அம்மணமாய் கிடக்கிறான். ஆனால், அவனுடைய அம்மணம் வெளியே தெரிய வில்லை. உடலுக்குள் ஓட வேண்டிய ரத்தம், அவன் உடல் அம்மண த்தை மறைத்து வெளியே ஓடியது.
அவன் பெயர் மஸின் யூசிஃப். 13 வயது அவனுக்கு. உடலின் எரிச்சல் தாளாமல் கதறுகிறான். அவன் மீது தண்ணியை ஊற்று கிறார்கள். அவனுக்கு பாதிப்பு கம்மி தான்....
அதாவது பாதிக்கப் பட்ட மற்றவர் களோடு ஒப்பிடும் போது. சிறிது நேரத்தில் அமைதி யாகிறான். ஒரே நாளில் நலம் பெறுகிறான். மருத்துவ மனை அறையி லிருந்து வெளியே வருகிறான்.
நீலம், சிகப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கட்டம் போட்ட சட்டையைப் போட்டபடி, மருத்துவ மனை அறைகளை சுற்றி வருகிறான்.
அவனுடைய தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தங்கை என எல்லோருமே கடுமையாக பாதிக்கப் பட்டு அந்த மருத்துவ மனையில் கிடக் கிறார்கள்.
சாம்பல் நிற கரு விழிகளைக் கொண்ட அவன் கண்களி லிருந்து தாரை தாரையாக நீர் கொட்டுகிறது.
என்ன செய்வதென தெரியாமல், அங்கிருக்கும் படிக்கட்டில் அமைதி யாக உட்கார்ந்து, அருகே இருக்கும் ஜன்னலின் வழியே, மணலும், புகையும் சூழ்ந்த அந்த கந்தக பூமியைப் பார்த்துக் கொண்டி ருக்கிறான்.
துருக்கி - சிரியா எல்லையில் இருக்கும் ரெஹன்லி மருத்துவ மனையில் மஸின் யூசிஃபை போன்று இன்னும் பலரும் இருக்கி றார்கள். இன்னும் பலர் இறந்து போய் கிடக் கிறார்கள்...
கிளர்ச்சியா ளர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லி ரசாயன குண்டு களை சிரிய அரசு வீசியது. அது பொது மக்களை காவு வாங்கியது. 100 பேருக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
600 பேர் வரை படுகாய மடைந்து ள்ளனர். இது அமெரிக் காவின் கூற்று. மனிதத் திற்கு எதிரான நடவடிக்கை என்று இதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மறுநாளே சிரியாவில் ஏவுகணை தாக்குதலை நடத்தினார்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டை சிரிய அரசாங்கம் மறுக்கிறது. சிரிய அரசாங்கத்திற்கு துணை நிற்கும் ரஷ்யாவோ, சிரியா கிளர்ச்சி யாளர்கள் மீது குண்டுகளை வீசியது,
அது கிளர்ச்சி யாளர்களின் ரசாயன குடோனில் விழுந்தது. அதிலிருந்து வெளியேறிய ரசாயனங் களால் தான் அப்பாவி மக்கள் இறந்துள்ளனர் என்கிறது.
கடந்த மூன்று நாட்களாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வரும் அரசியல் இது தான். அரசியல் அப்படித் தான்.
அமெரிக்கா சரியா?, சிரியா சரியா?, ரஷ்யா சரியா? என்பதை ஆராய்வதை விட பாதிக்கப் பட்ட மக்களின் வலியை உணர்வது தான், இப்போதைக்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது.
இந்தியாவின் இன்றைய தலை முறையி னருக்கு உள்நாட்டுப் போர், கலவரம், போராட்டம், ரத்தம், ஷெல்லடி, ரசாயன குண்டு களைப்
பற்றிய விஷயங் களை உணர்வுப் பூர்வமாகத் தொடர்பு படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவே...
இருந்தும் இன்று சிரியாவில் பாதிக்கப் பட்டிருக்கும் அந்த மக்களின் வலி எத்தகையது என்பதை உணர அந்த ஆயுதத்தின் தன்மையை தெரிந்து கொள்ள வேண்டியி ருக்கிறது.
நரம்பின் உள் புகும் விஷம்...
தற்போது சிரியாவில் உபயோக ப்படுத்தி யிருக்கும் குண்டுகளில் சரின் ( Sarin ) என்ற ரசாயனம் இருப்பதாக உறுதி செய்யப் பட்டுள்ளது.
சரின்... ஒரு ரசாயன எமன். நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ரசாயன வினை பொருட்களில்" ( Nerve Agents ) சரின் ஒரு மிக மோசமான அரக்கன்.
1938ல், ஜெர்மனியில் சில ஆராய்ச்சி யாளர்கள் சேர்ந்து கண்டு பிடித்தது தான் இந்த சரின் ரசாயனம்.
1939ல் ஜெர்மனியின் ஆயுத உற்பத்திக் குழுவில் சரினைக் கொண்டு குண்டு களைத் தயாரி க்கும் ஒரு முடிவெடு க்கப்பட்டது. அதைத் தயாரிக்க மிகப் பெரிய ஆலைகளை ஜெர்மனி அரசு கட்ட மைத்தது.
ஆனால், அதிலிருந்து குண்டுகள் தயாராகி வருவதற்குள் இரண்டாம் உலகப் போரே முடிவுக்கு வந்திருந்தது. துளியள விற்கான சரின் நிமிடங்களில் மரணத்தை கொடுத்து விடும்.
அந்த மரணம் நிச்சயம் கொடுந் தண்டனையாக இருக்கும். சரின் ரசாயனத்தை சுவாசிக்கும் நொடி கண்களின் கருவிழிகள் இறுக ஆரம்பி க்கும்,
வாயில் நுரை தள்ளும், கை, கால்களில் வலிப்பு ஏற்படும், உடல் முழுக்க பற்றி எரிவது போன்ற எரிச்சல் ஏற்படும். மொத்த நரம்பு மண்டல மும் செய லிழந்துப் போகும்.
தோல் உருகி ரத்தம் சொட்ட, தன்னிலை யில்லாமல் சிறு நீரும், மலமும் உடலி லிருந்து வெளியேறும். இதை அனுபவித்து முடிக்கும்போது, மரணம் பரிசாகக் கிடைக்கும்.
இப்படித் தான் சிரியாவில் அந்த 17 குழந்தை கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்தி ருப்பார்கள். அன்று ஈழத்திலும் ஷெல்லடி களில் அந்த மக்கள் இப்படித் தான் மடிந்தி ருப்பார்கள்.
இன்னும், இன்னும் பல நாடுகளில், பல போர்களில் வெறு நாளிதழ் செய்தி களாக நாம் கடக்கும் ஒவ்வொரு இறப்பிற்கும் பின்னால் இப்படியான மரணத்தின் வலிகள் இருக்கின்றன.
சிரியாவில் கடந்த ஆறு ஆண்டு களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தற்போது நடந்தி ருக்கும் இந்த தாக்குதல், இட்லிப் மாகாண த்தின் கான் ஷெய்கோன் நகரில் நடந் துள்ளது.
சரியான மருத்துவ வசதிகள் இல்லாத தால், துருக்கி எல்லைக்கு வருகி றார்கள் பாதிக்கப் பட்டவர்கள்.
போர் என்றால் மக்கள் சாவத் தான் செய்வார்கள் என்று ஒரு தமிழக முதல்வரே கூட சொல்லி யிருக்கிறார். அறமற்ற அரசியல் வாதிகளின் பிடியில் சிக்கியி ருக்கும் சாதாரண மனிதர் களின் உயிர் போகத்தான்
செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை. போர் நடக்கும் பகுதியில் எளிய மக்களின் உயிர் விலை பூஜ்யம் என்பதும் யதார்த்தம் தான்.
ஆனால், குறைந்த பட்சம் அவர்களு க்கு இது போன்ற கொடூர மரணங் களையாவது தராமல் இருங்கள். கொல்லுங்கள்... கொஞ்சம் மென்மை யாக கொல்லு ங்கள்.