ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்த இடத்தில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை யடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்ககப் பட்ட அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழக அரசின் ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்புவதற் கான தகுதித் தேர்வு நேற்று தொடங் கியது.
இடைநிலை ஆசிரியர் களுக்கான தேர்வு நேற்று நடந்த நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வு நடை பெற்று வருகிறது.
சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொண்டு எழுதும் இந்தத் தேர்வில் தேர்சி பெறுபவர் களைக் கொண்டு சுமார் 1000 ஆசிரியர் காலிப் பணியிட ங்கள் நிரப்பப்படும்.
இன்று காலை விழுப்புரம் இராம கிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த தேர்வு மையத்தில்,
விழுப்புரம் மாவட்டம் சின்ன எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண் திருமணம் முடிந்ததும் மணக் கோலத்திலேயே தகுதித் தேர்வில் கலந்து கொண்டார்.
அதேபோல விழுப்புரம் மாவட்டம் ரிஷி வந்தியத்ததை யடுத்த நூரோலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிரா ஜின் மனைவி நோயம் ரோஸ்மேரி (வயது 24), நிறைமாத கர்ப்பிணி யாக இருந்த நிலையிலும் தேர்வு எழுத வந்துள்ளார்.
அவர் தியாக துருகம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த தேர்வு மையத்தில் கலந்து கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதினார்.
தேர்வு தொடங்கிய 15 நிமிடத்தில் நோயம் ரோஸ்மேரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த தேர்வு மைய முதன்மை கண்காணி ப்பாளர் சசிகலா தேவி 108 ஆம்புல ன்ஸைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க, சிறிது நேரத்தில் அருகில் உள்ள சுகாதார மையத்துக்கு அவர் கொண்டு செல்லப் பட்டார்.
அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இத்தேர்வில் பார்வை யற்ற ஆசிரியர் களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு தேர்வெழுதினர்.