மக்களை அதிர செய்யும் மெட்ரோ ரயில் பள்ளங்கள் !

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது ஏற்படும் திடீர் பள்ளங் களால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந் துள்ளனர். 
மக்களை அதிர செய்யும் மெட்ரோ ரயில் பள்ளங்கள் !
சென்னையில் பெருகி வரும் வாகனங்களையும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் இயக்குவதற்காக பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. 

இதனால் சுரங்க பணிகளில் இயந்திரங்கள் மூலம் சில சோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. 

அச்சமயம் சாலைக்கு உகந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படுவது வழக்கம். ஆனால் மக்களின் நன்மைக்கான இந்த மெட்ரோ ரயில் பணிகள் இப்போது பேராபத்தை விளை விக்கக் கூடியதாக மாறி விட்டது.

திடீர் பள்ளம்

மெட்ரோ பணிகள் மேற்கொள் ளப்பட்ட நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனை, எல்ஐசி, பாண்டி பஜார் என ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டன. 

இதனால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டதே தவிர யாரும் காயமடைய வில்லை.

அண்ணா மேம்பாலம்
இந்நிலையில் அண்ணா மேம்பாலம் அருகே சர்ச் பார்க் கான்வென்ட் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீர் பள்ளம் ஏற்பட்டது. 

அதிலிருந்து சிமென்ட் கலவை கொப்ப ளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடை ந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அண்ணா சாலை போக்கு வரத்து மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டது. சுமார் 4 மணி நேரத்துக்கு பின்னர் போக்கு வரத்து சீரமைக்கப் பட்டது. 

இந்நிலை யில் இந்த திடீர் பள்ளத் துக்கு மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் மேற்கொள் ளப்படுவது காரணமாக இருக்கலாம் என்பதால் அந்த துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மீண்டும் அதே இடத்தில்

இந்நிலையில் ஏற்கெனவே பள்ளம் ஏற்பட்ட இடத்தில் திடீரென மீண்டும் ஒரு பெரிய பள்ளம் இன்று ஏற்பட்டது. அண்ணா சதுக்கத்தி லிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து ஒன்று 
மக்களை அதிர செய்யும் மெட்ரோ ரயில் பள்ளங்கள் !
சர்ச் பார்க் கான்வென்ட் அருகே உள்ள பேருந்து நிலைய த்தில் நின்றது. அப்போது பேருந்து பள்ளத்தில் இறங்கு வதை உணர்ந்த டிரைவர் 

30-க்கும் மேற்பட்ட பயணிகளை பாது காப்பாக கீழே இறக்கி விட்ட நிலையில் 10 அடி ஆழத்தி லான பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

கார் முந்தியது

அப்போது பேருந்தை முந்தி சென்ற முயன்ற காரும் அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. எனினும் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். பின்னர் ராட்சத கிரேன் வரவழைக் கப்பட்டு காரும், பேருந்தும் அப்புறப் படுத்தப் பட்டது. 

இந்த சாலை மூடப்பட்டு விட்டது. நாளை மாலைக்குள் சாலை சீரமைக் கப்பட்டு பின்னர் வாகன பயன் பாட்டுக்கு திறந்து விடும் என்று தெரிகிறது.

அதிர்ச்சியில் மக்கள்
வழக்கத் துக்கு மாறாக 10 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டதால மக்கள் அச்சமடைந்  துள்ளனர். மண் இளகியதால் மண் சரிவு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்ட தாக தெரிவிக்கப் பட்ட போதிலும்

மக்கள் பீதிடயடைந் துள்ளனர். இதை நேரில் பார்த்த வர்கள் இன்னும் வாயடைத்து போய் நின்று ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings