வாட்ஸ்அப் செயலியின் வாயிலாக பெண்களின் புகைப்படங்கள் வாடிக்கை யாளர்களுக்கு அனுப்பி விபசாரம் செய்து வந்த 45 வயது தாராவை காசியாபாத் போலீசார் கைது செய்து உள்ளனர்.
போலீஸ் அதிகாரிகளின் தகவலின் படி சாலிமார் கார்டனில் உள்ள பிளாட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலை செய்து வந்து உள்ளார் என தெரிவிக் கப்பட்டு உள்ளது.
வாட்ஸ்அப்பில் குரூப் ஒன்றை தொடங்கி மூன்று வருடங்களாக அதன் வாயிலாக வாடிக்கை யாளர்களை சேர்த்து உள்ளார் எனவும் தெரிவிக் கப்பட்டு உள்ளது.
தாரா என்ற மஞ்சு அவருடைய ஆண் உதவியாளர் ராஜீவ் சைதியுடன் கைது செய்யப் பட்டார். அவர்களுடன் டெல்லி அசோக் விகார் பகுதியை சேர்ந்த இருவரும் சிக்கி உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,
விபசாரத்தில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தாராவை அடையாளம் கண்டனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி தாராதான் என விசாரணையில் தெரிய வந்ததும், தீவிரமாக கண்காணித்து வந்த போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தாரா பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது கண்டு பிடிக்கப் பட்டது என உள்ளூர் அதிகாரி அனுப் சிங் கூறி உள்ளார்.
வாட்ஸ்-அப்பில் டெல்லியை மூன்றாக பிரித்து வாடிக்கை யாளர்களுக்காக தனித்தனியாக மூன்று குரூப்பை உருவாக்கி தாரா இயக்கி வந்ததும் தெரியவந்து உள்ளது.
விசாரணை தொடர்பாக போலீசார் தாராவின் செல்போன் களையும் பறிமுதல் செய்து உள்ளனர். ஒவ்வொரு குரூப்பிலும் சுமார் 60 முதல் 100 வரையிலான வாடிக்கை யாளர்களை தாரா இணைத்து உள்ளார்
எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டு உள்ளது. இவ்விவகார த்தில் தொடர்புடைய மற்றவர் களையும் போலீஸ் தேடி வருகிறது.
8 வருடங்களாக விபசாரம் செய்து வந்த தாரா கடந்த மூன்று வருடங்களாக வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வந்து உள்ளார் என போலீஸ் விசாரணை யில் தெரியவந்து உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஷாமிலி சென்ற போது மார்ச் 4-ம் தேதி கடத்தப் பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உள்ளார். இதனை யடுத்து போலீசிடம் புகார் தெரிவிக்கப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.