கடல் நீர் உப்புக் கரிப்பது அனை வருக்கும் தெரிந்தது. கடல் நீரில் உப்புக் கரைந் துள்ளது என்பதே இதன் பொருள்.
ஒரு காலம் கடல் நீரில் சுமாராக கால் பவுண்ட் உப்பு கரைந் துள்ளது. கடல் நீரில் 3 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை உப்பு உள்ளது.
பெரும் பான்மையான பக்கங் களில் நாடுகளால் சூழப்பட்ட மத்திய தரைக்கடல், செங்கடல் போன்ற கடல்களில் இருக்கும் உப்பின் அளவு, அவ்வாறு சூழப்படாத கடல் நீரில் இருக்கும் உப்பின் அளவை விட அதிகம்.
340 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கடலில் 1,160 கோடி டன் உப்பு உள்ளது. உலகில் உள்ள சமுத்திரங்கள் அனைத்தையும் வற்ற வைத்து,
அவற்றில் இருந்து உப்பை எடுத்தால் அந்த உப்பைக் கொண்டு 288 கிலோ மீட்டர் உயரமும் 1.6 கிலோ மீட்டர் கனமும் கொண்ட
உப்பு சுவரை நில நடுக்கோட்டின் வழியாக ஒரு சுற்று சுற்று வதற்கான துாரத்திற்கு அமைத்து விட முடியும்.
கடல் நீருக்கு இந்த உப்பு எங்கிருந்து கிடைக்கிறது?
பூமியின் நிலப் பரப்பில் பொதிந்துள்ள உப்பு மற்றும் தாது உப்புக் களை மழைநீர் ஆற்றுக்கு அடித்துச் செல்கிறது. ஆறு அவைகளை சமுத்தி ரத்திற்கு கொண்டு சேர்க்கிறது.
கடலில் உள்ள நீர் மாத்திரம் நீராவியாக மாறி காற்று மண்டல த்தில் கலந்து விடுகிறது. பின்பு மீண்டும் மழை யாகப் பொழிந்து விடுகிறது.
ஆனால் அதனுடன் சேர்ந்த உப்பு। அவ்விதம் ஆவி யாகாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இந்தச் சுழற்சி கோடிக் கணக்கான ஆண்டு களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் விளைவால் கடல் நீரில் இருக்கும் உப்பின் அளவு தொடர்ந்து அதிகரி த்துக் கொண்டே போகிறது. கடல்நீரில் அதிக அளவு உப்பு கிடைப்பதற்கு காரணம் இதுவே.
நாம் அன்றாடம் உபயோகி க்கும் சமையல் உப்பு கடல்நீரில் இருந்தோ, உப்பு தண்ணீர் ஏரிகளில் இருந்தோ தான் கிடைக் கிறது. பாறைகளில் இருந்தும் உப்பு எடுக்கப் படுகிறது.
கடல்நீரில் உப்பு மாத்திரம் இல்லாமல் இருந்தால் நமக்கு உப்பு போன்ற தேவை யான ஒரு பொருள் கிடைத் திருக்க முடியாது.