என் பர்த் சர்ட்டி ஃபிகேட்டை போஸ்டர் அடிச்சு ஒட்டினா தான் எல்லாரும் நம்புவாங்க போல... என்னோட நிஜப் பேரே நட்சத்திராதாங்க.. நம்புங்கப்பா...”
அலறாத குறையாக பெயருக்கான ஃப்ளாஷ்பேக் சொல்கிறார் நட்சத்திரா. சன் மியூசிக்கின் முக்கிய முகம். நிகழ்ச்சித் தொகுப்பாளினி என்பது
மட்டும் நட்சத்திரா வின் அடையாளம் அல்ல. செம பிஸியாக குறும் படங்களிலும் நடித்துக் கொண்டி ருக்கிறார்.
நட்சத்திராவின் பயோடேட்டாவில் வேற என்ன வெல்லாம் இருக்கு?
`முதல்ல நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். ஸ்கூல்ல எல்லா புரொகிராம் லயும் முதல் ஆளா நிற்பேன். அப்புறம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சேன்.
எனக்கு செஃப் ஆகணும் ங்கிறது தான் கனவா இருந்தது. காலேஜ் படிச்சி ட்டிருந்த போது என் ஃப்ரெண்ட் ஒரு நியூஸ் சேனலுக்கு ஆடிஷனுக்குப் போகணும்.
ஆனா, கடைசி நிமிஷத்துல அவங்களால போக முடியலை. `நீதான் டான்ஸராச்சே... உனக்கு எக்ஸ் பிரஷன்ஸ் சூப்பரா வருது... நீ ட்ரை பண்ணேன்'னு சொன்னாங்க. போனேன்.
ஆடிஷன் முடிஞ்சுது. எதிர்பாராத விதமா அது வொர்க்அவுட் ஆகிடுச்சு. அது வரைக்கும் கேமரா முன்னாடி பேசின அனுபவமே கிடையாது. டக்குனு ஒரு ஷோ பண்ணச் சொன்னாங்க. பண்ணேன்.
புதுமுகம் மாதிரியே தெரியலை... நல்லா பண்றீங்க'னு நிறைய பேர் பாராட்டினாங்க. ஹாபியா ஆரம்பிச்சதை முழுநேர வேலையா பண்ணலாம் ங்கிற நம்பிக்கை யும், தைரியமும் வந்துடுச்சு.
அந்த தைரியம் தான் சன் டி.வி-க்குள் கொண்டு போய் விட்டது. சன் சிங்கர் ஷோ பண்ண ஆரம்பிச்சேன். இப்ப மூணாவது சீஸன் வரைக்கும் வந்தாச்சு...''
சன் சிங்கர் தொகுப்பாளினிக்குப் பாட வருமா?
சின்ன வயசுல என்னோட குரலை வெச்சு கலாய்க் காதவங்களே இல்லை. போன்ல நான் `ஹலோ' சொன்னா, பதிலுக்கு `சொல்லுடா'னு சொன்ன வங்க தான் அதிகம்.
அப்படியே பையன் பேசற மாதிரியே இருக்குன்னு எல்லோரும் கலாய்ப்பாங்க. பாட்டு கிளாசுக்கு அனுப்புங்க..
குரல் மாறும்'னு அம்மாகிட்ட பல பேர் சொல்ல என்னை பாட்டு கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க.
மணிக் கணக்கா ஒரே இடத்துல உட்கார்ந்து சங்கீதம் கத்துக்க எனக்குப் பொறுமையே இல்லை. பாதியிலேயே சங்கீதத்துக்கு பை பை சொல்லிட்டேன்.
ஆனால், சன் சிங்கர் ஷோவை பண்ண ஆரம்பிச்ச பிறகு, பாட்டை ரசிக்கிற பொறுமையும் ரசனையும் வந்திருக்கு.
எந்தக் குரலை வச்சு என்னை ஓட்டி னாங்களோ அந்தக் குரல்தான் இன்னிக்கு எனக்குப் பெரிய பிளஸ்ஸா மாறியிருக்கு.''
குறும்பட நடிகை டு சினிமாவா?
ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே குறும்படங்களில் நடிச்சிருக்கேன். காலேஜ் வந்த பிறகு, என் விஸ்காம் நண்பர்களோட குறும் படங்களு க்கு எல்லாம் நான்தான் மாடல்.
அப்புறம் போன வருஷம் `ஏனோ வானிலை மாறுதே', `இவள் அழகு'னு இரண்டு குறும் படங்கள்ல நடிச்சேன்.
ரெண்டுக்குமே எக்கச்சக்க வரவேற்பு. தொடர்ந்து நிறைய குறும்பட இயக்கு நர்கள் நடிக்கக் கேட்கிறாங்க.
என்னால் நோ சொல்ல முடியல. காரணம் அவங்க சொல்ற கதைகள். பயங்கர திறமை சாலிகளா இருக்காங்க.
என்னால் நோ சொல்ல முடியல. காரணம் அவங்க சொல்ற கதைகள். பயங்கர திறமை சாலிகளா இருக்காங்க.
அவங்க திறமை வெளியில தெரியறதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவியா இருக் கட்டுமே! அதான் தொடர்ந்து குறும் படங்களில் நடிக்கிறேன்.
படங்கள்ல நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, அந்த நடிப்பு எனக்கு வருமானு தெரியலை.
வாய்ப்பு வருதேனு ஓகே சொல்லிட்டு அவங் களைக் கஷ்டப் படுத்த நான் விரும்பலை.''
வாய்ப்பு வருதேனு ஓகே சொல்லிட்டு அவங் களைக் கஷ்டப் படுத்த நான் விரும்பலை.''
பொண்ணு செம ஷார்ப்பு!