அ.தி.மு.கவின் இரண்டு அணிகள் இணைப்புக்குப் பிறகு பல்வேறு களேபரங்கள் நடக்க வாய்ப்பு ள்ளதாகவும், பன்னீர் தரப்பு பவருக்கு வரும் போது பலர் தங்கள் பவரை இழக்கப் போகிறார்கள்.
என்ற பேச்சு இப்போது அ.தி.மு.க இரண்டு அணிகளிலும் எழுந்துள்ளது. அ.தி.மு.கவின் இரண்டு அணிகள் இணைப்பு க்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகி விட்டது.
இரண்டு அணியிலும் குழுக்கள் அமைக்கப் பட உள்ளன. இரண்டு அணிகளின் குழுக்களும் தான் அணிகள் இணைந்த பிறகு கட்சி மற்றும் ஆட்சியில் யாருக்கு என்ன பொறுப்பு? என்பதை எல்லாம் முடிவு செய்ய உள்ளார்கள்.
பன்னீர் தரப்பில், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பது மட்டும் தான் தங்கள் அணியின் நிபந்தனை என்று சொல்லி யிருந்தனர். ஆனால், இந்த ஒரு நிபந்தனை மட்டுமே பன்னீர் அணியில் இல்லை என்கிறார்கள்.
அதே போல் பழனிசாமி அணியில், கட்சியின் நன்மை கருதி இணைந்து செயல் படுவோம் என்று சொன்னாலும் பன்னீர் அணியின் இணைப்பு க்குப் பிறகு
கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கு தரப்போகும் முக்கியதும் குறித்த ஐயமும் அமைச்சர் களிடம் உள்ளது. பன்னீர் செல்வம் இரண்டு மாதத்திலே கிட்டத் தட்ட ஒரு கட்சியின் தலைவர் போலவே
அவரது அணியினர் அவரை வெளிக் காட்டி விட்டார்கள். இரண்டு அணியும் இணையும் போது பன்னீர் செல்வத்துக்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் பன்னீர் தரப்பினர் குறியாக உள்ளார்கள்.
முதல்வர் பழனிசாமியோ பன்னீருக்குக் கீழ் தான் செயல் படுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தனக்கு நெருக்கமான வர்களிடம் சொல்லி யுள்ளார்.
ஆனால் அவரது ஆதரவு அமைச்சர்கள், 'அவசரபட வேண்டாம், முதல்வர் பதவியில் நீங்களே தொடருங்கள், பொதுச் செயலாளர் பதவியை பன்னீரிடம் கொடுத்து விடலாம்' என்று சொல்லி யுள்ளார்கள்.
ஆட்சியும் கட்சியும் வேறு வேறு நபரிடம் இருப்பது ஆபத்து என்கிற அச்சம் இரண்டு தரப்பிலும் உள்ளது.
எனவே பன்னீர் தலைமை யிலேயே ஆட்சியையும் கட்சியையும் ஒப்படை க்கலாம் என்று அமைச்சர்கள் சிலரிடமும் கருத்துகள் எழுந்துள்ளது.
அதே நேரம் பன்னீர் தரப்பில் ஏற்கெனவே அமைச்சராக இருந்து பாண்டிய ராஜனுக்கும், மேலும் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்ற டிமாண்டை வைக்க உள்ளார்கள்.
தங்கள் தரப்புக்கு அமைச்சர் பதவி கேட்பதோடு இல்லாமல், தற்போதைய அமைச் சரவையில் இனி யார் இருக்கக் கூடாது என்பதையும் பன்னீர் அணி முடிவு செய்துள்ளது.
தினகரனுக்கு தீவிர விசுவாசம் காட்டிய வர்களை தங்களது அமைச்ச ரவையில் வைத்துக் கொள்வதே ஆபத்து என்று பன்னீர் தரப்பு கருதுகிறது.
தினகரன் ஆதரவு அமைச்சர் களை பதவியில் நீடிக்கச் செய்வதில் முதல்வரு க்கும் நெருடல் உள்ளதாம்.
இதனால், அணிகள் இணையும் போது ஐந்து அமைச்சர்களுக்கு சிக்கல் வரலாம் என்கிறார்கள். உடுமலை ராதா கிருஷ்ணன், செல்லுார் ராஜீ, ஆர்.பி உதயக்குமார், கடம்பூர் ராஜீ, விஜயபாஸ்கர்
இந்த ஐவரையும் கழற்றி விடும் முடிவில் பன்னீர் தரப்பு உள்ளது. இதற்கு, முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்கிறார்கள். அமைச்சர் விஜய பாஸ்கரை அமைச் சரவையில் இருந்து நீக்க வேண்டும்
என்ற ஒற்றை கோரிக்கை யின் விளைவு தான் தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் கிளம்பி யதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது.
எனவே இனி அமைச்சரவை மாற்றத்தில் யாரும் பிடிவாதம் காட்ட மாட்டார்கள் என்று கருதுகிறது பன்னீர் தரப்பு.
இதன் விளைவு தான் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், திடீரென பன்னீருக்கு ஆதரவாக கருத்து சொல்லி யிருக்கிறார். அதே போல், செல்லுார் ராஜுவும் பன்னீர் மீது பரிவு காட்டி யுள்ளார்.
ஆனால், இந்த தீடீர் மாற்றங் களை எல்லாம் பன்னீர் தரப்பு அறியாமல் இல்லை. எனவே, உள்ளே - வெளியே ஆட்டத் துக்கான திட்டத்தை பன்னீர் தரப்பு இப்போதே வகுத்து விட்டார்கள்.
இரண்டு அணிகளின் குழுக்களும் பேச்சு வார்த்தை நடத்தபடும் போது அமைச்சரவை பட்டியலும் இறுதி செய்யபட உள்ளது.
இரண்டு அணி யினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைச்சரவை பட்டியல் தயார் செய்ய பட்டாலும், கழற்றி விடுபவர்கள் பட்டியலில் பன்னீர் தரப்பு கறார் காட்டும் என்றே தெரிகிறது.
'பன்னீர் கைக்கு பவர் போக வேண்டும் என்பதற் காக, டெல்லி தரப்பின் தடாலடி தான் அமைச்சர் களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பன்னீருடன் இணைவதை தவிற வேறு வழியில்லை என்ற நிலைக்கு அமைச்சர்கள் வந்தார்கள்'.
எனவே பன்னீர் செல்வம் கையில் பவர் செல்லும் போது தங்கள் பதவி தப்புமா? என்ற அச்சம் அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட் டுள்ளது.