பூமிக்கடியில் ஒரு இயற்கை ஃபிரிட்ஜ் - நெதர்லாந்து !

வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் சாதனங் களில் முக்கி யமானது குளிர் சாதனப் பெட்டி. இன்றைய கோடை கொளுத்தும் நிலையில் இதன் பங்கு மிக முக்கியமானது. 

பூமிக்கடியில் ஒரு இயற்கை ஃபிரிட்ஜ் - நெதர்லாந்து !
வீடுகளில் மட்டு மல்லாமல் பெரிய, பெரிய கடை களிலும் காய்கறிகள் கெட்டுப் போகாமல் இருக்கக் கடை முழுவதும் அறைகள் குளிரூட்டப் பட்டு காய்கறிகள் பாதுகா க்கப்படு கின்றன. 
ஆனால், குளிர் சாதனப் பெட்டியில் மொத்தம் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு கேடு தரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டு தான் இருக் கின்றனர். 

மேலும், 150 வாட்ஸ் திறனுடைய குளிர்சாதனப்பெட்டி தினமும் 12 மணிநேரம் இயங்கினால் மாதத்திற்கு 54 யூனிட் மின்சாரம் செலவாகும். 

மாதம் 100 யூனிட் மின்சாரம் இலவசம். இதில் குளிர்சாதனப்பெட்டிக்கு மட்டுமே பாதியளவு மின்சாரம் போய் விடும். 

மீதம் இருக்கும் மின்பொருளும் தங்கள் திறனுக் கேற்றவாறு மின்சாரத்தை உறிஞ்சும். 

தற்போது நெதர்லாந்தில் டச்சு மக்கள் செயற்கை குளிர் சாதனத்து க்கு மாற்று வழியாக பூமிக்கடியில் பாதாள குளிர் சாதனப் பெட்டி அமைத்து வீட்டு உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வருகின்றனர். 

இப்படி பூமிக்கடியில் அமைக்கப் படும் குளிர் சாதனப் பெட்டியானது மிகவும் குளிர்ச்சியானதாகவும், 

விலை மலிவான தாகவும் மற்றும் உணவுப் பொருட் களைத் தரமாக சேமிக்கவும் ஏற்ற வகையில் வடிவமை க்கப்பட் டுள்ளது.

போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?

இக்குளிர் சாதனப் பெட்டிக்கு மின்சார பயன்பாடு துளியும் தேவை யில்லை என்பது கூடுதல் தகவல். குளிர் சாதனப் பெட்டியில் அமைக்கப் பட்டுள்ள தண்ணீர் கொள்கலனில் தண்ணீர் நிரப்ப வேண்டும். 
அந்தத் தண்ணீரை மட்டுமே எடுத்துக் கொண்டே குளிர் சாதனப் பெட்டி முழுவதும் சீரான குளிரைக் கொடுத்து உணவுப் பொருட் களைச் சேமிக்கிறது. 

இதனால் எந்த வாயுவும் வெளிவரப் போவதில்லை, அதனால் இது சுற்றுப்புற சூழலுக்கு மிகவும் உகந்தது. 

மேலும், இதில் சேமிக்கப்படும் உணவினை மனிதர்கள் உண்பதால் உடலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. 

இந்த குளிர் சாதனப் பெட்டியில் 10 முதல் 12 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உணவுப் பொருட்களைப் பாதுகாக்க முடியும். 

மேலும், இந்த அமைப்பானது முற்றிலும் பூமிக் கடியில் இருக்கு மாறு அமைக்கப் பட்டும், பூமிக்குள் இருக்கும் வாயுக்களால் உணவுப் பொருட்களு க்கு எந்த பாதிப்பும் ஏற்படுவ தில்லை. 

இந்தக் குளிர் சாதனப் பெட்டியில் காய்கறிகள், பழங்கள் என அவற்றுடன் சேர்த்து மற்ற உணவுப் பொருட் களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள் ளலாம். 

பூமிக்கடியில் ஒரு இயற்கை ஃபிரிட்ஜ் - நெதர்லாந்து !
இந்த அமைப்பு அமைக்கும்போதே குளிர் சாதனப் பெட்டியை சுற்றிலும் பசுமையாக இருக்குமாறு செடிகள் வளர்ப்பது அவசியம்.

பூமிக்கடியில் அமைக்கப் பட்டிரு க்கும் குளிர்சாதன பெட்டியின் கொள்ளளவு, சாதாரண குளிர் சாதனப் பெட்டியைப் போல 20 மடங்கு அதிகமான கொள்ள ளவைக் கொண்டது. 

