வாசுதேவ நல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரள -தமிழக எல்லை பகுதியில் திருவிதாங்கூர் மற்றும் சிவகிரி ஜமீன் ஆட்சி காலத்தில் செண்பக வல்லியாறு அணைக்கட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு 200 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது.
அதன்படி வாசுதேவ நல்லூர், சிவகிரி, சங்கரன் கோவில், மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் முதல் சாத்தூர் வரை
விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் தமிழக எல்லை பகுதியை நோக்கி கன்னியா மதகு அமைக்கப் பட்டது. இந்த மதகு கடந்த 1976ம் ஆண்டு கன மழையால் இடிந்து விழுந்தது.
அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதனை சீர்படுத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டு தமிழக அரசின் பங்கு தொகையாக ரூ.5 லட்சம் கேரள அரசிடம் ஒப்படைக்கப் பட்டது.
மதகு சீரமைப்பு பணியை இழுத் தடித்த கேரள அரசு 2006ம் ஆண்டு அப்பணியை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டது.
கன்னியா மதகு சீரமைக்கப் படாததால் நெல்லை, விருதுநகர் மாவட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின.
விவசாயம் அடியோடு அழிவதை தடுக்க கன்னியா மதகை சீரமைக்க கோரி தென்காசி எம்.பி லிங்கம், முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுத்தார்.
இந்நிலை யில் செண்பக வல்லி அணைக்கட்டு கன்னியா மதகு உடைப்பை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்ய லிங்கம் எம்பி அப்பகுதிக்கு சென்றார். அவருடன் 20 பேர் சென்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பாக புளியங்குடி வனச்சரக வனவர் முருகையா, வனக்காப்பாளர் அருள் தேவதாஸ், வேட்டை தடுப்பு காவலர்கள் ஜோசப், கருப்பசாமி, கிருஷ்ணன் ஆகியோரும் சென்றனர்.
வாசுதேவ நல்லூர் – மதுரை மெயின் ரோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை இருக்கிறது. இது நடந்தது 5வருடம் ஆகி விட்டது தமிழக
அரசு இது வரை எந்த விதமான நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை. இது மட்டும் நடந்து விட்டா திருநெல்வேலி. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வரை தண்ணீர்ககு பிரச்சினை வராது விவசாயம் செழிப்பாக நடைபெறும்.
எதற்காக இதனை ஒதுக்கி விட்டார்கள் எக்காரணம் என்று பத்திரிக்கை யாளர் தொலைக் காட்சி எதுவும் கண்டு கொள்ள வில்லை இதனை நாம் வெளிக் கொண்டு வரவேண்டும்.