காற்றில் இருந்து தண்ணீர்... முழுக்க அறிவியல் !

சிவகாமி! சிவகாமி! தண்ணீரில் கண்டம் என்று கூறி விவேக் நடித்த நகைச்சுவைக் காட்சி நம் நினைவில் இருக்கும். தற்போது தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்களுக்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது...
தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிப்பதற்கும் தண்ணீர் கிடைப்ப தில்லை. 

குழாயைத் திறந்தால் வெறும் காற்று தான் வருகிறது; தண்ணீரைக் காணோம். காணாமல் போன கிணறு கூட கிடைத்து விடுகிறது. ஆனால் தண்ணீர் கிடைப்ப தில்லை.

ஒவ்வொரு நாளும் கிராமத்தில் உள்ள பெண்களும் குழந்தை களும் ஆறு மணி நேரம் தண்ணீரைச் சுமப்பதற் கென்றே செலவிடுவ தாக கூறப் படுகின்றது. 

என்ன தான் சுமந்தாலும் சுத்தி கரிக்கப்பட்ட நீரென்பது காண்பதற்கு அரிதான தாகி விட்டது. இந்த நிலைமை யால் ஒரு நாளில் உலகில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப் பதாகக் கூறப் படுகின்றது.
இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன? என்ற நம் வினாவுக்குத் தீர்வு கண்டு ள்ளனர் VICI Labs, UC Berkeley, And National peace corps association. 

சிவகாமி நம்மேல் இறக்கப் பட்டு இவர்கள் மூளையில் இப்படிப் பட்ட ஒரு தீர்வைக் கொடுத் துள்ளாள் போலும்.

உப்பு நீரைச் சுத்திக ரிக்கப் பட்ட நீராக மாற்றுவது என்பது ஒரு மதிப்பு மிக்க செயல் முறை என்று தான் கூற வேண்டும். 

ஒன்றில் மூன்று பங்கு மக்களுக்கு இந்த அணுகு முறை யில்லை. ஒன்றில் ஐந்து பங்கிலான மக்கள் தண்ணீர்ப் பற்றாக் குறையோடு தான் தங்களது வாழ்வை நகர்த்து கின்றனர். 
இந்த நிலையைத் தீர்க்கும் பொருட்டு அறிவியல் முறையில் அதாவது wind powered device என்று சொல்லக் கூடிய காற்று இயங்கு சாதனம் ஒன்றைக் கண்டறி ந்துள்ளனர். 

இந்த சாதனம் ஒரு நாளைக்கு 37 லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் வழங்கு மாம் நமக்கு.

இதற்குப் பெயர் water seer என்பது.அதாவது தண்ணீர் சீயர். இதனைப் பயன் படுத்தி அவரவர் தனது சுய தேவைக் கேற்ப பயன் படுத்திக் கொள்ள இயலும். 

இதனை நம் அறிஞர்கள் புரோட்டோ- டைப் முறைமை யில் ஏற்கனவே பரிசீலனை செய்து பார்த்து விட்டனர். மேலும் இதன் சமீபத்திய மாடல் ஒன்று 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இறுதி யாக்கப்பட் டுள்ளது.

சரி, இதை எப்படி செயல் முறைப் படுத்துவது?

இந்த சாதனம் நிலத்தி லிருந்து ஆறு அடிக்குக் கீழ் பொறுத்தப் பட வேண்டும். நிலத்தடி யில் அமைந் துள்ள மெட்டல் சைடுகள் மணலால் குளிர்ச்சி யாக்கப் படும். 
காற்று டர்பனைச் சுழற்சி செய்து அதிலுள்ள காற்றா டிகள் காற்றை ஒடுக்கிய அறை யினுள் (condensation chamber) செலுத்தும். 

அதனால் குளிர்ச்சி யான காற்றானது அந்த அறையையும் குளிர்ச்சி படுத்தி நீராவியைக் கெட்டி யாக்கி ரிசர்வாயரின் உள்ளே ஒழுகச் செய்யும். 

அந்த ரிசர்வாயரின் உள்ளே பொருத்தப் பட்டுள்ள பம்பு குழாயும் சுத்த மான மற்றும் பாதுகாப்பான நீரை வெளி யேற்றும். காற்று இல்லை என்றாலும் நம்மால் 24 மணி நேரமும் நீரை உறிஞ்ச முடியுமாம். 

அதற்கென்று மீண்டும் நாம் தண்ணீரை இஷ்ட த்திற்கு பயன் படுத்தி விடக் கூடாது. அளவுக்கு மீறினால் திறம்பவும் இதே கதி தான்.புரிஞ்சுதோ!

இது எல்லா சூழ்நிலை யிலும் செயல் படாது. 37 லிட்டர் எப்போதும் கிடைக் காது என இந்த முறையை குறை சொல்லியும் பல வீடியோக் களை பார்க்க முடிந்தது. 
ஆனால், இது நடக்கவே நடக்காத காரியம் என அவர்க ளாலும் சொல்ல முடிய வில்லை. நீரின் அளவு கூடும். குறையும் எனதான் சொல்கி றார்கள். 

விரைவில் இது உண்மை யாகி, பரவலாக பயன் பாட்டுக்கு வர வேண்டும். எல்லோரு க்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது தான் எல்லோரின் ஆசையும்.
Tags:
Privacy and cookie settings