இந்த அமைப் பிற்குள் சாதாரண மாக ஒரு மனிதன் உள்ளே சென்று வரக்கூடிய வகையில் அமைக் கப்பட்டி ருக்கும். 

இதற்குள் காற்று புகாத, தண்ணீர் ஒரு சொட்டுகூட புகாத மற்றும் பூச்சிகள் புகாத வகையிலும் வடிவமை க்கப்பட்டி ருப்பது, 

வான்கோழி இறைச்சி பிரட்டல் செய்வது எப்படி?

இதன் மற்றொரு சிறப்பு. இக்குளிர் சாதனப் பெட்டியில் உள்ளே நிலவும் வெப்ப நிலை மற்றும் ஈரப்ப தத்தைக் கண்டறியும் வசதியும் உள்ளது. 

இதனுள்ளே ப்ளைவுட் மரப்பலகை களால் அலமாரிகள் செய்யப் பட்டுள்ளன. இதுபோக உள்ளே வெளிச் சத்துக்கு எல்இடி விளக்கு ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. 

பூமிக்கடியில் ஒரு இயற்கை ஃபிரிட்ஜ் - நெதர்லாந்து !
இந்த அமைப்பானது, நம் முன்னோர்கள் தானியங் களை சேமிக்கவும், மிதமான வெப்ப நிலையில் வைத்துப் பாதுகாக்கவும், பூமிக்குக் கீழே அறை ஒன்று தோண்டி அதில் சேமித்து வந்தனர். 

இந்த அமைப்பும் அதே வகையில் தான் வடிவமை க்கப்பட் டுள்ளது. ஆனால் ஒரே வித்தியாசம், தற்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ள சாதனம் குளிர்ச்சிக்கு மட்டும் தான். 

பட்டர் வான்கோழி மசாலா செய்வது எப்படி?

இந்த பாதாள குளிர் சாதனப் பெட்டியானது விஞ்ஞானத்தின் ஒருபடி மேலே போய் நோய்த் தாக்குதல் இல்லாமல் வாழவும் இது வழி செய்கிறது.

இதன் முக்கியமான நன்மை மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் என எந்த விதமான இயற்கை சூழ்நிலை களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதாள குளிர்சாதனப் பெட்டி அமைக்கப் பட்டுள்ளது. 

குளிர்சாதனப் பெட்டிக்குள் மேற்கண்ட வெப்ப நிலையை (10-12 டிகிரி செல்சியஸ்) மாற விடாமல் வைத்தி ருக்கும். 

அப்போது தான் உள்ளே வைத்தி ருக்கும் பழங்களும், காய்கறி களும் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்கும். 

பூமிக்கடியில் ஒரு இயற்கை ஃபிரிட்ஜ் - நெதர்லாந்து !
இந்தப் பாதாள குளிர் சாதனப் பெட்டியை அமைக்கும் போது மேற்புறம் ஒரு மீட்டர் உயரத்திற்கு இருக்குமாறு அமைத்தால் போதுமானது. 

இந்த குளிர் சாதனப் பெட்டி அமைப்பதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவை யில்லை. அதே போல இதனைப் புதைப்ப தற்கு தேர்ந் தெடுக்கும் இடம் புதிய இடமாக இருக்க வேண்டும். 

புலியோடு போராடி உயிர் பிழைத்த வீரர்... அதிர வைத்த சம்பவம் !

இது 3,000 லிட்டர் தண்ணீர் கொள்ள ளவைத் தாங்க கூடிய அளவு உருவம் கொண்ட தாக இருக்கும். 

இதில் 5 குடும்பங் களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 500 கிலோ உணவுவை சேமித்து வைக்க முடியும். 

இந்தக் குளிர்சாதன பெட்டியை பூமிக்கடி யில் அமைக்கும் போது அந்த இடம் குளிர்ச்சி யான இடமாகவும் இருக்க வேண்டும். இதன் மேற்புறம் லேமினேட் செய்யப் பட்ட தகடுகளால் அமைக்கப் பட்டுள்ளது. 
இதன் மொத்த எடை 300 கிலோ ஆகும். இதன் மேற்புறம் அமைக்கப் படும் கதவுகளை நம் விருப்பத் துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளலாம். 

சைவப் பிரியர்களுக்கு காக்டெயில் பிரியாணி செய்வது எப்படி?

ஆனால், வெயிலைச் சிதறடிக்கும் வெள்ளை நிறமே இதற்கு ஏற்றது. இவ்வாறு சுற்றுச் சூழலுக்கும், வீட்டிற்கும் நன்மை ஏற்படும் படி அமைக்கப் பட்டுள்ள தால் 

நெதர்லாந்து மட்டுமல்ல, மேலை நாடுகளிலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற ஆரம்பித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings