பூனே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 25 வயதான ரசிலா, ஜனவரி 29-ம் தேதி தன் அலுவலக கேபினில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரது கொலைக்கு காரண மானவர்களை உடனடியாக கண்டு பிடித்தது நாம் அறிந்ததே.
ஆனால் இறக்கும் முன் ரசிலா என்ன சொன்னார் என்பதை பற்றி முதல் முறையாக வாய் திறந்திருக்கிறார் ரசிலாவின் உறவினரான அஞ்சலி நந்தகுமார்.
இதோ ரசிலாவின் இறுதி உரையாடல்...
நான் இன்று சமர்ப்பிக்கும் வேலையைப் பொறுத்து தான், நான் பெங்களூருக்கு பணியிட மாற்றம் பெறுவதற்கான சாத்தியங்கள் நிறுவனத் திடமிருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் கிடைக்குமா என்பது தெரியும்,
என கூறிய சில நிமிடங்களிலே, 'என் அறைக்குள் யாரோ நுழைவது போல் தெரிகிறது. நான் சற்று நேரத்திற்குப் பின் அழைக்கிறேன், என்று அவசர அவசரமாக அலை பேசியைத் துண்டித் திருக்கிறார்.
இவை தான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள்!
அதன் பின், இரவு 8:30 மணி யளவில், கழுத்தை நெரித்து கொல்லப் பட்டு இருந்த அவரின் உயிரற்ற உடல் மட்டுமே அவரது பணியறையில் காணப் பட்டது.
மேலும், ரசிலாவுக்கு ஞாயிறுக்கிழமை அன்று அலுவலகத்தில் தனியாக வேலை செய்வதில் உடன் பாடில்லை.
அவரது மேலதி காரிக்கு, அவர் மீது இருக்கும் காழ்ப்புணர் ச்சியின் காரண மாகவே, தன்னை அதிக நேரம் வேலை வாங்கு வதாக தனது குடும்பத் தாரிடம் அவ்வப்போது புலம்பி இருக்கிறார்.
கொலையான ரசிலாவின் கடைசி நிமிடங்கள் போராட்டமாக கழிந்தது என்பதை நிருபிக்கும் விதமாக இருக்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.
’கொலையாளி அவரை ஏதோ ஒரு பொருளை வைத்து தாக்கி யிருக்கிறார். அவரது இடது தோள் பட்டையில் பல் கடித்த காயங்கள் இருக்கின்றன.
முகத்திலும் மார்பிலும் இருக்கும் காயங்களை பரிசோதித்ததில், அவர் கொலை யாளியுடன் மிகவும் போராடி இருக்கிறார்.
அப்போது அவர் கழுத்தை நெரிக்கப் பட்டு, வாய் மற்றும் மூக்கு வழியாக ரத்தம் சிதறி யிருக்கிறது" என்றிருக் கிறார்கள்.
இதில் மிகவும் வேதனை யான விஷயம் என்ன வென்றால், காவல் துறை அதிகாரிகள், கொலை நடந்த இடத்திற்கு, பரிசோதனை வல்லுநர்களை அழைத்து செல்லவும் இல்லை.
சாட்சியங்களுக்காக கொலை யாளியையும் பரிசோதிக்க விடவில்லை என்பது தான்.
கொலைக்கு அடுத்த நாள், சாய்கியா பாபின் என்ற காவலாளியை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர். ’நான் ரசிலாவை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்கு அவர் என்னை மிகவும் கடிந்துகொண்டார்.
அதனால் தான் கொன்றேன்’, என வாக்குமூலம் அளித்தி ருக்கிறார் பாபின். ஆனால், பணியிட த்தில், ரசிலா அவரால் மட்டுமே துன்புறத்தப் படவில்லை என்பதுதான் உண்மை!
மேலதிகாரி யின் காழ்ப்புணர்ச்சி...
என்னுடைய டீம் லஞ்ச் டயத்தில் கலந்து கொள்ள மறுத்து விட்டேன். அன்றி லிருத்து, என் மீது அதிகப் படியான வேலைப் பளுவை சுமத்தினார் என் மேலதிகாரி. நான் கேட்ட பணியிட மாற்றமும் நிலுவையில் இருக்கிறது.
அதற்கு நான் எனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வேலையை முடித்தாக வேண்டும் என்று தான் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன் அவர் தனது தந்தை ராஜூவிடம் வருந்தியிருக்கிறார்.
ரசிலாவின் சகோதரர் லய்ஜின் குமாரும் ரசிலா தன்னிடமும் இப்படிப் பட்ட வருத்தங் களை பகிர்ந்து கொண்டதை தற்போது தெரிவித்தி ருக்கிறார்.
சில வாரங் களுக்கு முன் தான், ரசிலாவுக்கும் அவரது மேலதி காரிக்கும், பணியிட மாற்றம் குறித்து வாக்கு வாதம் நடந்தாகவும் கூறுகிறார்.
அதற்கு அந்த மேலதிகாரி ரசிலாவிடம், ‘உனக்கு வெகுவிரைவில் பாடம் கற்பிக்கிறேன்’, என்று மிரட்டி யிருப்பதாக கூறுகிறார்.
மேலும், ரசிலா கொலை யானதையும் மிக தாமத மாகவே காவல்துறை தங்களுக்கு தகவல் தந்ததாக கூறியிருக்கிறார்.
ரசிலாவின் பதினாறாம் காரியம் முடிந்ததும் அவர் மேலதிகாரி மீது புகார் கொடுக்க எண்ணி யிருக்கிறார் களாம் அவர் குடும்பத்தினர்.