பார்க் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் நின்று விட்டு அந்த பேருந்து புறப்பட்டது.
திடீர் பள்ளம்
பின்னால் வந்து கொண்டிருந்த கார் அந்த பேருந்தை முந்த முயன்றது. அப்போது எதிர் பாராத விதமாக
சாலையில் பெரிய அளவிலான பள்ளம் திடீரென ஏற்பட்டு பேருந்து கவிழ்ந்தது. பேருந்துக்கு அருகே வந்த காரும் பள்ளத்தில் சிக்கியது.
மெட்ரோவால் துயரம்
இதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் போக்கு வரத்து திருப்பி விடப் பட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டது தான் இந்த பள்ளம்.
கார் முதலில் மீட்பு
இதை யடுத்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் வரவழைக்கப் பட்டனர். முதலில் கார், ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக மீட்கப் பட்டது.
பேருந்தும் மீட்பு
இதனைத் தொடர்ந்து பேருந்தும் கிரேன் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப் பட்டது. இந்த மீட்புப் பணிகளைப் பார்வை யிட நூற்றுக்கும் அதிகமாக பொது மக்கள் குவிந்தனர்.
இம்மீட்புப் பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வை யிட்டார்.