நாடு முழுவதும் முத்தலாக் விவகாரம் அதிர் வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. தமிழ் ஊடகம் உட்பட தேசிய ஊடகங்கள் முத்த லாக்கை விவாத பொருளாக்கி யுள்ளது. ஷாபானு வழக்கை போன்று மீண்டும் ஓர் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.
முத்தலாக் என்றால் என்ன வென்று முதலில் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன் சொல்லக் கூடிய முத்தலாக் என்பது வேறு, தற்போது (சில) முஸ்லிம்களால் குர்ஆனுக்கு மாற்றமாக நடைமுறையில் பயன் படுத்தப் படும் முத்தலாக் என்பது வேறு....
குர்ஆனுக்கு எதிராக நடை முறையில் உள்ள முத்தலாக்கிற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
இதையே சாக்காக வைத்து தலாக் முறையையே ஒழித்து கட்டி ஷரியத் சட்டத் தில் கை வைக்க நினைக்கிறது பாஜக அரசு,
குர்ஆன் சொல்லக் கூடிய முத்தலாக் என்பது கணவன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினால் தலாக் சொல்லி விட்டு பிரிந்த பின் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் மீண்டும் இணைந்து வாழலாம்.
மீண்டும் பிரிய விரும்பினால் தலாக் சொல்லி விட்டு பிரிந்த பின் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் மீண்டும் இணைந்து வாழலாம்.
இது போல் மூன்றாவது முறை தலாக் சொல்லி விட்டால் மீண்டும் இணைந்து வாழ முடியாது. அதுவரை இணைந்து வாழலாம்.
இதுதான் குர்ஆன் சொல்லக் கூடிய முத்தலாக். இதனால் பெண்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு இல்லை, மாறாக நன்மையே இருக்கிறது. இது எந்த மதமும், சித்தாந்தமும் பெண்களுக்கு கொடுக்காத முக்கியத் துவத்தை இஸ்லாம் வழங்கி யுள்ளது.
ஆனால் நடை முறையில் முஸ்லிம்கள் மூன்று முறை சொல்லக் கூடிய தலாக்கை ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என்று மூன்று முறை சொல்லி முத்தலாக் என்று நிரந்தர மாக பிரிகின்றனர்.
இது குர்ஆனுக்கே முரணானது. இது பெண்களின் வாழ்வை பாதிக்கக் கூடிய அம்சமாகும்.
குர்ஆனுக்கு முரணாக உள்ள முத்தலா க்கிற்கு எதிராக தான் சில பெண்கள் நீதி மன்றத்தை நாடியுள்ளார்களே தவிர குர்ஆன் சொல்லக் கூடிய தலாக் முறைக்கு எதிராக அல்ல,
ஆனால் இதை வாய்ப்பாக பயன் படுத்தி தலாக் முறையையே ஒழித்து கட்டி இஸ்லாமி யர்களின் ஷரியத் சட்டத்தில் கை வைக்க நினைக்கிறது பாஜக அரசு.
Tags: